பக்கங்கள்

செவ்வாய், 19 மார்ச், 2013

தேவதூதனின்.... காதலன்....... (பாகம் 1 )


               பருவ தேர்வுகளுக்கான தொடர் விடுமுறை முடிந்து இன்றைக்குத்தான் கல்லூரி தொடங்க இருப்பதால் மாணவர்களில் சிலர் உற்சாகத்துடனும் சிலர் சோர்வுடனும் அணி அணியாக பேருந்து நிருத்தத்திலிருந்தும் விசையுந்து களிலும் கல்லூரிக்கு படை எடுத்து கொண்டு இருந்தனர். மயிலாடுதுறையில் பெயர் பெற்ற பொறியியல் கல்லூரி அது.
மயிலாடுதுறை என்பது காவிரி கரையோரம் அமைந்த எழில் கொஞ்சும் நகரமாகும் சுருக்கமாக மாயரம். சுற்றி உள்ள நான்கு முக்கிய நகரங்களான சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர் காரைக்கால் போன்ற வற்றிற்கு ஒரு சந்திப்பாகவே இந்நகரம் திகழ்கிறது. எனவே மேற்குறிப்பிட்ட நகரங்களிலிருந்தும் இன்னும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பல மாணவர்கள் இங்கு படிக்க வருகின்றனர்.
அவ்வகையில் நாம் மேலே பார்த்த கல்லூரி நகரின் முக்கிய சாலையில் 5 மைல் தொலைவில் அமைந்து உள்ளது. சரி வாருங்கள் கல்லூரி உள்ளே போவோம்.......
அதோ.....! 
       நுரை வழியும் காப்பி கோப்பை படம் போட்ட பலகை கேண்டீன் அங்கு உள்ளது என்று அறிவித்து கொண்டிருக்கிறதே......
அங்கு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு ஆடு திருட வந்தவன் போல முழிக்கிறானே அவன்தான் நம் கதையின் நாயகன் அகஸ்டின். தன் உயிர் நண்பன் சிலம்புவின் வருகைக்காக காத்திருக்கிறான். அகஸ்டின் கல்லூரியில் மெக்கானிகல் முதலாமாண்டை வெற்றி கரமாக முடித்து விட்டு இன்றுதான் இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்க போகிறான். முதலாமாண்டில் மிகவும் கட்டுபாடாக நடத்த பட்ட அவனும் அவன் சகாக்களும் இன்றுதான் தங்கள் சொந்த துறைக்கு செல்ல இருக்கின்றனர். அவன் சக வகுப்பு தோழர்கள் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தாலும் அகஸ்டீன் தன் உயிர் நண்பன் சிலம்புவிற்காக காத்திருக்கிறான்
ஏனெனில் இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை தான் தனியே அரங்கேற்றி விட்டாள் சிலம்பு கோபிப்பான் இருவருக்குள்ளும் அப்படி ஓரு நட்ப்பு.
 அகஸ்டின் காரைக்காலில் உள்ள கிறிஸ்த்தவ விடுதி ஒன்றில் சிறு குழந்தை முதல் இருந்து அங்கேயே பள்ளி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக தினமும் பேருந்தில் கல்லூரி வந்து செல்லுகிறான். அவனுக்கு பெற்றோர் என்று யாரும் இல்லை அவனுக்கு உறவென்று சொன்னால அந்த விடுதியும் அங்குள்ள நபர்களும்தான் இவன் படிப்பு செலவெல்லாம் அங்குள்ள ஒரு மடம் தான் ஏற்றுகொள்கிறது. அங்குள்ள நபர்களில் இவன் மிகவும் நெருக்கம் காட்டுவது ஆயர் அந்தோணி பல்தாசரிடமும் இங்குள்ளவர்களில் நண்பன் சிலம்புவும் தான். தன் அனைத்து சுக துக்கங்களையும் இவன் பரிமாறி கொள்வது சிலம்பு விடம் மட்டும் தான்.
முதல் நாள் என்பதால் கேண்டீனில் கூட்டம் அதிகமாக இல்லை ஒன்றிரண்டு சீனியர்கள் நின்று கேண்டீன் ஊழியர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். எல்லாரும் அகஸ்டினால் ஏற்கனவே சைட் அடிக்க பட்டவர்கள் தான் என்பதால் சலிப்புடன் செல்லை எடுத்து சிம்பு என்ற என்னை டயல் செய்து காதுக்கு கொடுத்தான். ஒரு ஐந்து ரிங் ஆனதும் எதிர்முனை சொல்லு மாமா என்றது.
              எங்கடா இருக்க எவ்ளோ நேரம் வைட் பண்றது....?
              ஹே இல்லடா பஸ் கொஞ்சம் லேட்டுடா இப்பதான் இறங்கி நடந்து வந்துட்டு இருக்கேன் நீ எங்கருக்க.?
  நான் நம்ம கேன்டீன் லதான் இருக்கன் சீக்கிரம் வாடா கடுப்பாகுது.
ஆமா....! அப்டியே கண்ண கட்டிக்கிட்டுதான உக்காந்திருக்க எவனையும் பாக்காம உனக்கு கடுப்பாகாதா பின்ன..?
வறது குள்ள உன் நக்கல ஆரம்பிச்சிட்டியா இங்க வழக்கமான மொக்க பசங்கதாண்ட நிக்கிறானுங்க. சீக்கிரம் வாடா.
என்று கூறி போனை பேன்ட் பாக்கெட்டுக்குள் திணித்தான். சிறிது நேரத்தில் வகுப்பு தொடங்கும் மணியோசை கேட்பதற்கும் சிலம்பு வருவதற்கும் சரியாக இருக்கவே இருவரும் வகுப்புக்கு சென்றனர். இரண்டாமாண்டில் அவர்கள் அமரபோகும் வகுப்பை அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தபடியால் நேரடியாக வகுப்பிற்கு சென்றனர்.
முதலாமாண்டில் 40 பேர் இருந்த வகுப்பு இன்று 70 பேருடன் அடைப்பாக காட்சி அளித்தது.
டேய் சிலம்பு என்னடா நம்ம கிளாஸ் தானடா மாறி வந்துட்டோமா இவ்ளோ பேர் இருக்கானுங்க...?
       எனக்கும் அதான்டா புரியல இரு... என்று உற்று கவனித்த சிலம்பு
       டேய் லேட்டரல் என்ட்ரி டா என்றான்.
அப்போதுதான் பல புது முகங்கள் இருப்பதை கண்டு ஆமோதித்த அகஸ்டீன் ஒரு மாதிரி புருவத்தை தூக்கி புன்னகையுடன் சிலம்புவை பார்த்தான். பின்னர் பழய வகுப்பில் தாங்கள் அமரும் அதே இடத்தை தேர்வு செய்து சென்று அமர்ந்தனர்.
முதல் நாள் என்பதால் லெக்ச்சரர் எல்லாம் சிலபஸ் எழுதுங்க என்று கையை ஒடித்தனர் ஆனால் அகஸ்டின் புதிய முகங்களில் பொலிவான முகம் எது என்று சோதித்து கொண்டிருந்தான். சிலம்புவோ கரும சிரத்தையாக எழுதி கொண்டிருந்தான். இதனால் அவனை படிப்பாளி என்று எண்ணாதீர்கள். நம்ம அகஸ்டின் தான் படிப்பில் படு சுட்டி.
மதிய உணவு இடைவேளையில் தன் வாழ்வையே மாற்றி அமைக்க போகும் ஒரு சம்பவம் நடக்க போவதை அறியாமல் கொஞ்சம் எழுத்து கொஞ்சம் வேடிக்கை என்று சலிப்புடன் பொழுதை போக்கினான் அகஸ்டீன்
மேற்படி மதிய உணவு இடைவேளை வருமுன் நாம் கொஞ்சம் அகஸ்டினின் லட்சியத்தை பற்றி பார்ப்போம்    
அகஸ்டின் ஒரு சில ஆண்களுடன் ஏற்கனவே உறவு வைத்திருந்தாலும் தன் மனசுக்கு பிடித்த ஒருவனை தேடி வருகிறான். அப்படி பட்ட ஒருவன் கிடைத்ததும் அவனுடன் மட்டுமே தன் உயிர் போகும் வரை உறவாடி உண்டு உறங்க வேண்டும் என்ற ஒரு தீவிர எண்ணம் அவன் மனதிற்குள் உண்டு இது சிலம்பு விற்கும் தெரியும்.  யாருமே உறவென்று சொல்ல இல்லாததால் தன்னையே உரிமை கொண்டாட ஒரு உறவை தேடி கொண்டிருகிறான் என்பதில் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்கிறது. சிலம்பு அகஸ்டினின் அந்தரங்கத்தை அறிந்திருந்தாலும் அவர்களுக்குள் எந்த உறவும் இல்லை ஏனெனில் சிலம்புவிற்கு ஒரு காதல் தனியாக ஓடுகிறது

