பக்கங்கள்

புதன், 19 ஜூன், 2013

பூக்களை தான் பறிக்காதீங்க.......... காதலைத்தான் பிரிக்காதீங்க.........


எனதன்பு ஓரின நண்பர்களே.........!

நாம் வசிப்பது சிறுநகரமாக இருந்தாலும் சரி பெரு நகரமாக இருந்தாலும் சரி பெரும்பாலான  ஓரினவிரும்பிகளை அந்த அந்த ஊர் பேருந்து நிலையங்களில் பார்க்க முடியும். இதில் நகரத்திலேயே நிரந்தரமாக வசிக்கும் சகோதரர்களை விட வெளியூரிலிருந்து வந்து செல்லுபவர்கள்தான் பரவலாக அடங்கி இருப்பர். அனைவருடனும் அனைவரும் பேசி கொல்லுவது இல்லை என்றாலும் ஓரளவுக்கு யார் யார் “கே” என்பதையும் அறிந்து வைத்திருப்போம்.”

      இதில் சிலர் யாரவது நம்மிடம் வந்து அப்ரோச் பண்ணா போகலாம் என்று அமைதியாக இருப்போம், சிலர் யாராயிருந்தாலும் ஓடி சென்று அருகில் நின்று முயற்சி செய்வோம், சிலர் பொதுகழிவறையிலோ அல்லது பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள முட்டு சந்துகளிலோ காத்து கிடப்போம், யாராக இருந்தாலும் கண்டிப்பாக மேலே சொன்னது போல பேருந்து நிலையத்திற்கு தொடர்ந்து வரும் கே நபர்களை நமக்கு தெரிந்திருக்கும்.

     இதில் அதிர்ஷ்ட வசமாக காதல் ஜோடிகளோ, அல்லது நமக்கு  தெரிந்ததிலிருந்து ஒருவனுடன் மட்டும் தொடர்பிலுள்ளவர்களும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதில் சரியான வயது பொருத்தம் உள்ளவர்களில் இருந்து அதிக வயது வேறுபாட்டுடன் கூடிய ஜோடிகள் கூட இருக்க வாய்ப்புண்டு. இந்த ஜோடிகளில் ஒருவர் நம் மனம் கவரும் விதத்திலோ  அல்லது இருவருமோ கவரும் படியோ இருப்பர்.

   நம்மில் பலருக்கு ஐந்து நிமிட சுகத்திற்கு எத்தனையோ பேர் கிடைக்க வாய்பிருக்கும் போது., அதனை எல்லாம் விட்டு விட்டு அந்த ஜோடிகளில் எவர் மீதாவது இலக்கு நிர்ணயித்து முயற்சி செய்து கொண்டும் இருப்போம்.

  என்றேனும் ஒருநாள் மேற்குறிப்பிட்ட ஜோடிகளின் இணை வருவதற்கு தாமதாகும் பொழுதுகளில் அவர் காத்திருக்க நேறிடும். அப்பொழுதுதான் நாம் தனியாக நிற்கும் அவருக்கு வலை வீச தொடங்குவோம். நாம் என்னதான் புஜபல பராக்கிரமத்த்யோ இல்லை நேரடியாக பேசியோ வழிக்கு கொண்டு வரவும் முய்ற்சித்திருந்தாலும் எதிராளி உண்மையான காதலுடன் இருக்கும் பட்சத்தில் நீங்கள் மனமதனாக இருந்தால் கூட மடியமாட்டார் என்பது வேறு விஷயம். சிலநேரங்களில் அவமானபட்டுக்கூட திரும்ப நேரிடும்.

    பிறகுதான் நாம் நமது நம்பியார் வேலைகளையும் காட்ட துவங்குவோம். எப்படியாவது அவருடைய அலைப்பேசி எண்னை கண்டு பிடித்து.

“ ஏன் நீங்க ஒருத்தனுத தான் ஊம்புவீங்களா? எங்கள லாம் உங்களுக்கு புடிக்காதா” என்று வசை மாறி பொழிந்து விட்டு போனை அனைத்து வைத்து கொள்ளுவது.   

இல்லை என்றால் அவருடைய காதலன் எண்ணை கண்டு பிடித்து “நீங்க உண்மையா இருகிங்கனு ஊருக்கே தெரியும் ஆனா உங்க ஆள் உண்மையா இருக்கனான்னு உங்களுக்கு தெரியுமா?” என்று எதையாவது கூறி கோள் மூட்டுவது.

    உச்ச கட்டமாக அவர்கள் ஒன்றாக நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது நமது குழுவினரிடன்  சென்று  அநாகரிகமாக நடந்து கொள்ளுவது என்று மிகவும் கொடூர புத்தி உடையவராக இருக்கிறோம்.

 அட அவர் தவறு செய்தவராகவே இருக்கட்டுமே அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை? அதை பற்றி கவலை பட வேண்டியது அவருடைய காதலன்!!! . அவரிடம் நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லையே?.

   எனவே எனதன்பு நண்பர்களே எனது கோரிக்கை என்னவெனில், நீங்கள் வேணுமானால் ஒன்டிகட்டயாக இருந்தது கொண்டு ஊரை மேயுங்கள், ஏன் காதலை பிரிக்க கங்கணம் கட்டி கொண்டு அலைகிறீர்கள்.? உண்மையாக காதலித்து இது போன்ற சிறுமதி படைத்தவர்களால் பிரிந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஏன் எனக்கே இது நிகழ்ந்திருக்கிறது. அற்ப சுகத்திற்காக நம்மவர்களின் வாழ்க்கையை நாமே கெடுக்கலாமா.? பாவம் அவர்களை விட்டு விடுங்கள் உங்களுக்கு என்று எண்ணற்ற நபர்கள் இங்குள்ளனர். உங்களுக்குள் இப்படி ஒரு காதலை பிரிக்கும் என்னமோ இல்லை கோள்மூட்டும் ஆசாமியோ இருந்தால் அவனை இன்றே விரட்டி அடித்து விட்டு உண்மை காதலை வாழவிடுங்கள்.

                                          -அன்பு நண்பன்                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..