பக்கங்கள்

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஆலம்பரை கோட்டை - ஓரினக்காதல் தொடர்கதை1




கதையில் வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் முழுதும் கற்பனையே!!
                                                                                01
                                                                தோணித்துறை
கிழக்கு கடற்கரைச்சாலையில் புதுவை செல்லும்போது மரக்காணத்துக்கு முன்பு உள்ள சிற்றூர் கடப்பாக்கம். இங்கிருந்து கடலை நோக்கி மூன்று மைல்கள் சென்றால் எடுத்த எடுப்பிலேயே கண்களில் படுவது பாழ்பட்டு போன பெரியபெரிய செங்கல் சுவர்கள்தான். ஆலம்பரை கோட்டை என்ற பெயர் தாங்கி கிபி பதினேழாம் நூன்றாண்டின் இறுதிவாக்கில் செல்வாக்குடன் இருந்த இவ்விடம் இன்று வெறும் செங்கல் மேடாக கடலோரத்தில் காட்சியளிக்கிறது. நீங்கள் காணும் செங்கல் சுவர்களை நினைத்தபடி கண்களை மூடுங்கள் உங்களை சில நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்று மனதை கனக்க செய்யும் ஓரினக்காதல் கதை ஒன்றை கண்முன் கொடுக்கிறேன்.
கிபி பதினேழாம் நூற்றாண்டின் ஒரு காலைநேரத்தில் கடலின் உப்புக்காற்று கொல்லைபுறமாக வீட்டுக்குள் புகுந்து முத்தம்மாளை உசுப்பி பொழுது விடியப்போகிறது உன்மகனை எழுப்பிவிடு என்றது.  அதே நேரம் ஆலம்பாறை கோட்டையின் மீதிருந்த மணிக்கூண்டில் ஐந்தாம் மணி ஒலிக்கவே முத்தம்மாள் எழுந்து சென்று மாமரத்தடியில் படுத்திருக்கும் தன் மகனை எழுப்பினாள்.
போர்வைக்குள் இருந்த ஆஜானுபாகுவான உருவம் மெலிதான முனகலுடன் அசைந்து கொடுத்தது. முத்தம்மாள் நிமிர்ந்து வீட்டின் பின்புறம் பார்த்தாள். அரைகுறையாக புலர்ந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தில் ஆலம்பரை கோட்டை மதிலின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்களை தமிழ்நாட்டு பணியாட்கள் அணைப்பதும் அதனை அருகில் நின்று பிரெஞ்சு வீரர்கள் வேடிக்கை பார்ப்பதும் தெரிந்தது. வீரர்களின் அலட்சிய நடத்தையில் இருந்து பெரிய துரை இன்னும் எழுந்திருக்கவில்லை என்று முத்தம்மாள் உணர்ந்து கொண்டு மகனை எழும்படி துரித படுத்தினாள்.
ம்மா!! ஏம்மா காலையிலேயே காச் மூச்ன்னு காதுகிட்ட வந்து கத்துற? பெரியதொர சூரியன் கெளம்புன பெறவுதான் எந்த்ரிப்பார்!! என்றான் போர்வைக்குள் இருந்த முருகன் என்கிற திருமுருகன்.
“அது சரிதாண்டா நீ வேலைக்கு கெளம்ப இன்னும் நேரம் இருக்கு ஆனா உங்கப்பாரு காலையிலேயே தோனிக்கு போய்ட்டாருடா, பாவம் மனுஷன் பச்சத்தண்ணி கூட குடிக்கல, கொஞ்சம் கேப்ப கூழு கரச்சி வச்சிருக்கேன் போய் கொடுத்துட்டு வாடாஎன்றாள் அம்மா
“என்னா இன்னிக்கி காலம்பரையே போய்ட்டு? போர்வையை விலக்கி கேட்டான் முருகன்.
“தொரைக்கு தூக்கம் வந்தா ஒலகமே மறந்துடுமா? காரைக்கால் லருந்து சிப்பாயி கப்பல் வருதே மறந்துட்டியா? என்று சொல்லியபடி அந்த அம்மாள் எழுந்து உள்ளே போய்விட்டாள்.
முருகனுக்கு பிறகுதான் நினைவுக்கு வந்தது எல்லாம், போர்வையை முழுமையாக அப்புறப்படுத்தி தன் உறுதியான நீண்ட கால்களை தரையில் ஊன்றி எழுந்தான். கொசகொசவென சுருட்டை முடி நிறைந்த அவனது கால்களில் ஒன்றில் வெள்ளி கழல் அணிந்திருந்தது முருகனுக்கு கம்பீரமாக இருந்தது. இயல்பாகவே உருள் திரளாய் இருக்கும் அவனது கறுத்த உடல் இருபது வயது இளமையோடு காண்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும்படி செழித்து கிடந்தது. அவிழ்ந்துகிடந்த சுருட்டை தலைமுடியை பின்கட்டாக அள்ளி முடிந்து இடுப்பு வேட்டியை இறுக்கி கட்டி கொண்டு முகம் கழுவி கூழ் வாளியை எடுத்து கோட்டையின் கீழ்ப்புறம் இருக்கும் தோணித்துறைக்கு நடைப்போட்டான முருகன்.