       எதிர்பார்த்த லன்ச் “பெல் லும் ஒலிக்கவே மாணவர்களில் பாதிபேர் கல்லூரியின் வெளியே உள்ள கடைகளுக்கும் சிலர் கேண்டீனுக்கும் விரைந்தனர். அவர்களுடன் அகஸ்டினும் சிலம்புவும் கேண்டீன் நோக்கி நடந்து கொண்டே ஒவ்வொரு கட்டிடமாக தாண்டும் போது ஆங்கங்கே தயிர்சாதம்,புளிசாதம்,எலுமிச்சை, இட்லி பொடி என்று கலவையான வாசனை வீசிக்கொண்டு இருந்தது.
கேண்டீனில் ஒரே கூட்டமாக இருந்ததால் உணவை வாங்க சிலம்புவை அனுப்பி விட்டு கூட்டத்தை நோக்கி பார்த்து கொண்டு இருந்தான் அகஸ்டீன்
அப்போது..... யாழை மீட்டியத்தை போல் ஒரு இனிமையான குரல் எக்ஸ் கியுஸ் மீ என்று அகஸ்டீனை அழைத்தது. தொடர்ந்து ஒரு இனிமையான ஆண்மை கலந்த வாசமும் நெருங்க வீசவே உடனே திரும்பிய அகஸ்டீன் அப்படியே சொக்கி தான் போனான்.
தேவதூதன் ஒருவன் இறக்கைகளை கழட்டி விட்டு பேன்ட் ஷர்ட் அணிந்து வந்திருப்பான் போல என்று முதலில் எண்ணி எதுவும் பேசாமல் அவன் முகத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்
       அப்போது!!! இவன்தான்........ என் கனவோடு வருபவனோ......
என் மனதோடு வாழ்பவனோ.....
என் உயிரோடு கலந்தவனோ....
என் வயதோடு கரைந்தவனோ........ இவன்தான்........
என்று “காதல் பட பாடல் சரியாக ஒலித்தது. பாடலுக்கும் காட்சிக்கும் மிக அதிகமாக பொருந்தவே தன்னை மறந்த அகஸ்டீன்.
டேய் செல்ல.. சைலன்ட்ல போடுடா அறிவு கெட்ட முண்டம் என்று எவனோ எவனையோ அதட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டான்.
       மீண்டும் அந்த குரல் “எக்ஸ் கியுஸ்... மீ.... என்றது.
எ.. என்னங்க.......? என்று சுய நினைவிற்கு வந்த அகஸ்டீன் கேட்டான்
இந்த கேண்டீன்ல டோக்கன் சிஸ்டமா இல்ல சாப்ட்டு பணம் குடுக்கலாமா..........?
டோக்கன் சிஸ்டம் தாங்க அங்க கவுண்டர் ல போய் டோக்கன் வாங்கிக்குங்க.
ஓகே ங்க தேங்க்ஸ் என்று கூறி அவன் கவுண்டர் நோக்கி நகர்ந்தான் இப்போது அந்த வாசனை இன்னும் தூக்கலாக வீசியது.
அவனை பார்த்த படியே நின்று கொண்டிருந்தவனை இரண்டு தட்டுகளுடன் வந்த சிலம்பு  
டே என்னடா இப்படி நிக்கிற வா சாப்டலாம் என்று டேபிளுக்கு கூட்டி சென்றான் அங்கு சென்று அமர்ந்த பின் சிலம்புவிடம் பேசிய படியே சாப்பிட்டு கொண்டே அந்த புதியவனையும் பார்த்து கொண்டிருந்தான் அகஸ்டீன். அப்போது புதியவன் சாப்பாடு வாங்கி கொண்டு திரும்பவே அவன் முகத்தை பார்க்க இவனுக்கு ஒரு வெக்க உணர்வு வந்தது. தலையை குனிந்து கொண்டான்.
அப்பா... என்ன ஒரு அழகு அவன். . அடர்த்தியான புருவம்,அகலமான கண்கள்.,அளவான நிறம், பார்பவர்கள் வாயில் நீர் ஊற்றை உண்டாக்கும் இதழ்கள் நான்கு நாட்களுக்கு முன் இரைத்த கீரை விதை முளைத்ததை போன்ற அடர்த்தியான மீசை, தேக்கில் கடைந்தது போன்ற உருவம் அதிலும் அவன் போட்டுருக்க வாடாமல்லி கலர் சட்டை அவனுக்கு எவ்ளோ அழகா இருக்கு..........?
 ஆண்மைக்கும் அழகுக்கும் புது இலக்கணம் படைக்க வந்தவன் போல இருக்கானே.........!
 என்று நினைத்து கொண்டு அகஸ்டீன் நிமிர்ந்த போது அவன் யாரையோ தேடுகிறான் என்பதை அகஸ்டீன் உணர்ந்தான். ஒரு குழப்பதுடன் சுற்றி பார்த்த அவனுடைய கண்கள் அகஸ்டினின் மீது பார்வையை செலுத்தியதும் நிலைத்து நின்றது. பின்னர் அழகான ஒரு சிரிப்பை வெளியிட்டு விட்டு அவன் வேறு மேசைக்கு சென்று விட்டான். தொடர்ந்து அவன் தன செல்லை எடுத்து எதையோ அமுக்கி கொண்டு இருந்தான் சிக்னல் கிடைக்க வில்லை போலும். கையை உயர்த்தி நாலு பக்கமும் நீட்டி சிக்னல் கிடைக்கிறதா என்று பார்த்தான் பின்னர் சிறிது நேரம் தன அழகிய விரல்களால் கீ பேடை நீவிகொண்டிருந்தவன் திடீரென்று அகஸ்டீனை பார்க்கவே அகஸ்டீன் நிலை குலைந்து தலை கவிழ்ந்தான். பின்னர் அவன் ஏதோ ஒரு எண்னை டயல் செய்து காதுக்கு கொடுத்து பேச தொடங்கினான் இவன் பேசி முடிப்பதற்குள் இவனை பற்றிய ஒரு அறிமுகத்தை கொடுத்து விடுகிறேன்.
மேற்படி ஆள் தான் நம் நாயகனின் மனதை கவர்ந்து செல்ல தஞ்சையில் இருந்து வந்திருக்கும் வினய். கல்லூரியின் இன்ஸ்ட்ருமென்ட் பிரிவில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் இணைந்திருக்கிறான். மிகவும் வசதி படைத்த குடும்பத்தை சிறந்த வினய்க்கு தந்தை மட்டும் தான் உறவென்று சொல்லிக்கொள்ள இருக்கிறார். தாய் சிவலோக பிராப்தி அடைந்து ஒரு வருடம் ஆகிறது. டிப்ளமா முடித்ததும் தந்தைக்கு பிசினசில் உடந்தையாக இருக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். ஆனால் வினய் படிக்க வந்து விட்டான். மாயவரத்தில் தான் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறான். மாயவரம் அவனுக்கு புதியது. வந்து 2 நாள் தான் ஆகிறது.
இந்த மாயவரத்தை விட்டு அவன் போகும் போது அவன் வாழ்வில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதையோ, உயிர் போனாலும் கூடவே போக துடிக்கும் உறவொன்று அவனுக்கு கிடைக்க போவதயோ அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை
வினய் யை பார்த்து கொண்டு சாப்பிடாமல் அமர்ந்து இருக்கும் அகஸ்டீனை சிலம்பு வும் பார்க்க தவறவில்லை.
என்னடா ஆள் சூப்பரா இருக்கான் போல......?
ஆமாண்டா சிலம்பு எனக்கு அந்த பொம்ம வேணும்டா.
ஆள் பார்த்தா ஹை கிளாஸ் பிகர் மாதிரி இருக்கான் போல உனக்குலாம் மடிய மாட்டன் போல தெரியுதேடா.....?
ஏன்டா.....?  உன் வாயில வசம்ப வச்சி தேய்க்க.! இப்பதான் மனையே வாங்கிருக்கேன் அதுக்குள்ளே புல்டோசர தூக்கிட்டு வரியேடா வீட்டை இடிக்க.
எங்கடா வீடு கட்ட போற..?
ஹேய்ய் என்ன நக்கலா.....? என்று கோபித்த அகஸ்டீன் தொடர்ந்தான்
இல்லைடா சிம்பு அவன பாத்ததுமே முடிவு பண்ணிடண்டா எனக்கு இனிமேல் எல்லாம் அவந்தான்னு. அவன பார்த்ததும் என் இதயம் பறந்து போய் அவன் பாக்கெட்ல விழுந்துட்டுடா. எனக்கு அவன் கெடைப்பனாடா..........?
என்னடா இப்பதான் அவன பாத்த அதுக்குள்ளே என்னனமோ பேசுற......?
இல்லடா மாமா அவனோட கண்ணு என்ன நேருக்கு நேர் பார்த்தப்ப சொன்னுதுடா....
 நான் உனக்காகத்தான் வந்த்திருகேன்.!! என் அழகு நீ அனுபவிக்கத்தான்!!.
 என் தோள் நீ சாஞ்சிக்கதான்..!. என் விரல்கள் உன் தலைமுடிய கோதி விடத்தான்னு...
அடேங்கப்பா அதென்ன கண்ணா.....?  இல்ல ஆல் இந்தியா ரேடியோவாடா இம்மாஞ் சொல்லிருக்கு.....?
உனக்கு எப்ப பாத்தாலும் வெளையாட்டு தானாடா நான் சீரியஸ்ஸா பேசுறண்டா அவன் எனக்கு கிடைப்பனாடா
சரிடா முயற்சி திருவினையாக்கும். நீ ட்ரை பண்ணுடா உனக்கிருக்குற அழகுக்கு நீயும் அவனுக்கு ஒன்னும் கொறஞ்சவன் இல்ல.... நான் உனக்கு துணையா இருப்பண்டா.
தேங்க்ஸ்டா.
சரி அவன பாத்துகிட்டே இருக்க சொன்னா இருப்ப போல சீக்கிரம் சாப்ட்டு நடைய கட்டு.
ம்ம் இருடா அதான் பெல் அடிக்க டைம் இருக்குல்ல.?
ஏன்டா அகஸ்.... வந்ததுலர்ந்து போன் பேசிட்டே இருக்கானே யாரயாவது லவ் பண்ணுவானோ.......?
டேய் என்னடா சொல்லுற........
 உண்மையாவே பதறிதான் போனான் அகஸ்
ஏய்.! ஏய்..!! ஒரு பேச்சுக்குதான சொன்னான் அதுக்கு போய் இப்படி பதறுற.?..
என்று இவர்கள் பேசி கொண்டிருக்கும்போது வினய் சாப்பிட்டு எழுந்து அகஸ் சை ஒரு ரகசிய பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான். ஆனால் இதை அகஸ் உம் சிம்பு வும் பார்க்க தவற வில்லை.
டேய் அகஸ் அவனும் உன்னைய பாக்குறான் போலயேடா..?
ஆமாண்டா நாந்தான் சொன்னேன்ல்ல அவன் எனக்காகத்தான் வந்திருக்கான்னு
தனிமையில் வாடுற என்னை சந்தோஷ படுத்ததாண்டா கர்த்தர் அவனை அனுப்பிருக்கார்..   என்று கூறிய அகஸ்டீனை
சரி சரி விட்டா இன்னும் பேசிட்டே இருப்ப போல....!!? என்று சொல்லி அகஸ் ஐ வகுப்பிற்கு கூட்டி சென்றான் சிலம்பு
அன்றைய மதிய வகுப்புகளும் தொடங்கியது.
வகுப்பில் பாதி பேருக்கு தூக்கத்தில் கரைந்து கொண்டிருந்த அந்த மதிய நேர வகுப்புகள் அகஸ்டீனுக்கு மட்டும் பலவித நினைவுகளுடன் கழிந்தது கொண்டு இருந்தது.
அவன் பெயர் என்னவா இருக்கும்....?
நான் ஏன் இப்படி அவனையே நெனச்சிட்டு உக்காந்துருக்கேன்
அவன் ஏன் என்ன அப்படி பார்த்தான் ஒருவேளை அவனும் நம்மள மாதிரி தானா...
ச்சே.... அப்டிலாம் இருக்காது வீனா கற்பனை பண்ணிக்கிட்டு அப்புறம் ஏமாந்து போகாத
ஏன் அப்டி இருந்தா என்ன நமக்கு தான நல்லது. அவன் அப்டி இருந்தாலும் இல்லனாலும் அவன் எனக்கு தான்..
அவனை நான் அடையாம விடமாட்டேன்.
 ஏசுவே..!!!  இதுக்கு நீங்கதான் துணையா இருக்கணும்...! அவனை எனக்கு எப்படியாவது கொடுத்திடுங்க என்று கையை உயர்த்தி தன்னை மறந்து ஜெபித்தான்
ஒரே சத்தமாக சிரிப்பலை எழவே அப்போதுதான் தான் வகுப்பில் இருப்பதை சுதாரித்தான் அகஸ்டீன்
. ஹல்லொவ் வாட் ஆர் யூ டூயிங் என்றார் லெக்சரர்.
இல்ல சார் ஒண்ணுமில்ல என்று அசடு வழிந்து அமர்ந்தான் அகஸ்டீன்.
ஒரு வழியாக அன்றைய வகுப்புகள் முடிந்து சிலம்புவும் அகஸ்டினும் பேசிகிட்டே நடந்து கொண்டிருந்தனர்
என்னடா அகஸ் இன்னைக்கு வேலைக்கு போறியா இல்லையா....?
ஆமாம்டா போகணும். என்று பேசி கொண்டே பேருந்து நிறுத்தத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்
என்ன வேலை என்று நீங்கள் குழம்புவது புரிகிறது.
என்னதான் படிப்பு செலவை மடம் ஏற்று கொண்டாலும் இதர செலவுகளுக்கு தேவையான பணத்தை பகுதி நேரமாக ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து சம்பாதிக்கிறான் அகஸ்டீன். அந்த பங்க் மாயவரத்தில்தான் இருக்கு தினமும் கல்லூரி முடிந்ததும் அங்கு சென்று இரவு 10.30 வரை வேலை பார்த்து விட்டு கடைசி பேருந்தில் காரைக்கால் சென்று மறுநாள் காலை கிளம்பி கல்லூரிக்கு வந்து விடுவான். விடுமுறை நாட்கள் எனில் முழு நாளும் வேலை பார்ப்பான் ஆனால் ஞாயிற்று கிழமை மட்டும் வரமாட்டான் ஏனெனில் அன்று தேவாலயத்திற்கு சென்று விடுவான். அகஸ்டீன் இனிய குரல் வளத்துடன் அழகாக பாட்டு பாடும் திறமையும் பெற்றிருந்ததால் தேவாலயத்தின் கொயர் குழுவில் அகஸ்டீனுக்கு தனி இடம் உண்டு.
அப்படியே பேசிக்கொண்டே நடந்து இருவரும் நகர பேருந்து ஒன்றில் ஏறி மயிலை நோக்கி பயணமானார்கள்.அப்ப அப்ப சிலம்புவின் பேச்சுகளுக்கு காது கொடுத்தாலும் அகஸ்டீன் நினைவெல்லாம் வினய் மீதுதான் இருந்தது. பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் போதும் இதே நிலைமைதான். ஒரு வழியாக அன்றைய நாளின் அலைச்சலை எல்லாம் முடித்து படுக்கையில் விழுந்தும் அகஸ்டீனை வினய் யின் நினைவுகள் தூங்க விடாமல் புரட்டி எடுக்கவே ஒரு வழியாக தூங்கி போனான்.
மறுநாள் காலையிலிருந்து மதியம் வரை சிலம்பு வின் பாடுதான் திண்டாட்டமாக போய்விட்டது.
டேய் சிலம்பு இன்னைக்கு மதியம் அவன் கேண்டீன் வருவானாடா....
எனக்கெப்படிடா தெரியும் நேத்து வந்தான் ல இன்னைக்கும் வருவான்.
ஒருவேள இன்னைக்கு வீட்லருந்து சாப்பாடு கொண்டு வந்திருந்தான்னா........?
என்ன கிளாஸ்லயே உக்காந்து சாப்ட்டு அவன் லவ் பண்ற ஆளுகிட்ட கல்லைய போட்டு கிட்டு இருப்பான்.
என்னடா சொல்ற அவன் யாரடா லவ் பண்றான் அவன் எந்த கிளாஸ்டா.
இப்ப ஒருத்தன் ஓத வாங்க போறான் பாரு. ஏன்டா காலைலேர்ந்து இதே கேள்விய எத்தன தடவ கேப்ப.? எனக்கு எப்படிடா தெரியும் வேனும்னா மதியம் அவன்ட்டயே விசாரிச்சு சொல்றன்.
அப்ப மதியம் வருவானடா...?
ஐயோ மறுபடியும் மொதலேர்ந்தா.... என்று கதறிய படி இரண்டு பெஞ்ச் தள்ளி போய் அமர்ந்தான் சிலம்பு.
எதிர்பார்த்த லஞ்ச் பெல்லும் ஒலிக்க வே சிலம்புவை கூட மறந்து விட்டு முதல் ஆளாக கேண்டீனுக்கு ஓடினான் அகஸ்டீன்.
ஆனால் அங்கு இப்போதுதான் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர்
அகஸ்டீன் வழிமேல் விழி வைத்து காத்திருந்தான் அவனது வருகைக்காக
பின்னாடியே ஓடி வந்த சிலம்பு....
ஐயயோ!!.. இந்த பயலுக்கு பைத்தியம் புடிச்சுடும் போலேயே!!!
 என்று அவன் காதுக்கு அருகே வந்து சொல்லிவிட்டு சாப்பாடு வாங்க போய்ட்டான்.
அவனை முறைத்து பார்த்து விட்டு மீண்டும் வழியை பார்க்க தொடங்கினான் அகஸ்டீன்
ஆனால் அவன் எதிர்பார்த்த வினய் தான் இன்னும் வரவில்லை
சாப்பாடும் வந்தது சிலம்புவும் ஏதேதோ கிண்டல் அடித்து கொண்டிருந்தான் வழியை பார்த்து கொண்டே சாப்பிட்டும் முடித்தான் அகஸ்டீன். வகுப்பு தொடங்கும் மணியோசையும் கேட்டது ஆனால் கடைசி வரை வினய் வரவே இல்லை.
என்னடா அகஸ்டீன் மொத நாளே செம பல்பு போல என்று ஓட்டினான் சிலம்பு
பின்னர் அழாத குறையாக நின்ற அகஸ்டீனை பார்த்து
ஹேய்.!!  என்னடா உண்மையாவே பீல் பன்றியாடா.?
 என்று முகத்தை சுருக்கி கேட்டான்.
என்ன சிலம்பு நான் அவன எப்ப பாத்தனோ அப்பவே என் மனச அவன்ட்ட குடுத்துட்டண்டா நீயே இப்படி புரிஞ்சிக்காம பேசுறியே.
சாரிடா நான் ஏதோ வெளையாட்டுக்கு சொல்லிடண்டா ஒன்னும் வருத்த படாத நாளைக்கு காலைல அவன பத்தி முழு விவரமும் உனக்கு நான் கலெக்ட் பண்ணி தறேன்டா... என்றான்
ஆனால் இன்று வினய் வராத காரணம் அவனுக்கு ஒரு முக்கியாமான வியாதி வந்திருப்பதால் தான் என்பதை அவர்கள் இருவரும் அறிய இன்னும் வெகு நாட்கள் ஆகும் ஆனால் நாம் இப்போதே தெரிந்தது கொள்ள வேண்டுமே..... அப்படியானால் வாருங்கள் நாம் நேற்றிரவிற்கு மீண்டும் செல்லவேண்டும்.
ஆம் அதற்கு பெயர் தான் காதல்.தஞ்சையில் இருந்து மயிலை வரபோகிறோம் என்றதும் பிளநெட்ரோமியோ வில் ஹாய் myld tmrow I ill be thir with place  pls ping me with ur pics. என்று வருகையாளர் பதிவு செய்தவனை மதியம் கேண்டீனில் பார்த்த அகஸ்டினின் முகம் அசர அடித்து விட்டது. அகஸ்டீன் முகத்தை நேருக்கு நேர் பார்த்ததும் ஆட்டின் கல்லீரல் சுவற்றில் ஒட்டி கொள்வதை போல வினய் யின் இதயம் கல்லீரலாய் மாறி அகஸ்டீன் எனும் சுவற்றின் மீது போய் ஒட்டிக்கொண்டு விட்டது. வினய்க்கும் அகஸ்டீனை பார்த்ததிலிருந்து அவன் நாபகம் தான். நேற்று கல்லூரி முடிந்து வாடகைக்கு குடி இருக்கும் வீட்டின் மாடி பகுதியில் ஏறி கொண்டிருக்கும் போது ஏதோ நினைவு வந்தவனாக மொபைலை எடுத்து எதையோ பார்த்த வாறே மேலே ஏறிக்கொண்டு இருந்தான். படாரென்று கால் இடறவே “வின் என்றொரு வலி ஏற்பட்டது. உடனே சுதாரித்த வினய் மொபைலை பாக்கெட் உள்ளே வைத்து விட்டு குனிந்து காலை நீவினான்.
ஸ்ஸ்ஸ்..... அப்பாடா......  இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளே இவ்ளோ வலிய குடுக்குறானே.....  என்று மனதில் நினைத்து கொண்டே காலை தேய்த்தான்.
பின்னர் கதவை திறந்து உள்ளே நுழைந்து சுளுக்கிற்கு போடும் மருந்தை எடுத்து கட்டிலில் அமர்ந்து கொண்டு காலில் தடவினான். இருந்தாலும் வலி குறைந்த மாதிரி தெரிய வில்லை. பின்னர் மொபைலை எடுத்து ஏதோ ஒரு எண்னுக்கு தொடர்பு கொண்டான்
ஹலோ ரதிமீனா பர்சல்சா..?
.......
என் பேர் வினய் ங்க நாளைக்கு காலைல தஞ்சாவூர் லருந்து பைக் ஒன்னு அனுப்பனும் சாயந்தரமா எடுத்துக்கலாமா...
..........
ஓகே ங்க ரொம்ப தேங்க்ஸ். என்று துண்டித்தான்.
பின்னர் அப்படியே கையை நீட்டி சோம்பல் முறித்தான், அப்போ கண் முன் அகஸ்டினின் முகம் தோன்றியது.
ஆஹா எவ்ளோ அழகான முகம். எவ்ளோ ஸ்வீட்டான வாய்ஸ். என்ன பார்க்கும் போது அந்த அழகான கண்கள் ல ஒரு ஏக்கம் இருந்ததே......!!!!!
 அது என்ன நினைத்து அப்படி ஏங்கிருக்கும்?.
என்னை நினைத்தா?
அதுக்கு சான்ஸ் இருக்குமா. அவன் எனக்கு கெடைப்பானா..?
எத்தனையோ ஆண்களை எளிதில் தன் வசபடுத்திய வினய் அகஸ்டீன் விஷயத்தில் இப்படி தவிப்பது கொஞ்சம் ஆச்சர்யம் தான். நேற்று வரை இப்படி ஒருவன் இருக்கிறான் என்பதே இவர்கள் இருவருக்கும் தெரியாது ஆனால் இன்றோ இருவரும் ஒரே கேள்வியை மனதுக்குள் கேட்டு கொள்கின்றனர். இது ஒன்றும் ஆச்சர்ய பட வேண்டிய விஷயம் அல்ல. காதலெனும் வியாதியில் சிக்குண்டு கடவுளர்களே தவித்த இந்நாட்டில் இவர்கள் இருவரும் எம்மாத்திரம்.  
பின்னர் கொஞ்ச நேரம் டிவி பார்த்து கொண்டிருந்த வினய் இரவு உணவை கடையில் சாப்பிட்டு விட்டு ரூமிற்கு வந்தான் காலில் ஏற்பட்ட சுளுக்கு மிகுந்த வேதனையை அளித்து கொண்டிருந்தது. அப்படியே பெட்டில் படுத்து கொண்டே மொபைலை எடுத்து எதயோ பார்த்தவன் பின்னர் மீண்டும் அகஸ்டீனை நினைத்து கொண்டே உறங்கி போனான்.
 அந்த நினைவுதான் இப்போது வினய் யின் வலிக்கு மருந்து.
மறுநாள் காலை எழும் போது நேற்றைய சுளுக்கு வலி கொஞ்சம் மிகுந்து காணப்பட்டது. இன்று மதியம் பைக் எடுக்கும் வேலை இருப்பதால் கல்லூரிக்கு அரை நாள் விடுப்பு எடுக்கலாம் என்று இருந்த அவனை அந்த வலி முழு நாளும் மட்டம் போட வைத்தது.இருந்தாலும் இவனுக்கு அது பெரிய ஏமாற்றம் தான் ஏனென்றால் அகஸ்டீனை பார்த்து இன்று எதாவது பேச வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தான். பேருந்தில் செல்ல வேண்டி இருப்பதால் தான் அவனுக்கு இந்த விடுப்பு அவசியமாகிறது..
 பின்னர் மொபைலை எடுத்து “டாட் என்று சேமிக்க பட்ட எண்னுக்கு அழைத்தான்
ஹலோவ் டாட் எப்படி இருக்கீங்க.......?
நல்லாருக்கண்டா...! நேத்து மொத நாள் காலேஜ் எப்டி இருந்தது....?
 ம் பரவால்லப்பா. நல்லாத்தான் இருந்துது., பைக் அனுப்ப சொன்னனே இன்னைக்கு அனுப்பிடுறிங்களா....?
ஆமாண்டா... இன்னைக்கு பத்து மணிக்கு லாம்  அனுபிடுறேன்டா சாயந்தரம் எடுத்துக்க.
 ஓகே டாட் பாய். ஹேவ் ய குட் டே. என்று அழைப்பை துண்டித்தான்.
மேற்படி சம்பவம்தான் அகஸ்டீனை கேண்டீனில் ஏமாற வைத்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை
 அன்று மாலை கல்லூரி முடிந்து பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தவனை சக ஊழியர்களில் ஒருவனான முருகன் விசாரித்தான்...
ஏன்டா ஒரு மாதிரி இருக்க...?
அதுலாம் ஒன்னும் இல்லடா..
இல்ல எப்போதும் கல கல னு இருப்ப இன்னைக்கு வாட்டமா இருக்கியே என்ன விஷயம்.?
அதுலாம் இல்லடா.. லேசா தலைய வலிக்குது அதான்  என்றான்.
ஏன்டா உடம்புக்கு முடியலனா சொல்லிட்டு கெளம்பேண்டா...
வேணாம்டா ரொம்ப இல்லடா லைட்டா தான் இருக்கு. என்றான் அகஸ்டீன்.
 பின்னர் இருவரும்  
டேய் அங்க என்னடா மாநாடு கஸ்டமர் வந்து நிக்கிறது தெரிலயா என்று ஒரமாக போன் பேசி கொண்டிருந்த ஒவ்னர் அதட்டவே ஓடி சென்று அந்த கஸ்டமரை கவனித்தனர்.
முருகன் நூறு ரூபாய்க்கு பெட்ரோலை நிரப்பியவுடன் கேஷ் பேக்கை வைத்திருந்த அகஸ்டீனிடம் வந்தவர் ஒரு ஆயிரம் ருபாய் தாளை நீட்டினார்.
என்னனே சில்ற இல்லையா.?
இல்ல தம்பி..! என்று கெஞ்சும் குரலில் கூறினார்.
 சரி இருங்கண்ணே போய் அண்ணன்ட்ட வாங்கிட்டு வரேன் என்று கூறி பலவித எஞ்சின் ஆயில்கள் அடுக்கி வைக்க பட்டிருந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்தான்
அவன் சில்லறைக்காக தான் உள்ளே போகிறான் என்று உணர்ந்த முதலாளி யும் போனில் பேசி கொண்டே உள்ளே சென்றார்.
அண்ணே ஆயிரத்துக்கு சில்லற வேணும் என்றான் அகஸ்டீன்.
பணத்தை வாங்கிய அவர் பர்சில் வைத்து விட்டு போனில் தொடர்ந்தார்.
அப்போது எதேச்சையாக வெளியே பார்த்த அகஸ்டீனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் வெளியே வினய் தன் பைக்கிற்கு பெட்ரோல் போட வந்திருந்தான்.
ஆஹா.....!!!! என்று சத்தமாய் சொல்லிகொண்டே  அகஸ்டீன் வெளியே செல்ல முயற்சித்தான்...
 டேய் எங்கடா போற சில்லற வேணாமா என்று அதட்டினர் ஒவ்னர்.
அய்யயோ இவன் தடவி தடவி காச எடுக்கறதுகுள்ள அவன் போய்டுவான் போலேயே என்னடா பண்றது என்று கையை பிசைந்து கொண்டே வெளியில் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்
இப்போது வினய் யின் வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப பட்டு கொண்டிருந்தது
அண்ணா..... கொஞ்சம் சீக்கிரம் தாங்கண்ணா என்று கெஞ்சினான் அகஸ்
வழக்கத்திற்கு மாறாக இரண்டிற்கு மூன்று முறை அவர் பணத்தை எண்ணி தாமத படுத்தினார்.
இப்போது வினய் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தான்
அகஸ்டீனுக்கு உயிரே போவது போல இருந்தது
ஒரு வழியாக பணத்தை வாங்கி கொண்டு கதவை திறக்கவும் வினையின் வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.
ஆனால் அவன் எதிபார்க்காத விதமாய் வினய்யின் வண்டி சட்டென்று அப்படியே நின்று விட்டது.
அப்பாடா நின்னுட்டான்.!!! சரி இவ்ளோ வேகமா போறமே அவனுக்கு நம்மள தெரியுமா.... நாபகம் வச்சிருப்பானா...? அவனுக்கு தெரிலனா போய் என்ன பண்ண போற...... என்ற சிந்தனை அகஸ்டினின் மனதில் கன நேரத்தில் தோன்றி மறைந்தது.
அதற்குள் அகஸ்டீன் வினய்யின் அருகில் சென்று சற்றே சத்தமாக
அண்ணே.... இந்தாங்க மீதி பணம் என்றவாறே வினய் யை பார்த்தான்.
சத்தம் கேட்டு திரும்பிய வினய்யின் முகத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி படருவதை அகஸ்டினும் கவனிக்க தவற வில்லை..
சட்டென்று முகத்தில் பரவிய குழப்பத்துடன் வண்டியை உதைப்பதை நிறுத்தி விட்டு இறங்கி விட்டன அகஸ்டீன்.
உங்கள நேத்து காலேஜ் ல பாத்த மாதிரி இருக்கே....?
நேத்து ஒரு தடவ அதுவும் முதல் தடவை பார்த்த ஒருவனை இவ்வளவு சரியாக அடையாளம் கேட்கிறானே என்ற எண்ணம் அகஸ்டீனை ஆனந்தத்தில் திக்கு முக்காட வைத்து விட்டது. வினய் யின் முகத்தை பார்த்து கொண்டே நின்றான்
ஏங்க உங்களைதான் காதுல விழுதா இல்லையா....
எ... என்னங்க... என்ன கேட்டிங்க....?
ம்க்கும்.... சரிதான்.....!!! நேத்து உங்கள காலேஜ் ல பாத்தனே இப்ப இங்க நிக்கிறீங்க அதான் கேட்டன்..
ஆமாங்க இங்க பார்ட் டைமா வேலை பாக்குறன்.
ஓஹோ அப்படியா,,? என்னங்க படிக்கிறிங்க.?
மெகானிகல் செகண்ட் ங்க.....
பார்டா நானும் செகண்ட் தாங்க ஆனா இன்ஸ்ட்ருமென்ட் நேத்துதான் ஜாயின்ட்பண்ணன். என் பேர் வினய் ங்க.......
வினய்!! ஆகா..... என்ன ஒரு அழகான பேர். வினய் என்ற வார்த்தை அகஸ்டீன் காத்துகளில் வீணையின் நாதம் போல கேட்டது.
அவன் இருக்கும் இருப்புக்கு அவன் பெயர் மாடசாமி என்று இருந்தாலும் அகஸ்டீன் காதில் வீணை தான் வாசித்திருக்கும்.
உங்க பேர் என்னங்க... ?
அகஸ்டீன்..
ஒஹ் கிறிஸ்டியனா......?
ஆமாங்க.....
ஓகே ங்க நாளைக்கு பாக்கலாம் நான் கெளம்புரங்க
என்ன இவன் நாமளே வழிய பேசறோம் ஒரு வார்த்த கூட பேச மாட்ரானே என்று யோசித்த வினய் அகஸ்டினின் முகம் மாறுவதை இப்போது கவனித்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
ச்சீ... நீலாம் ஒரு மனுசனா லட்டு மாதிரி வந்து நிக்கிறான் நழுவ விட்டுட்டியே அட்லீஸ்ட் நம்பராவது வாங்கிருக்கலாம் என்று தன்னை தானே நொந்து கொண்டே திரும்பி வேலையில் கவனம் செலுத்தினான்
சற்று நேரத்தில் மீண்டும் பின்னாலிருந்து வினய்யின் குரல் கேட்டது.
ஏங்க உங்க நம்பர் தரிங்களா இந்த ஊர்ல யாரையும் தெரில கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும்.
சந்தோசம் தாங்க முடியாத அகஸ்டீன் உடனே தன் மொபைலை எடுத்து அவனிடம் குடுத்தான்
இந்தாங்க இதுலர்ந்து உங்க நம்பருக்கு ஒரு கால் பண்ணுங்க என்று கூறினான் அகஸ்டீன்.
பரஸ்பரம் எண்களுடன் இதயங்களும் பரிமாறி கொள்ளவே வினய் கிளம்பினான்.
இவ்வளவு நேரம் பிறை மதி போலிருந்த அகஸ்டீன் முகம் இப்பொழுது நிறை மதியாய் மின்னுவது கண்டு முருகன் கேட்டான்.
என்னடா உள்ள போய்ட்டு வந்ததுலர்ந்து குஷி ஆய்ட்ட?
உள்ள என்ன நடந்தது ஏதும் ஸ்பெஷலா கவனிசிட்டாரா....... அண்ணன்.........??
ச்சீ போடா... அதுலாம் ஒன்னும் இல்லை என்று கூறி விட்டு மகிழ்ச்சியுடன் வேளையில் இறங்கி விட்டான். ஒரு வழியாக வேலை முடிந்து விடுதி அறைக்கு வந்து சாப்பிட்டு படுத்து கொண்டு யோசித்தான்
வந்தான்.......! பேசுனான்........!! நம்பர் வாங்குனான்........!!! போய்ட்டான்.....???.
உண்மையாவே ஹெல்ப்புக்கு தான் நம்பர் வாங்கிருப்பானா இல்ல....? வேற ஏதாவது காரணம் இருக்குமா....? அப்டின்னா என்ன காரணம் அவனும் நம்மள விரும்புறானோ......?
ச்சீ அப்டி இருக்க வாய்ப்பு இல்ல இருந்தா இந்நேரம் அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் ஆவது அனுபிருப்பானே.....?
அதுவும் சரிதான்...இதுவரைக்கும் நடந்ததே நமக்கு அதிர்ஷ்டம் இனியும் நாம டைம் வேஸ்ட் பண்ண கூடாது... என்று நினைத்தவன் ஹாய் வினய் என்று ஒரு மெசேஜ் தட்டினான் வினய் நம்பருக்கு.
இதே நேரம் வினைய்யும் அங்கே படுத்து கொண்டு யோசித்து கொண்டிருந்தான்.
நம்பர் குடுத்து இவ்ளோ நேரம் ஆகுது இன்னும் ஒரு மேசேஜ் கூட அனுப்பலையே இவன்.
ஒருவேளை நம்மள புடிக்கலையா... இல்ல பேச தயங்குறானா.... ஒரு வேளை நம்ம பேசுனத சாதாரணமா எடுத்து கிட்டானா.....இல்லையே அவன் கண்ணுல ஒரு ஏக்கம் இருக்குறது தெரிஞ்சிதே.....?!!
உடனே ஒரு எண்ணம் அவனுக்கு தோன்றியது.......
ச்சே.... பாவம் அவன் பிசி யா இருந்திருப்பான் அதுநாள கூட ஒன்னும் பண்ணாம இருந்திருக்கலாம் இவ்ளோ செஞ்சிட்டோம் இதையும் நாமளே ஆரம்பிப்போம்.
 என்று மொபைலை எடுத்தான் அந்த சமயம் சரியாக அகஸ்டீன் அனுப்பிய மெசேஜ் வந்தது.
ஆச்சர்யத்துடன் மெசேஜ் ஐ படித்த வினய் அடுத்த கட்ட நடவடிக்கையாக அகஸ்டீனுக்கு கால் பண்ணினான்.
அங்கு வினய்யிடம் இருந்து ரிப்ளை வரும் என்று நகத்தை கடித்த படி மொபைல் டிஸ்ப்ளேவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த அகஸ்டீனுக்கு வினய் காலிங்.... என்று வந்ததை கண்டதும் ஆனந்தத்தில் காற்றில் பறப்பது போன்று இருந்தது. அடிக்கிற வெயிலுக்கு கொஞ்ச நேரம் குளுமையா காத்தடிக்கதா..... என்று ஏங்குபவனுக்கு மழையே பெய்யும் போது கசக்கவா செய்யும்..?
ஏதோ ஒரு வேகத்தில் அட்டன்ட் பட்டனை அமுக்கி விட்டான் அகஸ்டீன்
எதிர் முனையில் ஹலோ என்று வினய்யின் குரல் கேட்டது.
ஆஹா.... என்ன ஒரு அற்புதமான வாய்ஸ்... இவன் ஹலோனு சொல்றத கேட்டு கிட்டே கடைசி வரை இருந்திடலாம் போலயே......!
ஹலோ... ஹலோ .... ஹலோ..... மைக் டெஸ்ட்டிங் 1 2 3.......
வினய்யின் இந்த டெஸ்ட்டிங் சத்தம் கேட்டு சுய நினைவிற்கு வந்த அகஸ்டின்
ஹ.. ஹலோ சொல்லுங்க வினய்....
என்னங்க மறுபடியும் கனவா....?
கனவா........? .என்னங்க சொல்றிங்க ஒன்னும் புரியலயே.........
இல்ல..... அதான் என்ன பாத்தாலே அப்படியே எதோ கனவு கான்ற மாதிரி நிப்பீங்களே
அதே போல நிக்கிறீங்களோ னு கேட்டன்.
ஹய்யோ......  பக்கத்துல இருந்து பாக்குற மாதிரி சொல்லுறானே.. என்று நினைத்த அகஸ்டீன் தொடர்ந்தான்
அதுலாம் இல்லைங்க... மெசேஜ் பன்னா ரிப்ளை பண்ணாம கால் பண்றீங்க.?
மெசேஜ் பூஸ்டர் போடலைங்க அதான் கால் பண்ணன். வேணும்னா வெச்சுடவா...?
அய்யயோ சும்மா கேட்டங்க. கோவம்லாம் பலமா வரும் போல தெரியுதே..?
நானும் சும்மாதாங்க சொன்னன் உங்களுக்கு என்ன ஊர்ங்க.. வீடு எங்கருக்கு.?
இந்த கேள்வியை எதிர்பாக்காத அகஸ்டீன் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.
............
என்னங்க இப்டி அடிக்கடி அமைதியா ஆய்ட்றீங்க மறுபடியும் கனவா,,,,,
அதுலாம் இல்லங்க எனக்கு வீடுலாம் கெடயாதுங்க ஹாஸ்டல்லதான் தங்கிருக்கன்.