அவன் தோணித்துறைக்கு செல்வதற்குள் ஒரு சிறு விளக்கம் கொடுத்து விடுகிறேன். சற்றேறக்குறைய கிபி 1600 களில் இந்தியா முகலாயர்களின் ஆட்சியில் இருந்த பொழுது ஒரு மொகலாய மன்னரால் கட்டப்பட்டது இந்த ஆலம்பரை கோட்டை என்பது. வங்கக்கடலில் இயற்கையாக துறைமுகம் போன்று அமைந்த இந்த கடற்கரையில் சங்ககால தமிழர்கள் கூட ரோமாபுரியுடன் கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளனவாம். ஏற்கனவே துறைமுக பட்டினமாக இருந்த இடத்தில் ஒரு விரிவுபடுத்த பட்ட தோணித்துறையுடன் முழுவதுமே செங்கல்லால் ஆன ஒரு வியாபார தளமாக இந்த கோட்டையை அந்த மன்னர் கட்டியுள்ளார். பிற்காலத்தில் இந்திய துணைகண்டம் பலவேறு ஐரோப்பியர்களான டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த நாட்களில் காரைக்காலும் பாண்டிச்சேரியும் அதன் சுற்று பகுதிகளும் பிரெஞ்சுக்காரர்கள் ஆளுகையில் இருந்தது. இந்நாட்களில் இக்கோட்டையை ஆண்டு கொண்டிருந்த சுபேதார் முசாபர்ஜங் என்பவர் பிரஞ்சு தளபதியான டூப்ளே தனக்களித்த உதவிக்கு நன்றியாக பிரெஞ்சுக்காரர்களுக்கே ஆலம்பரை கோட்டையை அன்பளிப்பாக வழங்கிவிட்டு சென்று விட்டார். அதுமுதல் பிரெஞ்சு வர்த்தகர்களும், ஆட்சியாளர்களும் கோட்டை மற்றும் அதன் சுற்று பகுதியையும் ஆட்சி செய்து வருகின்றனர். வெற்றிலை, புகையிலை, காஞ்சிப்பட்டு, அரிசி, காய்கறிகள், போன்ற பலதரபட்ட பொருட்களும் இங்கிருந்து பிரெஞ்சு வணிகர்களின் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வணிகத்தையும் வரிவசூல் நிர்வாகத்தையும் கவனிக்க பிரெஞ்சு நிர்வாகம் நியமித்துள்ள சர் மைக்கேல் டிசோசா என்பவனைத்தான் முத்தம்மாளும் முருகனும் முன்பு பெரியதுரை என்று அழைக்கக்கண்டோம்.
இந்த பெரியதுரை என்பவன் கொஞ்சம் கடுமையான குணம் கொண்டவன். இவன் அவ்வளவாக தமிழர்களை நம்புவது இல்லை எனவே கோட்டையின் பராமரிப்பு, மற்றும் எடுபிடி வேலைகளுக்கு தமிழர்களையும் காவல் மற்றும் சமயல் வேலைகளுக்கு பிரெஞ்சு ஆட்களையும் அமர்த்தி கொண்டிருக்கிறான். அவ்வகையில் பெரியதுரையின் சேவகர்களில் ஒருவன்தான் நமது முருகன். காலையில் டிசோசா எழுந்து குளித்து உடை மாற்றி உண்டு வெளியேறும் வரை முருகன் குழுவினரின் ஒத்துழைப்பு இன்றியமையாது. இன்பமே வாழ்வாய் இருந்த துரையின் நாட்களில் சிலகாலமாக பயம் கூடிவிட்டது காரணம் சென்ற மாதம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரிடம் இருந்து வந்த ஒரு கடிதம்.
அதன் சாராம்சம் என்னவென்றால்: கூடிய சீக்கிரம் பிரெஞ்சுக்காரர்கள் ஆலம்பரை கோட்டையை ஆங்கிலேயர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி விடவேண்டியது. இதனை எதிர்க்கும் பட்சத்தில் பீரங்கி மற்றும் துப்பாக்கியின் உதவியுடன் வலுகட்டயாமாக கோட்டை கைப்பற்றப்படும் என்பதாகும்.
டிசோசா மேலிடத்துக்கு இதனை தெரிய படுத்திய பொழுது அங்கிருந்து வந்த பதிலின் சாராம்சம்: திரு மைக்கேல் டிசோசா கலெக்டர் அவர்கள் ஆங்கிலேயரின் வெற்றுகூச்சல்களுக்கு ஒன்னும் பயப்படவேண்டியது இல்லை. காரைக்காலில் இருந்து கப்பல் மூலம் நமது துருப்புக்கள் அங்கு தருவிக்கபடுவார்கள். ஏறக்குறைய ஆயிரம் வீரர்களும் அவர்களுக்கு தேவையான தளவாடங்களும் அனுப்புகிறோம் அவர்களைக் கொண்டு கோட்டை காவலை பலபடுத்தி வாணிபத்தை கவனிக்க வேண்டுகிறோம் என்பதாகும்.