ஹாஸ்டல்லயா.... எங்க….? நம்ம காலேஜ் ஹாஸ்டல்லையா.? அப்பனா அம்மா அப்பா லாம் எங்கருக்காங்க.....?
எனக்கு அப்பா அம்மானு லாம் யாரும் இல்லங்க.... எனக்குன்னு யாரும் இல்ல.நான் காரைக்கல்ல இருக்குற ஒரு கிறிஸ்டியன் ஹாஸ்டல்ல தங்கிருக்கேன். என் ஸ்கூலிங்க் லாம் இங்கதான் முடிச்சன்.இப்ப நான் இன்ஜினியரிங் படிக்கிறது கூட குளுனி னு ஒரு ட்ரஸ்ட் குடுக்குற ஸ்காலர் லதான். என்று தன் கதைய சுருக்கமாக சொல்லி முடித்தான்.
ஆனால் இப்போது எதிர் முனையில் மௌனம் நிலவியது. அகஸ்டீனிடம் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்காத வினய் உண்மையாகவே அதிர்ந்து தான் போனான்.
ஹலோ.... வினய் இருக்கிங்களா இல்லையா என்ன இப்ப நீங்க கனவு காண்றிங்களா..
இல்ல அகஸ்டீன் சும்மாதான் உனக்கு யாரும் இல்லன்னு ஏன்டா நெனைக்கிற நான் இருக்கண்டா... இனிமேல் உனக்கு எல்லாம் நான்தான். என்று சொல்லத்தான் நினைத்தான் வினய் ஆனால் கண்ட்ரோல் செய்து கொண்டு
இல்லங்க சும்மாதான் உங்கள பத்தி சொன்னதும் கொஞ்சம் வருத்தம் அதான்.
அதலாம் நெனச்சு நானே வருத்த பட மாட்டேன் நீங்க ஏங்க....? அதலாம் விட்டு தள்ளுங்க. ஆமாம் உங்கள பத்தி சொல்லவே இல்ல...!
நான் மட்டும் என்னத்தங்க சொல்றது. எங்கம்மா என்ன விட்டு மேல போய் ஒரு வருஷம் ஆய்ட்டுங்க அப்பாவுக்கு தனியா இன்னொரு குடும்பம் இருக்கு., பெரிய பிசினஸ் மேன்ங்க அவரு. எனக்காக எவ்ளோ வேணாலும் பணம் செலவு பண்ணுவார் ஆனா பாசமா 5 நிமிஷம் கூட பேச மாட்டாருங்க. உங்களமாதிரி தாங்க நானும் எனக்கும் யாரும் இல்லங்க..
உண்மையாகவே வினய்யின் கதையை கேட்டு பரிதவித்த அகஸ்டீன் உனக்கும் யாருமில்லையா வருத்தபடாத வினய் நானிருக்கேன் இனிமேல் நமக்கு நாம் என்று நினைத்து கொண்டே.....
பரவால்லங்க நமக்குள்ள நெறைய ஒற்றுமை இருக்கும் போல....... என்றான். 
அப்டியா அப்டி இருந்தா நல்லதுதாங்க. என்று பூடகமாக சிரித்தான் வினய்
ஆமா மாயரத்துல எங்க தங்கிருகிங்க.?
நான் ஜங்ஷன்ட தனியா வீடு எடுத்து தங்கிருக்கேன்.
இவ்வாறு நேரம் போவது கூட தெரியாமல் பேசி கொண்டே இருந்து ஒரு வழியாக மறுநாள் காலேஜ் ல பாக்கலாம் என்று கூறி படுக்க சென்றனர் இருவரும். என்னதான் பேசி கொண்டிருந்தாலும் இருவரும் தங்கள் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்புடன் இருப்பதை காட்டி கொள்ளாமளேயே சாதரணமாக பல விஷயங்களை பேசிவிட்டனர்.  இருவர் மனதிலும் ஒரு இனம் புரியா சந்தோஷம் இப்போது நிலை கொண்டிருப்பதால் நிம்மதியாக உறங்கியும் விட்டனர்..பேசி கொண்டிருக்கையில் அகஸ்டீன் மொபைலுக்கு சிலம்பு இரண்டு முறை வைட்டிங்கில் வந்தான் ஆனால் வினய் யுடன் பேசி கொண்டிருந்த அகஸ்டீனுக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக தெரிய வில்லை வைத்த பிறகும் சிலம்பு வின் நினைவின்றி உறங்கி விட்டான்.
மறுநாள் காலை.....
கல்லூரியில் சிலம்புவின் வருகைக்காக காத்திருந்த அகஸ்டீனின் மொபைல் சிணுங்கியது.
சொல்லுடா சிலம்பு...
ஹே நைட் போன் பன்னுனேன் ரொம்ப நேரம் பிசியா இருந்த போல.....? என்னடா புதுசா ஏதும் பட்சி சிக்கிட்டா....?
ச்சீ எப்ப பாத்தாலும் நக்கல் தானடா உனக்கு? அதப்பத்தி தாண்டா உண்ட்ட பேசணும் ? ஆமா நீ எங்கிருக்க எப்ப வருவ....? ஏன் நேத்து கால் பண்ணிருந்த..?சீக்கிரம் வாடா உண்ட்ட நெறைய பேசணும்..
அப்டியா....! நான் வந்துட்டுருக்கண்டா உனக்கு ஒரு குட் நீவ்ஸ் சொல்லலாம் னுதாண்டா நேத்து கால் பண்ணன்.....
என்னடா குட் நியூஸ் சொல்லுடா..... அதுலாம் முடியாது வெயிட் பன்னு நேர்ல சொல்லுறன்
என்ன விஷயமா இருக்கும் என்னடா இன்னைக்கு நாம பண்ணின புண்ணியம் நேத்திலேருந்து ஒரே குஜாலா இருக்கு என்று தனக்குள் நினைத்து சில்ம்புவை எதிர் நோக்கிய படியே காத்திருந்தான் அகஸ்டீன். ஆனால் வரப்போகும் செய்தி அவனுக்கு அவ்வளவாக நல்ல செய்தி இல்லை என்பதை அவன் எதிபார்த்திருக்க வில்லை. வினய் யுடன் நேற்றிரவு பேசிகொண்டிருந்த நினைவுகளால் சிலம்பு வினையை பற்றி தான் நமக்கு ஏதாவது தகவல் கொண்டு வந்திருப்பான் என்பதையும் கூட அவன் எதிர் பார்த்திருக்கவில்லை
அதீத முக மலர்ச்சியுடன் வந்த சிலம்பு டேய் அகஸ் என்னடா என்னமோ எண்ட சொல்லணும் னு சொன்னியே என்னடா...? என்றான்  
ஆமாண்டா ஆனா அதுக்கு முன்னாடி நீ சொல்லுடா.....
சரிடா, முந்தாநாள் கேண்டீன்ல பாத்தோம்ல அவன் பேர் வினய் டா.
அகஸ்டீனுக்கு சிலம்புவை நினைக்க பெருமையாக இருந்தது
அட.!! அதுக்குள்ளே இவன் வினய் பத்தி தெரிஞ்சிட்டு வந்துட்டானே நம்ம மேலதான் இவனுக்கு எவ்ளோ ஒரு பாசம். எப்டி இருந்தாலும் நமக்கு தெரிஞ்ச விஷயங்களை தான் சொல்லுவான் என்ன சொல்லுறான்னு பார்ப்போம் என்று எதிர்நோக்கிய அகஸ்டீனுக்கு தெரியாது அவனுக்கு தெரியாத தகவல் ஒன்றும் வரப்போகிறது என்று.
அப்டியா.... அவன் என்னடா படிக்கிறான் என்று தெரியாதது போல கேட்டான்.
செகண்ட் இன்ஸ்ட்ருமென்ட் டா லேட்டரல் என்ட்ரி யாம். ஆனா அவனுக்கு என்ன ஊர்னுலாம் விசாரிக்க முடியலடா.
அத நான் சொல்லுரண்டா அவனுக்கு தஞ்சாவூர்டா மாயரத்துல தான் தங்கியிருக்கான் என்றான் அகஸ்.
சிலம்புவிற்கு உண்மையாகவே வியப்பு மேலிட்டது. ஹே எப்டிடா தெரியும் உனக்கு நேத்து ஏதும் அவன் பின்னாடியே போய்ட்டியா. அதுக்கும் வாய்ப்பில்லையே நேத்துதான் அவன் வரவே இல்லையே. என்று முகம் கோணிய சிலம்புவிடம் நேத்து பங்கில் நடந்தது முதல் இரவு பேசியது வரை அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் அகஸ்.
அடேங்கப்பா...!!!  பெரிய ஆள் தாண்டா நீ, டேய்  அன்னைக்கு அவன் உன்ன பார்த்ததுக்கும் நேத்து அவன வலிய வந்து பேசுனதையும் பாக்கும் போது அவனும் உன்மேல விருப்பதோட இருக்கான்னு நெனைக்கிரண்டா.
எப்டிடா இவ்ளோ சாலிடா சொல்ற...? ஆமா.... அவன பத்தி உனக்கு எப்டிடா தெரியும் யார்ட்டடா விசாரிச்ச.?
அதாண்ட அந்த ஹரீஷ் பய இருக்கனே அவன்ட தாண்டா.. அவன் தான் எல்லாம் சொன்னான். உன் ஆளு வினய் வந்ததுலேர்ந்து அவன்ட தான் நெருக்கமா இருக்கானாம்.... என்று கூறினான் சிலம்பு
 என்னது ஹரீஷா..? என்னடா சொல்லுற அவன் ஏன்டா இப்ப என்ட்ரி குடுக்குறான்.? என்று உண்மையாகவே அதிர்ந்த அகஸ்டீனின் முகத்தை பார்த்து இது எதிர் பார்த்த ஒன்றுதான் என்பது போல இருந்தான் சிலம்பு.
என்னடா சொல்ற...? அவன நீ எங்கடா பாத்த அவன்ட எப்டி இவன பத்தி கேட்ட....?
டேய் நான் பத்திரிக்க வைக்கறதுக்காக நேத்து சாயந்தரம் மாயரம் வந்துருனந்தண்டா...
என்னடா கொழப்புற என்ன பத்திரிக்க.......?
ஏதேது அவன் நாபகத்துல இன்னும் கொஞ்ச நாள்ல என்னையே யாருடானு கேப்ப போலருக்கே. அடுத்த வாரம் அக்காக்கு நிச்சயதார்த்தம் மறந்துடியா.....?
ஸ்ஸ்ஸ்ஸ்...  ஆமாண்டா .ஆமா மறந்துட்டன் சரி சரி சொல்லு என்று அவசரபடுதினான்
அதாண்டா நேத்து பத்திரிக்க வைக்க வந்தப்ப ரதிமீனா பார்சல்ஸ்ட்ட அவனுங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு நின்னுடிருந்தனுங்கடா. நான் கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன் அப்புறம் வினய் பைக்ல கெளம்பிட்டான்டா அவன் போனப்பரம் நான் போய் அந்த ஹரீஷ்ட்ட எதேச்சயா பாத்தமாதிரி பேச்சு குடுத்தண்டா. அப்பதான் சொன்னான் அவனுங்க ரெண்டு பெரும் ஒரே கிளாசாம் வினயோட பைக் பார்சல்ல வந்துதாம் அத எடுக்க வந்தானாம் அப்பத்தான் அவனும் வினய்ய எதேச்சையா பாத்துருக்கான்டா..
என்னடா சொல்லுற அவன் சாதரணமாவே வெஷம். இவன் கூடவே வேற இருக்காங்குற.? அப்ப எனக்கு ஆப்பாடா.
என்னனு தெரிலயே மச்சி கேண்டீன்ல ஒரு டிபன் சொல்லேன் என்றான் சிலம்பு ஜீவா ஸ்டைலில்.
அடி. ங்க... என்று அதட்டிய படி அவனை வகுப்பிற்கு இழுத்து சென்றான் அகஸ்டீன்
யார் இந்த ஹரீஷ் ஏன் அவன் பெயரை கேட்டதும் இப்படி அதிர்கிறான் அகஸ்டீன்..? நீங்கள் கேட்பது புரிகிறது எல்லா கதைகளிலும் எம் ஜி ஆரும் சரோஜாதேவியும் மட்டுமே டூயட் பாடி கொண்டிருந்தால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கிறது.... நம்பியார் வந்தால்தானே கதையில் சூடு பிடிக்கும். அதற்கு தான் ஹரீஷ் வந்திருக்கிறான். இவன் செய்ய போகும் பல நம்பியார் வேளைகள் தான் கதையில் பல திருப்பங்களை ஏற்படுத்த போகிறது.
வினய் மாயரத்துக்கு வரும்முன் பிளநெட்ரோமியோ வில் ஹாய் myld  tmrow  I ill be thir with place  pls ping me with ur pics என்று போட்டோ வுடன் வைத்திருந்த ப்ரோபலை பார்த்து பிங்க் செய்தவர்களில் மேற்சொன்ன ஹரீஷும் ஒருவன். ஆனால் இவன் பிக்சர் இல்லாம மெசேஜ் அனுப்பியதால் எந்த பதிலும் வினயிடம் இருந்து வரவில்லை. அதோடு லாக் அவுட்டும் செய்து விட்டான். ஏமாற்றத்தை தழுவிய ஹரீஷுக்கு மறுநாள் வினய் தன் வகுப்பிலேயே சேர்ந்திருக்கும் செய்தி கசக்கவா செய்யும்.
வினய் யை தன் வகுப்பில் பார்த்த வுடன் இவனை எப்டியாது ஒரு நாள் போட்றனும் ஆனா நாமளா காட்டிக்க கூடாது அவனையே நம்ம மேல கைய வைக்க வைக்கணும் என்று சூளுரைத்து கொண்டான் அதற்கேற்ப வினய் பார்த்தவுடன் நட்பு ரீதியாக வழிந்ததுடன் அவன் மொபைல் நம்பரையும் வாங்கிவிட்டான்.
ஆனால் ஹரீஷை பார்த்து அகஸ்டீன் பயப்படும் காரணத்தை அறிந்து கொள்ள நாம் ஆறு மாதம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.......
. முதலாமாண்டு படிக்கும் போது அனைத்து வகுப்புகளும் துறை வாரியாக பிரிக்காமல் பெயர் வாரியாக பிரிக்க பட்டிருந்தது. அப்போது ஒரே வகுப்பில் தான் இருந்தனர் இந்த ஹரீஷ்,அகஸ்டீன், சிலம்பு எல்லோரும் . என்எஸ்எஸ் முகாமுக்காக 1௦௦0 நாள் பயணமாக இவர்களெல்லாம் பக்கத்தில் உள்ள சிறு கிராமத்தில் தங்க நேரிட்ட போது ஒரு சாப்பிடும் வேளையில்.....
 சூடான சாம்பாரை பரிமாறி கொண்டிருந்தான் அகஸ்டீன். சிலம்புவிடமும் மற்ற நண்பர்களுடனும் பேசி விளையாண்டு கொண்டே இருந்த அவன் எதிரே வந்த ஹரீஷை  கவனிக்காமல் அவன் மீது மோதி விட்டான். சூடான சாம்பார் தன்மேல் கொட்டியது கூட ஹரீஷுக்கு பெரியதாக படவில்லை அவனுடைய புது சட்டை கறையானதால் தான் வெகுண்டெழுந்து சண்டையிட தொடங்கி விட்டான். அகஸ்டீனை அடிக்காத ஒன்றுதான் குறை மற்ற படி பேசியே தீர்த்து விட்டான்.
தன் மேல் தவறு இருப்பதை உணர்ந்த அகஸ்டீன் அமைதியாக சாரிடா.... தெரியாம நடந்துட்டுடா...... ஒன்னும் மனசுல வெச்சுக்காதடா.... கெஞ்சினான்
கூடவே நண்பர்களும் சமாதான படுத்த வன்மத்தை மனதில் தாங்கிய படி வெளியே சென்று விட்டான்.
பின்னர் அனைவருக்கும் பரிமாறி விட்டு கடைசியாக சாப்பிட்டனர் அகஸ்டீன் குழுவினர். சாப்பிட்டு முடித்து தனியாக கை கழுவ சென்றான் அகஸ்டீன்.
அங்கு பின்னாடியே யாரும் அறியாமல் வந்தான் ஹரீஷ்... அதை கவனித்த அகஸ்டீன்....
என்ன ஹரீஷ் அதான் சாரி சொல்லிட்டனே அப்புறம் ஏன் பின்னாடியே வர.....
சாரி சொன்னா போதுமாடா..... நான் அனுபவிச்ச வேதனைய நீ உணர வேணாமா.....
அப்பனா. நீயும் என் மேல சாம்பார் கொட்ட போறியா நக்கலாக சிரித்தான்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ஹரீஷ்......
இல்லடா வேற... கொட்ட போறான்டா... என்று ஆத்திரம் மேலிட அங்கிருந்த குவளையை எடுத்து தேங்கியிருந்த கழிவுநீரை மொண்டு அகஸ்டீன் மேல் ஊற்றினான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அகஸ்டீன் பின்னர் சமாளித்து கொண்டு சரிடா..... பழிக்கு பழி முடிஞ்சிட்டு. இனிமேல் என் எதுக்க நிக்காத.. கெளம்பு உன்ன பாக்கவே அருவருப்பா.... இருக்கு என்று கூறிய படி தன உடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்று கொண்டு நனைந்த துணிகளை அலச தொடங்கினான்..... கோபமாக இருந்த ஹரீஷுக்கு இப்போது சபலம் பிறந்தது.
ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா என்ன உடம்புடா..... என்று தனக்குள் ஏங்கினான். பின்னர்
சரி.... இதுக்கு இது நேரமில்ல அப்பறம் பாத்துக்கலாம் என்று கிளம்பி விட்டான் ஹரிஷ். ஆனால் அன்றிலிருந்து அகஸ்டீனை வம்பிழுப்பது போல அடிக்கடி நெருங்கினான் ஆனால் அகஸ்டீன் விலகி விலகி சென்றான். ஒருநாள் சக மாணவர்கள் யாருமின்றி தனியாக பேருந்தில் பயணித்து கொண்டிருந்தனர். பேருந்தின் நடுவில் நின்று கொண்டிருந்த ஹரியை வினய் பார்த்து விட்டான் ஆனால் அவன் அகஸ் ஐ கவனிக்க வில்லை. சிறிது நேரம் கழித்து யாரோ ஒரு வாலிபன் ஹரீஷை நைய புடைத்து கொண்டு இருந்தான் ஒரே சல சலப்பு.. எழுந்து சென்று பார்த்தான் அகஸ்டீன்...
அடிங்க...... எவன் மேல கைய வைக்கிற.... கோ.... பயலே.....
உனக்கு லாம் எதுக்குடா பேன்ட். சட்ட...... ? ஒரு பொடவைய கட்டிக்க வேண்டியதான..... ஆம்பளங்க கூட உங்களால சுதந்திரமா நடமாட முடியாது போல இருக்கே.... என்று கண்ட படி திட்டி கொண்டிருந்தான் அந்த வாலிபன்...
கூனி குறுகி போய் நின்று கொண்டிருந்த ஹரீஷ்.உடனே நகர்ந்து பின் பக்கம் வரும் போது அகஸ்டீனை பார்த்து விட்டான்.....
அவனுக்கு அழுகையும் ஆத்திரமும் அடைத்து கொண்டு வந்தது. ஒன்னும் பேசாமல் தொடர்ந்து வந்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டான். அகஸ்டீனுக்கு அவனை நினைத்து பாவமாக இருந்தது. ஹரீஷும் ஒரு கே என்பதை அறிந்து தன்னை போல ஒருவன் அவமான பட்டதை நினைத்து மிகவும் வருந்தினான்.
மேற்கண்ட சம்பவம் நடந்ததிலிருந்து ஹரீஷ் அகச்டீனை கண்டாலே விலகி போய்விடுவான் அவனும் இதை பற்றி சிலம்புவை தவிர யாரிடமும் வாயை திறக்கவில்லை.....
 
அன்று மதியம் கேண்டீனில் வினய் யை பார்க்கும் எண்ணத்தில் வேகமாக வந்து அகஸ்டீன். இன்று தனக்கு முன்பே வினய் வந்திருப்பது கண்டு மகிழ்ந்தான்.
யாருடனோ மொபைலில் மறைவாக பேசிகொண்டிருந்த வினை அகஸ் வருவது கண்டு தொடர்பை துண்டித்து அகச்டீனை நோக்கி சிரித்த படி வந்தான்.
ஹாய்..... அகஸ்.
சிலம்பு கூட பல முறை அகஸ் என்றுதான் கூப்பிடுகிறான் அப்போதெல்லாம் அது ஒரு பொருட்டாக கூட தெரியாத அகஸ்டீனுக்கு இப்போது வினய் அப்படி கூப்பிட்டதும் ஆனந்தம் தாங்க முடியவில்லை.
ம் சொல்லுங்க சாப்ட்டச்சா.
என்னங்க...? உங்களுக்காக தான் வெயிட் பண்ணிடிருக்கன் வாங்க சாப்பிட போகலாம் என்று கையை பிடித்து உரிமையோடு அழைத்து போனான்.
போன கைய்யோடு வினய்யே இருவருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான்.
அதற்குள் பின்னாடியே வந்த சிலம்பு இதை கண்டு மெல்லிய அதிர்ச்சியுடன் அகஸ்டீனின் காதருகே வந்து சற்றே சத்தமாக.
அகஸ்....... சரியான ஆளுதாண்டா நீ... ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்று கூறினான்
அவனை செல்லமாக முறைத்த அகஸ்டீன் ச்சீ போய் சாப்பட்ட வாங்கு. என்றான் மெலிதான குரலில்
என்னங்க அவர் என்ன சொல்லிட்டு போறார்.. என்றான் வினய் ஒன்றும் புரியாதவனாக.
ஒன்னும் இல்ல வினய் சும்மா ஓட்டிட்டு போறான். அவன்தான் என் பெஸ்ட் பிரன்ட்ங்க பேரு சிலம்பு. அன்னைக்கு என்கூட இருந்தானே பாக்குலையா.
அன்னைக்கா.... இல்லியே நான் பாக்கலியே என்றான் வினய்.
என்று ஏதேதோ பேசிக்கொண்டே சாப்பிட்ட இருவரும் அருகில் வந்து அமர்ந்த சிலம்புவை கூட கவனிக்க வில்லை.
இப்படியே அடுத்த ஒரு வாரமாக அவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிகாட்டி கொள்ளாமலேயே மொபைல் மூலமாகவும் நேரிலும் தங்கள் காதலை வளர்த்தனர்
இதற்கிடையில் வினய் யுடன் உறவுகொள்ள தேவையான நடவடிக்கை களிலும் முன்னெடுக்க தொடங்கிவிட்டான ஹரீஷ். முதல் நாள் ஹாய் ஹாய் என்று மெசேஜ் அனுப்பினான் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால் ஏமாற்றத்தையே சந்தித்தான். பிறகு கால் பண்ணினாலும் பிசி பிசி என்றுதான் வந்தது.
மறுநாள் காலேஜ்ல நேராவே கேட்டான் ஹரீஷ். என்ன வினய் நேத்து மெசேஜ் பண்ண கால் பண்ணன் ஒரு ரெஸ்பான்சும் இல்ல....?
இல்லடா ஒரு முக்கியமான கால் அதான்
அப்டியா ரொம்ப நேரம் பேசுனாபோல தெரிஞ்சுதே பாத்தா வேற எதோ லவ் கால் மாதிரி தெரிஞ்சிது.
ம்ம் பெரிய ஆள் தாண்டா நீ. உண்ட சொல்றதுக்கு என்ன லவ் கால் தாண்டா இப்போதைக்கு இத மட்டும் தெரிஞ்சுக்க போக போக நானே சொல்லுறன் என்றான்.
இதை கேட்டதும் ஹரீஷின் முகம் காற்று போன பலூனாக சுருங்கியதை வினய் கவனிக்க வில்லை.....
என்ன இவன் யாரயோ லவ் பன்னுரங்குறான்.... ஒரு வேளை ஸ்ட்ரைக்ட்டா இருப்பனா.. இருக்காதே எனக்கு நல்;லா நாபகம் இருக்கு இவன் போட்டோ வதான் நான் pr லதான் பாத்தனே. சரி கொஞ்சம் விட்டு புடிப்போம். எப்டி இருந்தாலும் இவன் மேல கைய வைக்காம விடகூடாது..... என்று நினைத்து கொண்டான்..
அது ஒரு புதன் கிழமை மாலை..... வகுப்புகள் முடிந்து சிலம்புவும் அகஸ்டினும் பேருந்து ஏற நடந்து சென்று கொண்டிருந்தினர்.
என்ன அகஸ் காலைலருந்து ஒரே யோசனையா இருக்க.....
ஆமாண்டா இப்படியே ரெண்டு பேரும்பேசிக்கிட்டே இருக்கோம் ஆனா ஒரு நெருக்கம் வரவே இல்லையேட...... அவன தனியா ஒரு நாள் பாக்கணும் நேரா பேசணும்டா.... நான் அவன லவ் பண்றன்னு சொல்லணும்டா...  
இதுல என்ன பெரிய விஷயம் பாத்து சொல் வேண்டியதான......
என்னடா இவ்ளோ ஈசியா சொல்லிட்ட..... அவன் எண்ட நல்லாதான் பேசுறான் ஆனா அவன் என்னமாதிரி தானா னு தெரியலையேடா.. ஒரு வேளை நான் சொல்லல போய் ஒரே அடியா என்ன கேவலமா நெனச்சு பேசுறதையே நிறுத்திட்டான்னா.?
நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தாண்டா... அதுக்காக இப்டியே இருக்க போறியா. அவன நெனச்சு ஏங்கிகிட்டு இருந்து கடைசில ஒன்னும் நடக்காம பின்னடி வருத்த படுறத விட அவன்ட்ட இத பத்தி நேரா சொல்லிட்டு என்ன நடக்குதோ அத சமாளிசுக்கலாம்டா...
அதாண்டா எனக்கும் சரின்னு படுது அதுக்கு முன்னாடி நாங்க தனியா பேச ஒரு சந்தர்ப்பம் வேணுமேடா........ அவன எப்டி எங்கடா கூப்டறது ஒரே கொழப்பமா இருக்குடா........
ஹே வர சனி கிழமைதான் அக்காக்கு நிச்சயம். அதுக்கு அவன கூட்டிட்டு வாயேண்டா.... நான் நம்ம பசங்கள்ள உனக்கு மட்டும் தான் சொல்லிருக்கன் கொஞ்சம் ஸ்கூல் பிரண்ட்ஸ் தான் வருவானுங்க அப்ப உனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் டா.......
ஆமாண்டா எனக்கும் அதுதான் எனக்கும் சரின்னு படுது. ஆனா அவன் வருவானாடா.......?
தெரிலையே கூப்பிட்டு பாரு கண்டிப்பா வருவான் உனக்காக கண்டிப்பவருவான் அவன் வந்தாலே உனக்கு பாதி சக்சஸ் தாண்டா.......
சரிடா நீயே அவனுக்கு கால் பண்ணி இன்வைட் பண்ணுடா அப்பறம் நான் பேசுறன்.....
சரி அவன் நம்பர் குடு..... சில்பு தன் மொபைலிலிருந்து வினய் க்கு தொடர்பு கொண்டான்
ஹலோ வினய்...
ம்ம் எஸ் வினய் தான் நீங்க....?
சிலம்புங்க அகஸ்டீன் பிரன்ட்..
ஹோ சொல்லுங்க சிலம்பு என்ன விஷயம்.. கால்லாம் பண்றீங்க....?
ஒன்னுமில்லங்க கமிங் சாட்டர்டே சிஸ்டர்க்கு என்கேஜ்மென்ட் அதான் இன்வைட் பண்ணலாம் னு.....
 ஒஹ் அப்டியா நல்ல விஷயம்ங்க. ஆனா நான் வெள்ளி கெழம ஊருக்கு போறனே.! என்றான் வினய் இதை லவுட் ஸ்பீக்கரில் கேட்டு கொண்டிருந்த அகஸ்டீனுக்கு ஏமாற்றமாக போய்விட்டது.
என்னங்க... இப்டி சொல்லுறிங்க.... வினய் யா இன்வைட் பண்ணுடானு அகஸ் தான் சொன்னன் அதான் கூப்டன்.
இப்போதுதான் விஷயத்தின் உள்ளே பொதிந்து இருக்கும் பல அர்த்தங்கள் மெல்ல புலப்பட துவங்கியது..... அகச்டீனை தனியாக சந்திக்க பல வகையில் இந்த விழா உதவும் என்று நினைத்த வினய்
அப்டியாங்க கண்டிப்பா அப்ப வந்துதான் ஆகனும் என்றான்... உடனே அகஸ்டினின் முகத்தில் ஒரு பல்பு எரிவதை பார்த்து கொண்டே சிலமபு..
ம்ம்ம் கோல எடுத்தாதான் குரங்கு ஆடும் னு சும்மாவா சொன்னாங்க.... என்று இந்தாங்க உங்க அவங்கல்ட்ட பேசுங்க என்று கூறிய படி அகஸ்டீனிடம் கொடுத்தான் செல்லை.
ஹலோ வினய்...
 சொல்லுங்க சார்..
என்ன என்கேகஜ்மென்ட்கு வருவீங்கல்ல.......?
என்ன இப்படி கேட்டுடிங்க நீங்க கூப்டதுக்கப்றம் நான் வரலைனா..... கடவுள் கூட என்ன மன்னிக்க மாட்டன்...... ஆமா பங்க்ஷன் எங்கங்க..?
நன்னிலத்துல ங்க......
ஹோ அப்டியா அப்பனா ஒரு கண்டீஷன்.....
என்னங்க சொல்லுங்க
நாம ரெண்டு பேரும் ஒன்னாதான் போகணும் அதும் என் வண்டில தான் போகணும் இதுக்கு ஒகே னா நான் வரன் இல்லனா வரல.....
அடிசக்க....... கரும்பு தின்ன கூலியா என்று நினைத்து கொண்டே
சரிங்க நீங்க இவ்ளோ வற்புறுத்தி கேட்டுகிட்டதால நாம ஒன்னாவே போலாம் ங்க என்று ஆனந்தத்தை அடக்க மாட்டதவனாய் கூறினான். நாம நைட் பேசலாம் என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தான்.......
டேய் அகஸ்ஸு..... உன் காட்டுல மழைதான் போல என்று ஓட்டினான் சிலம்பு. பின்னட் இருவும் சிரித்த படியே பேருந்திற்கு சென்றனர்...
என்னதான் தைரியமாக முடிவெடுத்தாலும் மனதுக்குள் ஒரு குழப்பம் நீடித்தது அகஸ்டீனுக்கு... அன்று இரவு வினய் இடம் பேசினாலும் அவன் மனதில் ஒரு பட படப்பும் பய்ம் நிறைந்தே காணப்பட்டது.... மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்து குளித்து தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தான்.
விசாலமாக திறக்க பட்ட கதவு. ஆங்கங்கே எரியும் மெழுகுதிரிகளின் நடுவில் கடவுள் சொரூபங்கள் நாடு நாயகமாக கிறிஸ்துநாதர் சிலுவையில் உயிர் விடும் பிரதான காட்சி. என்று கல்லான நெஞ்சங்களையும் கரைக்கும் அற்புதமான திருத்தலமாக இருந்தது அந்த கத்தோலிக்க தேவாலயம்.
அன்பின் இறைவனே... ஆண்டவரே எனக்கு மன வலிமையை தாருங்கள்.எனக்கு சமீப காலமா இருக்குற மன குழப்பம் உங்களுக்கு தெரியும். எனக்கு வினய் மீது அதீத ஈர்ப்பு இருக்குங்குறதும் உங்களுக்கு தெரியும் அத காதல் னு கூட சொல்லாம். அத அவன்ட நாளைக்கு நேரடியா சொல்ல போறன். என்னோட காதல அவன் ஏத்துக்கணும் அவனும் நானும் ஆயுளுள்ள மட்டும் ஒன்னா இருக்கணும். அதுக்கு நீங்கதான் அருள் புரியணும் ஆண்டவரே ஒருவேள அவன் என்ன ஏத்துக்காம நிராகரிச்சிட்ட்டான்னா அத தாங்கிகிற மன வலிமையை எனக்கு குடுங்க. ஆனா கர்த்தரே அவன் இல்லாம வாழறது இனிமேல் எனக்கு ரொம்ப கஷ்ட்டம் இந்த காதல் தவறா சரியா என்பதெல்லாம் எனக்கு தெரியல ஆனா உண்மை அதுவும் உங்களுக்கு தெரியும். எனக்காக இந்த ஒரு கோரிக்கைய நிறைவேற்றி தரவேண்டுகிறேன் எல்லாம் வல்ல பிதாவே.!! ஆமென். என்று மனதிற்குள் ஜெபித்து முடிக்கும் போது அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.  .   
 அப்போது காலை திருப்பலியை நிறைவேற்றும் பொருட்டு அங்கு வந்த ஆயர் அந்தோணி பல்தாசர் அகஸ்டீன் தன்னை மறந்து கண்ணீர் விட்டு ஜெபிப்பதை கண்டு அருகில் வந்தார்.
அவன் கண்களை திறக்கும் வரை காத்தருந்த ஆயர். அவன் விழித்து எழுந்ததும்.
 என்ன அகஸ்டீன் என்ன பிரச்சன உனக்கு......? என்று வினவினார்.
ஒண்ணுமில்லை பாதர்..
ஒன்னுமில்லாமலா காலேஜ் கெளம்புற அவசரத்துலயும் இப்டி வந்து கண்ணீர் விட்டு ஜெபிக்கிற..... ஏன் என்னிடம் சொல்ல கூடாதா. இவ்வளவு நாளா உனக்கு எல்லா விஷயத்திலையும் உறுதுணையா இருக்குற நான் இதுக்கு ஹெல்ப் பண்ண மாட்டனா.. என்கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம்....?.
யாரவது மனசு கஷ்ட்ட படுற மாதிரி நடந்து கிட்டாங்களா.....?
அதுலாம் இல்ல பாதர்.
அப்ப ஏதும் காதல் சார்ந்த விஷயமா. என்று நேரடியாகவே கேட்டார்.
       இதை கேட்டதும் அதிர்ச்சியோடு நிமிந்து பர்ர்த்த அகஸ்டீன் பின்னர் மவுனமாக குனிந்து கொண்டான்.
மவுனத்தை பதிலாக ஏற்று கொண்ட ஆயர் பேச துவங்கினார்.
       என்ன அகஸ்டீன் இதுக்கு போய் ஏன் கஷ்ட்ட படுற.... காதல் ங்கறது ஒன்னும் பெரிய தவறு இல்லையே.... உண்மையான காதல் இருந்தா இந்த உலகத்தையே வெல்ல முடியும். ஆனா அது உடல் சார்ந்த விஷயமாக ஆகிவிட கூடாது. காதலில் முதலில் தெரியும் இலக்கு அன்பானவரின் அழகோ அவரது உடலாகவோதான் இருக்கும். அதயும் தாண்டி செல்லுகிற காதல்தான் உண்மையான காதல். உன்னுடயதும் இந்த வகையில் இருந்தால் என்னுடைய வாழ்த்துக்களும் ஆண்டவரின் ஆசிர்வாதமும் என்றும் உனக்கு உண்டு. என்னை ஒரு நண்பனாக நினைத்து அதனை பற்றி அனைத்து விஷயங்களையும் என்னிடம் தாரளமாக பகிர்ந்து கொள்ளலாம்.. அதே சமயம்  படிப்பிலும் கவனம் மிக முக்கியம். தேர்ச்சி விகிதம் குறைந்தால் மடம் கொடுக்கும் உதவி தொகை கிடைக்காது என்பதையும் மறந்து விடாதே இரவு சந்திக்கலாம் என்று கூறி அனுப்ப்பினார் பாதர்.

“வாழ்த்துக்களும் ஆண்டவரின் ஆசிர்வாதமும் என்றும் உனக்கு உண்டு  என்ற வார்த்தைகளை தன் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து கர்த்தரே நேரடியாக கூறியதை போல உணர்ந்தான் அகஸ்டீன். ஆனால் அவன் மனதில் இன்னொரு குழப்பம் நிலவியது.
நம்ம காதலிக்கிற விஷயத்தை பாதர் ஏத்துகிட்டார் ஆனால் நாம காதலிக்கிறது ஒரு ஆண் மகனை என்று தெரிந்தால் இதே போல பேசுவாரா...? என்பது தான் அது. பல விதமான குழப்பங்களுடன் கல்லூரி சென்ற அகஸ்டீனுக்கு வினய்யின் அழகு முகமும் அன்பான வார்த்தைகளும் தற்காலிக மருந்து கொடுத்தது.. ஆனால் தனக்குள் அன்று மதியம் இன்னொரு     முடிவை எடுத்தான் அகஸ்.
என்ன பிரச்சன வந்தாலும் எதிர் நோக்கிவிடலாம் முதல்ல பாதர் கிட்ட வினய் விஷயத்தை சொல்லிவிடலாம் என்பதுதான் அது. அவன் மனதில் வேறொரு கேள்வியும் துளைத்து எடுத்தது. நாமதான் இந்த வினய் பயலால எவ்ளோ கஷ்ட்ட படுறோம் ஆனா அவன் எப்போதும் போலத்தான் ஜாலியா இருக்கான். அப்பனா அவன் இத பத்திலாம் சிந்திக்கவே இல்லையா..... இல்ல அவன் மனசுல நான் இல்லையா. குழப்பத்துடன் வேலைக்கு போகாமல் பாதரை சந்திக்கும் நோக்கத்துடன் விடுதிக்கு சென்றான் அகஸ்டீன்......
பாதர் தன் அறையில் எதோ எழுதி கொண்டிருந்தார்..
எக்ஸ் கீயுஸ் மீ பாதர் மே ஐ கமின்....?
நிமிர்ந்த அவர் முகத்தை சுருக்கிய படி வா.. அகஸ்டீன் இன்னைக்கு வேலைக்கு போகலையா...? என்று கேட்டார்.
இல்ல பாதர் உங்கள்ட்ட கொஞ்சம் பேசணும் வந்துட்டன்
அப்டியா என்ன விஷயம் சொல்லு.?
பாதர் எனக்கு எப்டி ஆரம்பிக்கிறதுனு தெரியல ஒரே தயக்கமா இருக்கு பயமாவும் இருக்கு.....
வார்த்தைகள் வெளிய வராத வரைக்கும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பது அரிது. நீ எத பத்தி வேணாலும் எண்ட பேசலாம் நான் காலையிலேயே உண்ட்ட அத சொல்லிட்டன்.
ஆமா……  பாதர் அத நம்பித்தான் நான் வந்துருக்கேன். நான் இப்ப செய்யிற விஷயம் தப்பா சரியானு தெரியல பாதர்.
 என்ன விஷயம் கொஞ்சம் தெளிவா சொல்லு..!?.
சற்றே மவுனமாக இருந்த அகஸ்டீன் பின் தீர்க்கமாக பேச தொடங்கினான்
 பாதர் நீங்க காலைல கேட்டது போல என்னோட பிரச்சன காதல் சார்ந்தது தான் ஆனா......  அதுல எனக்கு ஒரு மிகப்பெரிய குழப்பம் இருக்கு. நான் நேரடியாகவே சொல்லிடுறேன் நீங்க என்ன எப்படி வேனாலும் எடுத்துக்குங்க.
சரி சொல்லு என்றார்.
 என்னோட காலேஜ் படிக்கிற வினய்னு ஒரு பையனைத்தான் நான் காதலிக்கிறேன் என்று கண்களை திறக்காமல் சொல்லி முடித்து விட்டு பாதரின் முகத்தை நோக்கினான். பதற்றத்துடன்
ஆனால் அவரோ எந்த அதிர்ச்சியும் காட்டதவாறு சரி அதிலென்ன குழப்பம்.....? உனக்கு என்று கேட்டார்.
உடனே அகஸ்டீன் தண்னை  மறந்து கையை கிள்ளி பார்த்து கொண்டே என்ன பாதர் நான் சொன்ன விஷயம் உங்களுக்கு உறுத்தலையா..? என்று கேட்டான்
இதுல என்ன உருத்துறதுக்கு என்ன இருக்கு...?, இதுக்குதான் காலைல அழுதியா... பாரு அகஸ்டீன் காதல் ங்கறது இவர் மேலதான் வரணும் அவர்  மேல வரக்கூடாதுனுலாம் இல்ல. ஆனா அத உடல் சார்ந்த தேவைக்கு ஒரு சாவியா மட்டும் பயன் படுத்தாத. அவன் மேல உனக்கு இருக்குறது உடல் சார்ந்த ஈர்ப்பா இல்ல நண்பன் என்பதால் இருக்கும் அதீத பாசமா என்பதை சரியாக விவாதித்து முடிவெடு முதல்ல அவனுக்கு உன் மேல விருப்பம் இருக்கானும் சோதனை பண்ணிட்டு மேற்கொண்டு முடிவெடு.
அப்பனா இது தப்பு இல்லையா இந்த சமூகம் எங்கள ஏத்துக்குமா.....? பாதர்
என்ன பெரிய சமூகம். நாம தான் சமூகம். நாம எடுக்குற முடிவுகளால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லனா நாம் செய்யறது தப்பே இல்ல. ஆனா ஒன்னு.. படிப்புல மட்டும் கவனத்தை விட்டுடாத, ஆண்டவர் என்றும் உன்னோடு இருப்பாராக.... என்று ஆசீர்வதித்து அனுப்பினார் அவர்.
மிகபெரிய எதிர்ப்பை எதிர்பார்த்து வந்த அகஸ்டீனுக்கு பாதரின் வார்த்தைகள் மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோசத்தையும் கொடுத்தது உடனே சிலம்புவிற்கு இந்த இனிய தகவலை கூறிவிட்டு வினய் க்கு தொடர்பு கொண்டான். ஆனால் அவன் யாருடனோ பேசி கொண்டிருப்பதாக கூறியது அது....
எப்ப பாத்தாலும் பிசி தான் யார்ட்டதான் பேசுவானோ.. இருடி மாப்புள உனக்கு இருக்கு...... தனக்குள் சிரித்த வாறே சொல்லி கொண்டு அறைக்கு சென்றான்.
ஆனால் வினய் யாரிடம் பேசிகொண்டிருந்தான். அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா வாங்க அங்க போய் ஒரு எட்டு பார்த்து விடுவோம்.
அந்த வாரம் முழுவதும் வினய் போட்டிருந்த சட்டைகள் அவன் பயன்படுத்தும் செண்டின் மனமும் அவனுடைய மெல்லிய வியர்வை நாற்றத்தயும் கலந்து வீசிய படியே கட்டிலில் இறைந்து கிடந்தது. அதான் நடுவில் அமர்ந்து கொண்டு ஹரீஷ் என்று சேமிக்க பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டான்.
எதிர்முனையில் ஹரீஷ் சொல்லு வினய் என்று பரவசமானான்.
ஹாய் ஹரி உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் டா அதான் கால் பண்ணுணன்.
அப்படியா.? சரி! சொல்லுடா என்ன விஷயம்.
எனக்கு சொல்ல தயக்கமா இருக்குடா....!!. நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.. ?என்று தயக்கத்துடன் கேட்டான் வினய்.
எதிர் முனையில் நிலை கொள்ளாமல் தவித்த ஹரி ஒரு முடிவுக்கு வந்து விட்டான் அப்பா..... இவனுக்கு இப்பதான் நம்ம நாபகம் வந்தருக்கு போல. இன்னைக்கு வேட்டதாண்டோய் என்று உள்ளூர மகிழ்ந்த படியே.
என்ன விஷயம் டா சொல்லு எதுக்குடா தயங்குற. எதாருந்தாலும் தாராளமா சொல்லு. என்ன வேணும் உனக்கு. be frank. என்று வழிந்தான்.
 ஒன்னுமில்லடா உன்கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும் ப்ரீ யா இருக்கியா......?
ஐயோ.!! சொல்லுடா.. அதான் சொல்லு சொல்லுங்குறேன்ல என்று பொறுமை இழந்தான் ஹரீஷ்.
அந்த நேரம் சரியாக அகஸ்குட்டி வைட்டிங் என்று வந்தது வினய்யின் மொபைலில்
 உடனே அவசரமாக பேச தொடங்கினான் வினய், ஒன்னும் இல்ல் மச்சான் அத போன்ல பேச முடியாது நீ ஒரு எட்டு மணிக்கு லாம் என் ரூம்க்கு வரியாடா கொஞ்சம் தனியா பேசணும்.
 இது போதாதா ஹரீஷுக்கு கண்டிப்பா வரண்டா,,,,
ஒன மோர் திங் டா வரும்போது கூட யாரையும் கூட்டி வந்துடாதடா. என்று இன்னொரு போனஸ் குடுத்தான் அகஸ்டீன். அதற்குள் அறைக்கு சென்ற அகஸ்டீன் மீண்டும் தொடர்பு கொள்ளவே ஹரீஷை கட் செய்ய சொல்லி விட்டு  இருவரும் பேச தொடங்கிவிட்டனர்.  நாளை அவர்கள் இருவரும் நன்னிலம் போவது பற்றிதான் நீளமாக விவாதிப்பார்கள் என்பதாலும் குறிப்பிடும் படியான சுவாரசியம் ஏதும் தற்போது அதில் இல்லை என்பதாலும் அவர்களை விட்டு விட்டு நாம் கொஞ்சம் ஹரீஷின் மன நிலையை பற்றி அறிந்து கொள்ளுவோம் வாருங்கள்.
அப்பாடா இவ்ளோ சீக்கிரம் இவன் வழிக்கு வருவான்னு யோசிக்க வே இல்லையே..!!.
நாம யாரையும் கூட்டிட்டு வரமாட்டோம் என்பது தெரிந்து யாரையும் கூட்டி வராதே என்று சொன்னனே அப்டினா அதுக்கு என்ன அர்த்தம். இன்னைக்கு அப்ப கண்டிப்பா பூஜைய போற்ற வேண்டியதான். ஐயோ ஹரீஷ் மச்சகாரண்டா நீ. கஷ்ட்ட படாம கச்சேரி கொண்டாட போராட இன்னைக்கு. என்று ஓடி சென்று குளிக்கவும் பலவிதமான ஒப்பனைகளிலும் ஈடுபடதுவங்கினான்.
சரியாக எட்டு மணிக்கெல்லாம் ஹரீஷ் காலிங் பெல்லை அழுத்த வினய் கதவை திறந்தான். அதிக நேரம்போவது தெரியாமல் அகஸ்டீனுடன் போன் பேசி கொண்டிருந்ததால் அப்போது தான் இடுப்பில் துண்டு ஒன்றை கட்டியவாறே குளித்து விட்டு நின்றான் வினய்.
       இதை பார்த்ததும் ஹரீஷின் முகம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல விரிந்தது அவனுக்கு முகம் மட்டுமா விரிந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான்  பொறுப்பல்ல. ஆனால் அவனுடைய விரிந்திருக்கும் அனைத்து பாகங்களும் சுருங்க தேவையான அனைத்து வேலைகளிலும் வினய் இன்னும் சற்று நேரத்தில் ஈடுபடபோகிறான் என்பதை மட்டும் கூறி கொள்ளுகிறேன்.
 கதவை திறந்த வினய் அவனை பார்த்து வா மாமா உள்ள வாடா..... என்று கூறிய படி உடை மாற்றி கொண்டு அவனை உள்ளே போய் கட்டிலில் அமர சொன்னான்.
 தன்னை மறந்து பரவசத்தில் வினய்யை எதிர் நோக்கி அமர்ந்திருந்தான் ஹரீஷ்.
       உள்ளே வந்து நேரடியாக ஹரீஷின் வெகு அருகில் அமர்ந்தான் வினய். பின்னர் கட்டிலில் ஊன பட்டிருந்த ஹரீஷின் கரத்தை தொட்டு தூக்கி தன் கையில் வைத்து கொண்டு பேச தொடங்கினான்....
 மேற்சொன்ன சம்பவத்தால் தன்னை மறந்து சொக்கி கிடந்தான் ஹரீஷ்.
ஹரீஷ் நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டியே...
சொல்லுடா ....
இல்ல மாமா நம்ம கிளாஸ்ல எல்லாரும் என்ட்ட நல்லாதான் பேசுரானுங்க ஆனா உன்ட்ட தாண்டா என்னோட உணர்வுகளை ஷேர் பண்ணிக்கணும் போல இருக்கு. அதாண்டா உன்ன வர சொன்னன். நான் இப்ப சொல்ல போற விஷயத்தை நீ எப்டி எடுத்துக்க போறனு தெரில, நீ புரிஞ்சிப்பனு நெனைக்கிறன். தயவு செய்து நான் சொன்னதும் என்ன பத்தி தப்பா நெனச்சிகிட்டு என்ன விட்டு விலகி போய்டாதடா நான் உன்ன தான் என் பெஸ்ட் பிரண்டா நெனைக்கிரண்டா....
சரி சொல்லுடா.. எனக்கு இதுக்கு மேல தாங்காதுடா என்றான் ஹரீஷ்..
சரிடா நான் அன்னைக்கு ஒருத்தர லவ் பண்றதா சொன்னனே அது ஒரு பையன் டா என்றதும் ஆயிரம் இதழ்கள் இரட்டிப்பாகி மேலும் பிரகாசித்தான் ஹரீஷ்
என்னடா சொல்லுற பையனையா என்று போலியாக அதிர்ந்து யாருடா அவன் என்றான். ஒரு எதிபார்ப்புடன்.
உனக்கு தெரியுமா என்னனு தெரில டா அவன் பேரு அகஸ்டீண்டா மெக்கானிக்செகண்ட் இயர் டா நம்ம காலேஜ் தான் என்றதும்.
ஹரீஷுக்கு தலையே சுற்றுவது போல இருந்தது..
அடுத்த ஒரு நிமிடம் வினய் எதோ சொல்லுகிறான் என்பது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. எதுவும் ஆனால் எதுவும் செவிக்கு சேரவில்லை.
டேய் என்னடா செல மாதிரி உக்காந்துருக்க....... நான் சொன்னதுக்கு யாரா இருந்தாலும் அதிர்ச்சியா தான் ஆவாங்க. ஆனா நீ ஆவகூடாதுடா. என்னடா நான் சொன்னது உனக்கு அருவருப்பா இருக்கா. என்று அவன் தோளை தொட்டு உளுக்கினான் வினய்.
பின்னர் சுய நினைவிற்கு வந்த ஹரீஷ் சரி சொல்லுடா... இதுலாம் ஒன்னும் தப்பில்லைடா இப்பலாம் இது சகஜம் டா இதுக்கு நான் என்ன செய்யணும் என்றான்
அப்பாடா.....  இப்பதான்டா எனக்கு உயிரே வந்தது. ஒன்னுமில்லடா நாளைக்கு நானும் அவனும் ஒரு பங்க்ஷனுக்கு நன்னிலம் போறோம் டா அங்க வெச்சு அவன்ட என் லவ்வ சொல்லாம்னு இருக்கண்டா.  ஒரு வேளை அத அவன் புரிஞ்சிக்காம என்ன நிராகரிச்சிட்டான்னா.... அதுக்கப்பரம் எனக்கு நீதாண்டா ஹெல்ப் பண்ணி எங்கள சேத்து வைக்கணும்.
அடப்பாவி இதுக்கு தான் வந்ததுலருந்து மாமா..... மாமா...... னு கூப்டியாடா என்ன....? என்று நினைத்து கொண்டே சரிடா உனக்கு எல்லா விஷயத்திலையும் ஹெல்ப் பன்ரேண்டா என்று கூறி விட்டு சிறிது நேரம் வினய்யிடம் பேசிகொண்டிருந்தான்....
 கிளம்பும் போது இவ்விஷயம் பற்றி வேறு யாரிடமும் மனம் திறக்க கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டு ஹரீஷுக்கு விடை கொடுத்தான். வினய்.
வெகு ஏமாற்றத்தோடு திரும்பிய ஹரீஷ்., லவ்வாட பண்றீங்க லவ்வு. டேய் வினய் நான் ஹெல்ப் பண்ண தாண்டா போறன் ஆனா உங்கள சேத்து வைக்க இல்லைடா உன் மனசுல இருந்து அந்த அகஸ்டீன் பயல தூக்கி எறிஞ்சிட்டு நான் வந்து உக்காந்துக்க எனக்கு நானே ஹெல்ப் பண்ணிக்க் போறன்டா. என்று ஒரு மினி பாஞ்சாலி சபதம் எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அவனுடனேயே அந்த வெள்ளி கிழமையும் சேர்ந்து சென்றது.
வினய் மற்றும் அகஸ்டினின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத சம்பவத்தை ஏற்படுத்த போகும் அந்த சனிகிழமை பொழுது புலர்ந்து கொண்டிருந்தது
விடுமுறை நாள் என்பதால் காலை திருப்பலியில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் மாலை விழாவில் பங்கேற்கும் போது அவன் அணிந்து கொள்ள தேவையான உடைகளை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினான் அகஸ்டீன்.
அடிக்கடி இருவரும் போனில் பேசி கொண்டாலும் அன்றைய தினம் போல ஒரு நீண்ட நாளை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று நினைத்து கொண்டனர் அகஸ்டினும் வினய்யும். மாலை பங்கிள் வந்து அகஸ்டீனை அழைத்து கொள்வதாக வினய் கூறி இருந்ததால். தயாராகி வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் அகஸ்டீன்.
எதிர்பார்த்த படியே வினய் வந்தான்.
ஒருவருக்கொருவர் அதிகமாக அழகாக தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் மிக நேர்த்தியாக தயாராகி இருந்தனர் இருவரும். ஒருவரை ஒருவர் சூசகமாக பார்த்து கொண்டனர் பின்னர் வினய்யின் வண்டியில் ஏறி அமர்ந்த அகஸ்டீன் அவனுடைய தோளை பிடித்து கொண்டான்...அந்த தொடுதலில் தன்னை மறந்த வினய் அதனை ரசித்த வாறே காற்றை கிழித்து கொண்டு கிளம்பினான். என்னென்னன பேசினார்கள் என்பதை நினைவுக்கு இருவராலும் கொண்டு வர முடிய வில்லை. ஆனால் வரும் வழியெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டுதான் வந்தனர். இருவரும் வெகு அருகில் அமைந்திருப்பதும். ஒரே வண்டியில் செல்வதும் இதுதான் முதல் முறை என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து பேசி கொண்டே. சென்றனர் ஆங்காங்கே மேடு பள்ளமாக இருக்கும் திருவாரூர் சாலையும் அதான் பங்கிற்கு அவர்களுடைய நெருக்கத்திற்கு மேலும் வழி வகுத்தது.
ஒரு வழியாக நன்னிலம் வந்தது மாயரத்துலருந்து கிட்ட தட்ட முப்பது கிமீ அவர்களுக்கு மூன்று நிமிடத்தில் கடந்து வந்தது போல இருந்தது..
நேரடியாக சாப்பிடும் அறைக்கு அனுப்ப பட்டவர்கள் அருகருகே அமர்ந்து உணவருந்தினர். இருவருக்கும் தனி தனி இல்லை போடா பட்டிருந்தாலும் அகஸ்டினின் இலையில் இருந்து வினய் உரிமையோடு தேவை பட்டதை எடுத்து சாப்பிட்டான். இதையெல்லாம் ரசித்து கொண்டே அவனும் சாப்பிட்டான்.
பின்னர் மேலே சென்ற இருவரையும் சிலம்பு எதிர் கொண்டு அழைத்தான்.
வாகாக ஓரமான இடம் பார்த்து அமர்ந்து கொண்டனர் இருவரும்
விழாவில் ஆங்கே நடைபெறும் கவனத்தை கவரும் விஷயங்கள் நடனத்தாலும் எல்லாத்தையும் பார்ப்பது போன்றும் ஒருவருக்கொருவர் சாதரணமாக பேசிகொன்டே உள்ளக்குள் எப்படி காதலை வெளிபடுத்துவது... வெளிபடுத்தினால் என்ன நடக்கும் நம்மல தப்பா நெனச்சிகிட்டான்னா என்ன பண்றது. அது கூட பரவா இல்ல ஒரேடியா வெறுத்து ஒதுக்கிட்டான்னா என்ன பண்றது என்ற நினைவுகளுடன் இருவரும் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில் வினய் யின் மொபைலுக்கு அடிக்கடி மெசேஜ் வந்த வண்ணமாக இருந்தது அதற்க்கு உடனே ரிப்ளை செய்து கொண்டிருந்த அவனை பார்த்து அகஸ்டினின் மனம் மேலும் பதர் தொடங்கியது  .
நடைபெறும் விழாவில் ஒரு முக்கிய பாத்திரம் சிலம்பு என்பதால் அவனால் வெகு நேரம் அவர்களுடன் இருக்க முடிய வில்லை.
ஒரு வழியாக விழாவும் நிறைவு பகுதியை எட்டி அனைவரும் ஒவ்வொருவராக கிளம்பி கொண்டிருந்தனர்.
அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த சிலம்புவை பிடித்து அகஸ்டீன்
டேய் சிலம்பு நாங்களும் கெளம்புரோம்டா என்றான்..
ஹே என்னடா நீங்களும் அதுக்குள்ள கெளம்புறீங்க நாளைக்கு சண்டே தான லேட்டா போலாம் டா என்று கூறி விட்டு போய்விட்டான்....
அகஸ் எனக்கு தண்ணி குடிக்கணும் போல இருக்கு வா கிச்சனுக்கு போகலாம் என்று கூப்பிட்டான் வினய்.
பின் இருவரும் சாப்பாடு நடக்கும் அறைக்கு சென்றனர்.
ஆங்காங்கே சமையலறை பணியாளர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்த அந்த பெரிய அரங்கில் தண்ணீர் குடித்து விட்டு அங்கு போடா பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தனர். இருவருக்குள்ளும் ஒரு பரி தவிப்பு தொடர்ந்தது.
அதற்குள் வினய் யின் மொபைல் சிணுங்கியது. அகஸ் ஒரு நிமிஷம் என்று எழுந்து ஹேய் ஏன் இப்படி டார்ச்சர் பண்ற...? சொல்லிடன்னா நானே கால் பண்ண மாட்டனா...? என்று பேசி கொண்டே நகர்ந்து விட்டான்.
நாம கிட்ட இருந்தா பேச முடியாதுன்னு எட்ட போறானே அப்பனா யார்ட்ட பேசுவான் ஒரு வேளை சிலம்பு முன்னாடி சொல்ற மாதிரி யாராது லவ் பன்றானா.....? எது எப்டி இருந்தாலும் காலம் பூரா சொல்லாம தவிக்கிறத விட சொல்லிட்டு அதோட விளைவுகளை எதிர்கொண்டு விடுவோம் என்று முடிவுடன் அகஸ்டீன் நிமிர்வதற்கும் வினய் வருவதற்கும் சரியாக இருந்தது .
பின்னர் ஒரு வழியாக தொண்டையை செருமி கொண்டு என்ன நடந்தாலும் பரவால்ல சொல்லிடலாம் என்று பேச தொடங்கினான்.
 வினய்.....
ம்ம் சொல்லுங்க அகஸ்.......... நான் உங்கள்ட்ட ஒன்னு சொல்லணும்.
சொல்லுங்க..... வினய் பர்வாசத்தின் உச்சிக்கே சென்று விட்டான்....
நான் சொன்னதுக்கப்றம் சொல்ற விஷயம் புடிகலனா என்கிட்ட இப்ப இருக்குர மாதிரியே எப்பவும் இருக்கணும்.
வினய்க்கு அவன் இதயம் துடிப்பது காதுக்கு கேட்டது...
சொல்லுங்க நான் எப்போதும் போல தான் இருப்பேன்....
ஹேய்ய் உங்கள எவ்ளோ நேரம் தேடறது. ங்கதான் இருக்கிங்களா.. வான்கட கெளம்பலாம் மண்டபத்த வெகேட் பண்ணனும். என்று உரக்க கூறிய படி சிலம்பு அருகில வர.....
 இருவரும் எரிச்சலுடன் எழுந்தனர்......
பின்னர் சமாளித்து கொண்டு கடுப்புடன் அப்பனா நாங்களும் கெளம்புறோம் நான் போய் வண்டிய எடுக்குறேன் என்று கூறிக்கொண்டு வினய் முதலில் சென்றான்.
டேய் அகஸ்ஸு. கலக்குரடா சொல்லிட்ட போல என்ன தனியா வந்த்டீங்க எண்ட சொல் மாட்டியா... என்றான் சிலம்பு கிண்டல் தொனிக்க....
அடிங்க.. கரடி கரடி.. சரியான நேரத்துல வந்து கெடுத்துட்டியேடா பாவி..
வெண்ண திரள்ரப்ப பானய ஓடசிட்டியே என்று எரிச்சலுடன் கூறிய படி வெளியேறினான். 
பின்னர் இருவரும் சிலம்பு விடம் கோரி விட்டு கிளம்பி விட்டனர்..... அனால் ஓடரும் பேசிக்கொள்ள வில்லை ஒரு கனத்த மௌனம் நிலவியது. இப்படியே ஒரு பத்து கிமீ கடந்திருக்கும்.......
லேசாக மழை தூருவது போல இருந்தது..... அகஸ்டீன் மௌனம் கலைத்து பேச தொடங்கினான். என்ன வினய் ஒன்னும் பேசாம வரிங்க.
அதுலாம் இலங்க கடுபாருக்கு நாம ஒன்னு நெஞ்ஹோம்ன அது ஒன்னு நடக்குது அதாங்க இன்னைக்கு ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணிட்டாங்க என்று கூறினான்.
அவன் ஏன் இப்படி கூறினான் என்று அகஸ் யோசித்து கொண்டு இருக்கும் வேலையில் மழை சட சட என்று பெய்ய தொடங்கி விட்டது.....
ஒதுங்க ஒரு மரம் கூட அவ்விடத்தில் இல்லாததால் இருவரும் கன பொழுதில் தொப்பரயாக நனைந்து விட்டனர்.
இப்பொழுது இருவரையும் குளிர் வாட்டி எடுத்தது......ஆனால் தொடர்ந்து மவுனம் நிலவியது.. பொழுது வேறு இருட்டி இருப்பதாலும் மழை தூறி கொண்டே இருந்ததாலும் வேகமாக செல்லவும் முடியாமல் நிறுத்தவும் முடியாமல் வண்டி ஓட்டும் வினய் நடுங்க தொடங்கினான்....
அகஸ்டீனுக்கு அவனை கட்டி பிடித்தது கொள்ள வேண்டும் போல இருந்தது......
அகஸ்.... ஓவரா குளுருதில்ல.......
ஆமாங்க தாங்க முடில.....
அப்பனா என்கயது ஓரமா நிறுத்திடலாமா......
அய்யயோ வேணாங்க ஏற்கனவே லேட் ஆய்ட்டு நான் மாயரத்துல இருந்து காரைக்கால் வேற போகனுங்க... என்றான்.
அப்பனா எனக்கு வண்டி ஒட்ட ஹெல்ழ்ப் பண்ணுங்க......
ஒன்றும் புரியாமல் எப்டிங்க ஹெல்ப் பண்றது.....? என்று கேட்டான்
நான் ஒன்னு கேட்ட தப்ப எடுத்துக்க மாட்டிங்களே.....
சொல்லுங்க......
என்ன கட்டி பிடிச்சுக்க முடியுமா.....
என்ன என்னது.... என்று தடுமாறினான் அகஸ்
இல்லங்க குளிர சமாளிக்க முடில அதான் கட்டி புடிச்சு நெருக்கமா உக்கந்திங்கனா..
என்று முடிப்பதற்குள் வினய்யின் சப்த நாடியும் ஒடுங்கும் அளவு இருக்க கட்டி பிடித்து வினய்யின் முதுகில் முகம் பதித்து கொண்டான் அகஸ்டீன்.
ஒருகணம் தன்னையே மறந்து கிளர்ச் ப்ரேக் இரண்டையும் சேர்த்து பிடிக்க வண்டி அப்படியே உயிர் விட்டு நின்றது.
ஆனால் இதை எதையும் கண்டு கொள்ளாமல் கண்களை மூடி கொண்டிருந்தான். அகஸ்டீன். பின்னர் சுதாரித்த வினய் வண்டியை உதைத்து உயிபித்து வேகமெடுத்தான்... பின் மெல்ல பேச தொடங்கினான்..
அகஸ்...... உன்கிட்ட நான் ஒன்னு கேக்கலாமா....
முதல் முறையாக தன்னை வினய் ஒருமையில் அழைப்பது கேட்டு ஆனந்தித்த அகஸ் சொல்லு வினய் என்றான்.
வினய்யும் அந்த முதல் ஒருமை விளிப்பை ரசித்த வாறே தொடர்ந்து பேசினான்.
இல்ல இன்னைக்கு நைட் நீ கண்டிப்பா போய்தான் ஆகணுமா ஒரு நாள் என்னோட தங்கிடேன்.... காலைல போகலாம்..
அகஸ்டீனுக்கு ஏதோ காற்றில் பறப்பது போல இருந்தது.....
இல்ல வினய் நாளைக்கு சண்டே நான் கொயர் ல பாட்டு பாடனும் கண்டிப்பா போகணுமே... என்றான்.
ஒஹ் பாட்டுலாம் பாடுவியா..... அப்பனா ஒன்னு பண்ணலாம் நைட் இங்கேயே தங்கிடு நாளைக்கு நானே உன்ன அழச்சிட்டு போய் காரைக்கால்ல விடுறன் அப்டியே எங்கயாது வெளில போய்ட்டு வரலாம் என்று கூறினான் வினய்.
அது வரை குளிராக இருந்த அகஸ் வினய்யின் பேச்சை கேட்க்க கேட்க உடல் சூடாவதை உணர்ந்தான்..... அவனது உணர்ச்சிகள் கட்டுகடங்காமல் திறக்க பட்டது. இதயம் வேகமாக அடித்தது சூடான ரத்தம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஓடி முறுக்கேற்றியது
இன்னும் இறுக்கமாக கட்டி பிடித்த அகஸ் அனைத்தையும் மறந்து சரி வினய் என்றான்.
இந்த கூடுதல் அணைப்பு வினய்யை மட்டும் சும்மாவா விட்டு வைக்கும். அவனும் இப்பொழுதே வண்டியை ஒரமாக நிறுத்தி விட்டு அகஸ்சை எங்காவது இருட்டுக்குள் கூட்டி சென்று விடலாமா என்று தான் நினைத்து கொண்டிருந்தான்.
ஆனால் ஒருவாறாக சமாளித்து இருவரும் வினய்யின் வீடிற்கு வந்து விட்டனர்..
வீட்டை திறந்த வினய் ஒரு டவலை எடுத்து கொடுத்து
உள்ள என்னோட கைலி,சட்டைனு எல்லா ட்ரெஸ்சும் இருக்கு உனக்கு எது செட் ஆகுதோ அத போய் போட்டு வாடா.... என்று உரிமையோடு கூறி கொண்டே இன்னொரு துண்டால் அவனும் தலையை துவட்டி கொண்டான்....
உள்ளே சென்று அறையின் அழகையும் சுத்தமான பராமரிப்பையும் பார்த்து வியந்த வண்ணம்..... உடையை களைந்து வினய்யின் வெள்ளை ஷார்ட்ஸ் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டான். பின்னர் அவனை முதலில் பார்த்த போது வினய் அணிந்திருந்த வடமல்லி கலர் சட்டை கண்ணில் படவே அதயும் எடுத்து அணித்து கொண்டான் அதில் வீசிய வினய்யின் மணம் அகஸ்டீனை என்னவோ செய்தது.
தொடர்ந்து உள்ளே வந்த வினய் அகஸ்டீனை பார்த்து
ஹேய் அகஸ் உண்மையாவே இந்த டிரஸ் ல செம ஹான்ட்சமா இருக்கடா.. என்று அனைபாது போல அருகில் வந்தான் அகஸ்டீனுக்கு தூக்கி வாரி போட்டது ஆனால் எதேச்சயாக வந்தது போல அவன் வேறு எதோ உடையை எடுத்து மாற்ற தொடங்கியவ்னாய் சட்டையை கழற்றினான்.
அரும்பு விட்டது போல ரோமம் முளைத்த விரிந்தஅந்த வேற்று மார்பை அதற்க்கு மேல் கண் கொண்டு பார்க்க இயலாதவனாய் அகஸ்டீன் வரவேர்பறைக்கு சென்று விட்டான்.
என் செல்லகுட்டி அகஸ்சு..... உன்ன இன்னைக்கு என்ன பன்னுரனு பாரு. இன்னைக்கு நாம ரெண்டு பேரும் ஒண்ணா தங்க போற முதல் இரவு...... முதல் இரவு நான் யாருன்னு உனக்கு காட்ட போற முதல் இரவு என்று நினைத்து கொண்டே வெளியில் வந்தான்.
அவனுக்கு முன்பே வெளியில் வந்த அகஸ்டீன் தன் மொபைலை எடுத்து பாதர் என்று சேமிக்க பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் மழையில் நனைந்து இக்கட்டான நிலையில் மாட்டி கொண்டதாகவும், இரவு நண்பன் இல்லத்தில் இருந்து விட்டு நாளை காலை வந்து விடுவதாகவும் கூறிவிட்டு அணைத்தான். பின் எதேச்சயாக திரும்பும் போது மேசையில் வினய் யின் மொபைல் இருப்பதை கண்டு அதை எடுக்க ஓடினான். வினய் தன் நம்பரை எப்படி சேமித்து வைத்திருக்கிறான் என்று பார்க்கவே இந்த அவசரம். ஆனால் அவன் ஓடி சென்று மொபைலை எடுக்கவும் வினய் வந்து அதனை பார்க்கவும் சரியாக இருந்தது.
உடனே. அகஸ் அகஸ் போன எடுக்காத ப்ளீஸ்.... என்று கெஞ்சினான் வினய்.
சத்தம் கேட்ட திசை நோக்கி திரும்பிய அகஸ் அதிர்ந்தான்....
ச்சீ உனக்கு ஏன் இவ்ளோ அலுப்ப தனமான புத்தி. எந்த உரிமையில் அவன் போன எடுக்க போன....? என்று தன்னை தானே திட்டி கொண்டு சமாளித்து.... இல்ல சும்மாதான் என்று நகர்ந்து விட்டான்.
அந்த நேரத்தில் அங்கு நிலவிய அஸௌகரியத்தை களைப்பது போல மின்தடை ஏற்பட்டது. வெளியில் மழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது. கூடவே அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து ரயில் வரும் ஓசைகளும் கேட்டு கொண்டிருந்தது.
உடனே மெழுகு வர்த்தி ஓன்றை தேடி கண்டு பிடித்து தொய்ந்து போன அதன் திரிக்கு உயிரூட்டினான் வினய்.
அங்கு நிலவிய நிசப்தத்தை கலைத்து அகஸ் பேச தொடங்கினான்
என்ன.....? வினய் இங்க அடிக்கடி கரண்ட் போகுமா....
ஆமாம் எப்போதும் போறதுதான் ஆனா இன்னைக்கு ஸ்பெசல்.. ஆமா ஏன் உங்க ஏரியா ல போகாதா....
காரைக்கால்ல எப்போதும் கரண்ட் போகாது. அது இருக்கட்டும் வீடு அழகா மெயிண்டயின் பன்றியே... எப்டி...? என்றான்.
ம்க்கும்.. நேத்து வந்து பார்த்திருக்கணும். இன்னைக்கு எப்டியாது உன்ன கூட்டிட்டு வந்துடுவேன்.. என்ற நம்பிக்கயில் இன்னைக்கு முழுதும் உக்காந்து சுத்தம் பண்ணது எனக்க்குதான தெரியும் என்று நினைத்து கொண்டே அதுலாம் இல்ல எப்போதும் நான் சுத்தமா தான் வெச்சிருப்பன் என்று அளந்து விட்டான்...பின்னர்
ஆமா மண்டபத்தில எதோ சொல்ல வந்த..... ஆனா சொல்லவே இல்லையே அது என்னனு சொல்லு என்றான்....
உடனே அகஸ்ஸின் உள் மனம் எச்சரித்தது...... ஹே அங்க சொல்லி அத அவன் ஏத்துக்காம போனா கூட சமாளிசிருந்துருக்கலாம். ஆனா இங்க உன்ன வெளில துரத்தி விட்டானா மழையில்தான் நிக்கணும் பாத்துக்க.....
அதுலாம் ஒன்னும் இல்லையே...... ஆங் மறந்து போச்சு என்று சமாளித்தான்.
சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்ட தப்பா எடித்துக்க மாட்டியே....?
ம்ம் உன்ன போய் நான் தப்பா எடுக்கறதா... எதறுந்தலும் கேளு.
லவ் பத்தி என்ன நினைக்கிற.....?
லவ் பத்தியா ..... என்ன திடீர்னு?
சும்மா சொல்லு....
 காதல் ங்கறது ஒன்னும் பெரிய தவறு இல்லையே.... உண்மையான காதலா இருந்தா இந்த உலகத்தையே வெல்ல முடியும். ஆனா அது உடல் சார்ந்த விஷயமாக ஆகிவிட கூடாது. காதலில் முதலில் தெரியும் இலக்கு அன்பானவரின் அழகோ அவரது உடலாகவோதான் இருக்கும். அதயும் தாண்டி செல்லுகிற காதல்தான் உண்மையான காதல். உடலை முதலில் அனுபவிக்க துடிக்கும் முன் இருக்கும் காதல் அனுபவித்த பின்னும் இருந்தால் போதும் வேறெதுவும் தேவை இல்லை என்று நேற்று பாதர் சொன்ன வசனத்தை கொஞ்சம் சொந்த பிட்டையும் சேர்த்து அளந்தான்.
இதை கேட்டதும் வினய் க்கு சுருக்கென்று இருந்தது.... ச்சே நாமதான் எவ்ளோ கேவலமா நடந்துக்க பாத்துட்டோம். அப்டி எதும் நடந்திருந்தா அவன் நம்மள பத்தி என்ன நெனச்சிருப்பான். என்ன நடந்தாலும் நாளைக்கு அவன்ட்ட நம்ம லவ்வ சொல்லிட்டு அவன் மனசுல நாம குடி புகுந்த பின் எதாருந்தாலும் பாத்துக்கலாம் என்று நினைத்தான்
என்ன வினய் ஒன்னும் பேச்ச காணும்......?
அதுலாம் ஒன்னும் இல்லடா லைட்டா தலைய வலிக்குது தூங்கலாமா....... என்று கேட்ட போது வினய்யின் போன் அழைத்தது உடனே அதனை எடுத்து கொண்டு மழையை கூட பொருட்படுத்தாமல் அகஸ்டீன் கேட்க்காத வண்ணம் பேசிவிட்டு வந்தான்........
இருவரும் வெகு அருகில் படுத்திருந்தாலும் அவர்கள் மனதில் உள்ள காதல் தடுத்ததால் கட்டு பட்டுடன் படுத்திருந்தனர்....
ஏன் அவன் அந்த மொபைலை எடுத்தும் அப்படி பதறினான் அப்படி என்ன அதிலிருக்கும். இப்ப போய் யார்ட்ட பேசிட்டு வரான்.... ஏன் நான் அந்த போன எடுத்தால் என்ன குறைந்து விடும்,,,,,, என்ற வாறே சிந்தித்து கொண்டிருந்த அகஸ்டீன் காதுகளில் வினய் ஆழ்ந்து மூச்சு விடும் சத்தம் கேட்டது. சிந்தனை கலைந்த அகஸ் மெழுகு வர்த்தி ஒளியில் தெரிந்த வினய்யின் முகத்தை பார்த்தான்.
ஆஹா என்ன அழகு...... இவன்.... இன்னைக்குதான் என்னென்ன நடந்து விட்டது. எவ்ளோ சந்தோசம். ஆனா.... அவனாவே கட்டி பிடிக்க சொல்லி மூட கெளப்பிட்டு இப்படி மண்ணு முட்டு மாறி தூங்குறானே இவனுக்கு உண்மையாவே உணர்சிகளே கெடயாதா....என்று நினைத்து கொண்டிருந்தான். அப்போது வினை தன் கால் ஒன்றை தூக்கி அகஸ்டீன் மீது போட்டான்....
நிலைகுலைந்தான் அகஸ்டீன்.... அவனுக்கு படபடப்பாக இருந்தது சுய நினைவுடன் தூக்கி போட்டானா... இல்ல தூக்கத்துல போடறானா.......? என்று குழம்பினான். பின்னர் அவன் உறங்குவதை உறுதி படுத்தியவாறே அருகில் சென்றான்.
அவன் நெற்றியில் கை வைத்து ஹே வினு.....
ஏன்டா என்ன இப்படி படுத்துற..ஐ லவ் யூ டா உன்ன எப்ப பாத்தானோ அப்பலேர்ந்து உன்ன லவ் பன்னுரண்டா.. நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடா ஆனா அத உண்ட சொல்ல முடிலடா. என்ன நீ ஏத்துகலேன்னா என்னால தாங்க முடியத்துடா. ஆனா என்ன நடந்தாலும் நாளைக்கு உண்ட சொல்லிடுவேண்டா என்று கூறி அவன் நெற்றியில் ஒரு முத்ததை பதித்து படுத்து விட்டான்.....
மறுநாள் காலையிலேயே எழுந்து இருவரும் கிளம்பி காரைக்கால் நோக்கி பயணமானார்கள். அவர்களுக்குள் நேற்றை விட இன்று அதிகமான நெருக்கம் இருந்தது. காரைக்கால் போய் திருப்பலியில் கலந்து கொண்டு விட்டு அப்படியே பூம்புகார் செல்வதாய் முடிவெடுத்து இருந்தனர் இருவரும்.
வினய்யும் இன்று என்ன நடந்தாலும் தன் காதலை சொல்லி விடுவது என்ற முடிவுடன் சென்று கொண்டிருந்தான். என்னதான் அவர்கள் நெருக்கமாக இறந்தாலும் நேற்று போல மழை இன்று வராதா என்று என்னி கொண்டுதான் சென்றனர்..
தேவாலயத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தாலும் அகஸ்டீன் இடம் பெற்றிருக்கும் கொயர் குழுவை நேரடியாக பார்ப்பது போல அமர்ந்து கொண்டான் வினய். இதுவரை அவன் கேட்டிராத கிறித்தவ பாடல்களெல்லாம் அகஸ்டினின் குரலில் தோய்ந்து வருவதால் வினய்யின் காதுகளில் தேன் போல பாய்ந்தது..
பலவித சிந்தனைகளில் இருந்த வினய்க்கு அந்த தேவாலய பிரார்த்தனை எதோ ஒரு வகையில் மன வலிமையை தந்தது
திருப்பலி முடிந்ததும் அகஸ்டீன் வினய்யை பாதர் க்கு அறிமுக படுத்தினான்
பாதர் இவன்தான் வினய் நான் அன்னைக்கு உங்கள்ட்ட சொன்னேன்ல.....
ஹோ....... எஸ் காட் ப்ளஸ் யூ மை சைல்ட் என்று ஆசிர்வதித்தார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய இருவரும் பூம்புகாரை அடைந்தனர்...... இடையில் தேவாலயத்தின் பிரார்த்தனைகள் பற்றியும் சில பாடல் களை பாடும் பொது அகஸ்டினின் முகபாவத்தை பற்றியும் வியந்து கூறிய படியே வந்தான் வினய்.
வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு சிலபதிகார களிகூடத்தை தாண்டி கடற் கறை நோக்கி நடந்தனர் இருவரும்...... நாயிர்று கிழமை என்பதால் கூட்டம் சற்று கூடுதலாக இருந்தது..
       என்ன அகஸ் இவ்ளோ கூட்டமா இருக்கு.....கொஞ்சம் தனியா உக்காந்து பேசலாம்னு பாத்தன்...... சரி வா நடந்து கிட்டே பேசுவோம்....
நடந்துகிட்டே னா எங்க போறது அங்க மட்டும் கூட்டம் இருக்காதா......?
அதான் நானும் யோசிக்கிறன்..... ஆங் இப்படியே சவுத் சைடா நடந்தோம்னா காவிரி ஆறு கடல்ல கடக்குற இடத்துக்கு போகலாம் வா அங்க கூட்டம் இருக்காது..
இஸ் இட்..? காவிரி இங்கதான் கலக்குதா.....? என்றான் ஆச்சர்யமாக........
ஆமா வினய் இது உனக்கு தெரியாதா..... இந்த ஊரோட உண்மையான பேரே
காவிரி பூம் புகார்... சுருக்கமா பூம்புகார் ஆய்ட்டு....... பரவால்லியே நெறைய விஷயம் தெரிஞ்சிருக்கு உனக்கு....?
அதுலாம் ஒன்னும் இல்ல சும்மாதான்.......ஆமா என்னமோ பேசணும் தனியான்னு சொன்ன.......? ஒன்னும் பேசாம வர்ற....?
அதான் எனக்கு எப்டி ஆரம்பிக்கிறதுன்னு தெரில........ சரிடா நேரா கேக்குறான்......
உனக்கு என்னைய புடிக்குமா......
அகஸ்டீன் மனது வேகமாக அடிக்க தொடங்கியது.......
புடிக்குமே..... புடிக்காமலா உன்னோடே சுத்துறன்?
அது இல்ல அகஸ்...... நான் உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன் ஆனா அத கேட்டு புடிக்கலனா என்ன விட்டு போய்ட கூடாது...எப்போதும் போல இருக்கணும்...........!!!!!
அகஸ்டீனுக்கு நிலை கொள்ள வில்லை.......
எதாருந்தாலும் சொல்லு வினய்...... நான் இந்த ஜென்மத்தில உன்ன விட்டு போகமாட்டன்.......
உடனே சற்று முன்பு சென்று நின்று கொண்ட வினய்....... கண்களை மூடிக்கொண்டே   
திரும்பி பார்க்காமல்..... ஐ லவ் யூ அகஸ்....... நான் உன்ன விரும்புரண்டா..... நீ இல்லாமா என்னால இனிமேல் இருக்க முடியாதுடா..... நீ என் உயிர்டா...... இது உனக்கு புடிக்கலனா தயவு செய்து எண் வெருத்துடாதடா புரிஞ்சிக்கடா....... என்று கூறி விட்டு கண்களை திறக்காமல் நின்றான்.
       ஒரு நிமிடத்திற்கு கடல் இரையும் சத்தம் தவிர வேறெதுவும் கேட்க்க வில்லை அவன் காதுகளுக்கு.......
என்ன ஒரு சத்தத்தையும் காணும் ஒரு வேளை போய்ட்டானோ......? என்று மெதுவாக அவன் கண்களை திறப்பதற்கும் எதிரே நின்ற அகஸ்டீன் வினய்யின் இதழில் நச்சென்று ஒரு இச் வைக்கவும் சரியாக இருந்தது.
ஆச்சர்யம் விலகுவதற்குள் நிலைமையை உணர்ந்த வினய், அகஸ்டினின் இடுப்பில் ஒரு கையை கொடுத்தது வலைத்து இறுக்கினான். அடுத்த ஒரு நிமிடம்.......
பட்டென்று விலகிய இருவரும் அது பொது இடம் என்பதை அப்போதுதான் உணர்ந்து சுத்தி பார்த்தனர் சிறிது தொலைவில் காவிரி அலை அலை யாக காதலி தழுவி கொண்டிருந்தது.....
       அகஸ்டீன் நல்ல வேளை யாரும் பாக்கள......இப்படியா இருக்குவ.....?
என்னங்க சார்.... ஒன்னும் காதுல விழலையே...... அடப்பாவி இவ்ளோ நாளும் மனசுல ஆசையா வெச்சுக்கிட்டுதான் சொல்லாம இருந்தியா..... உன்ன என்ன பண்ணுறன் பாரு..... என்று அகஸ்டீனை துரத்தினான் வினய்.
அவன் வெக்கத்தில் முகம் சிவக்க ஓடவே..... ஓடி பிடித்து. கட்டி பிடித்து,  முண்டி அடித்து, இன்னும் என்னவோ அங்கு அரங்கேறியது......
ஒருவழியாக விளய்ய்ட்டுகள் ஓய்ந்து மணலில் அமர்ந்தனர் இருவரும்...
அகஸ் டார்லிங்.....
ம்ம் என்ன .?
நீ இனிமேல் ஹாஸ்டல்ல இருக்க வேணாம்டா...... மாயரம் வந்துடுடா....... நாம ரெண்டு பேரும் ஒன்ன இருக்கலாம்..... ஒரே வீட்டுல.......
எனக்கும் அதாண்டா யோசனை ஆனா.....
என்னடா பாதர் திட்டுவாரா........?
அதுலாம் இல்லடா எதோ உறுத்துது..... சரி நான் நாளைக்கு பாதர்ட்ட பேசிட்டு சொல்லுறன் என்று கூறினான்.
        பின்னர் ரொம்ப நேரம் அங்கேயே இருந்து விட்டு கனத்த சோகத்துடன் காரைக்காலுக்கு அகஸ்டீனை பேருந்து ஏற்றி அனுப்பி விட்டு மாயரம் கிளம்பினான்.....
       மறுநாள் பாதரிடம் பேசி சம்மதம் வாங்கினான் அகஸ். மற்றவர்களிடம் தினமும் வேலைக்கு சென்று விட்டு வருவதால் கஷ்ட்டமாக இருப்பதால் நண்பனின் அறையில் தங்க போவதாகவும் ஞாயிற்று கிழமை ஆனால் கண்டிப்பாக வருவதாக கூறி விடை பெற்றான் காரைக்காலிளிருந்து
       மிகவும் சந்தோசமாக புகுந்த வீட்டுக்கு போகும் அகஸ்டீனுக்கும் அங்கே இவனை எதிர் பார்த்து காத்திருக்கும் வினய்க்கும் இடையில் அடுத்து ஒரு போராட்டம் நடக்க போவதயோ....... அதற்குண்டான வேலையில் ஹரீஷ் ஈடுபட தொடங்கிவிட்டான் என்பதோ அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....
       கண்கள் என்பது காட்சிகளை காட்டும் ஆனால் உண்மையை காட்டுமா....... அது புரியாமல் அகஸ்டீன் தற்கொலை வரை செல்ல  போகிறான் அதற்கு வினய்யும் உடந்தயாக இருக்க போகிறான் அது எப்படி அடுத்த பாகத்தில் பார்ப்போம்..........

.   
                                                --தொடரும்

.


.

.
.



   


.
.



.  .
    

9 கருத்துகள்:

  1. பெயரில்லா27 மே, 2013 அன்று PM 12:58

    இவ்வளவு அருமையான கதைக்கு பின்னூட்டமே இல்லையா? கதை மிக அருமை... ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகும் அடுத்த பதிவு இடவில்லையா?

    திருப்பூர் பாபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்கள் பாராட்டுக்களுக்கு. எனது அடுத்த படிப்புகள் விரைவில் வெளிவரும்.

      நீக்கு
  2. பெயரில்லா28 மே, 2013 அன்று PM 4:49

    whos is the writer great, nan en sondha oor mayavaram poitu vandha madhiri iruku, avc college, poombukar ellam azaithu pona ezuthalaruku paratukkal.,

    பதிலளிநீக்கு
  3. அருமையான ஒரு கதை.. கதாப்பாத்திரகளுடன் இணைந்து எழுதி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..