மேற்கண்ட வீரர்களை தாங்கி வந்த கப்பல் ஆலம்பரைக்கு கிழக்கே வங்ககடலில் நங்கூரம் பாய்ச்சி கிடக்க வீரர்களை கப்பலில் இருந்து கோட்டைக்கு தருவிக்கவே நமது முருகனின் தந்தையான சோனப்பன் தோணித்துறைக்கு சென்றிருப்பதையும் அவருக்கு கூழ் கொடுக்க நம் முருகன் சென்றிருபத்தையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சரி வாருங்கள் முருகன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்
                              02
                                                                     பேரழகன்
                          
முருகன் அங்கு செல்வதற்கு முன்பே கப்பலில் இருந்து படகுமூலம் கரையை அடைந்த பிரெஞ்சு வீரர்கள் பலர் குழுமி இருந்தனர். கடலில் இருந்து கிளைத்து வந்த நீண்ட வாய்க்கால் போன்ற அமைப்பில் படகுகள் வந்துசெல்ல பொருட்கள் ஏற்றிஇறக்க எதுவாக தளம் அமைக்க பட்டிருந்தது. ஒரு படகு கடலுக்குள் செல்ல தயாராக இருந்த நிலையில் ஒரு படகு வந்து கொண்டிருந்தது, படகோட்டி ஒருவரிடம் தன் தந்தை குறித்து கேட்ட முருகனுக்கு அவர் கடலினுள் சென்று இருப்பதாக தகவல் கிடைக்கவே அவன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விட்டது.
“சரி நிக்கிற நேரத்துல புதுசா வந்துருக்க வெள்ளகாரனுங்க எப்டி இருக்காணுங்கன்னு பாப்போம் என்று நினைத்தவாறே அங்கு வந்து இறங்கியுள்ள பிரெஞ்சு சிப்பாய்களின் மீது கண்களை ஓட விட்டான் முருகன். பொதுவாக முருகனுக்கு பிரெஞ்சுகாரர்களை பிடிப்பது இல்லை, “ஆமா அவனுங்க வெள்ள தோலும் பூனைகண்ணும் என்று அலுத்து கொள்வான்.
கோட்டை காவலில் ஈடுபடுகிற பிராங்க்ளின் என்னும் பிரெஞ்சுக்காரன் கூட முருகனை கண்டாலே வழிந்து கொண்டு வருவான். முருகன் ஆண்களையே எப்பொழுதும் உற்றுபார்ப்பதை தெரிந்து கொண்டானா என்னவென்று தெரியவில்லை ஒருமுறை முருகனிடம் நேரடியாகவே உறவுக்கு வரும்படி கேட்டுவிட்டான். ஆனால் முருகனுக்கு வெள்ளைத்தோல் பூனைகண்ணை நினைத்தாலே வேப்பங்ககொழுந்தாய் இருப்பதால் இதுவரை அவனை தவிர்த்து வருகிறான். அந்த பிராங்க்ளினும் முருகனை இன்னும் துரத்திவருகிறான் என்பது வேறு கதை.
ஏற்கனவே காரைக்காலில் தங்கி இருந்ததாலோ என்னவோ அந்த சிப்பாய் கூட்டத்தில் கொச்சையாக பல தமிழ் வார்த்தைகள் பயன்பட்டு கொண்டிருந்தது. மேலோட்டமாக பார்த்து கொண்டிருந்த முருகனை ஒரு வீரன் மட்டும் கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்ததை முருகன் பிறகுதான் புரிந்து கொண்டான். ஒருகணம் அந்த பிரெஞ்சு வீரனும் முருகனும் நேருக்குநேர் பார்த்து கொண்டனர். அந்த பிரெஞ்சு காரனின் உற்றுநோக்கல் முருகனை என்னவோ செய்வது போல இருந்தது. மற்ற வீரர்களை போல இல்லாமல் சற்றே கூடுதல் உயரத்துடனும் ராணுவ சீருடையில் கட்டிலங்காளையாகவும் தெரிந்த அந்த வீரனின் தலை முடி செம்பட்டையாக இல்லாமல் கருமையாக இருந்தது கண்கள் பூனை போல பச்சையாக இல்லாமல் பழுப்பு நிறத்தில் இருந்தது. முதன் முறையாக ஒரு வெள்ளைத்தோல் வீரனை இத்துணை நேரம் வாஞ்சையுடன் முருகன் பார்த்து கொண்டிருப்பது நிச்சயம் ஆச்சர்யம்தான். அந்த வீரனும் முருகனின் மீது கூடுதல் கவனம் செலுத்தாமல் இல்லை.. நண்பர்களுடன் பேசுவது போல முருகனையும் பார்த்து கொண்டிருந்தான் அந்த வீரன். பிறகு முருகனிடம் ஏதோ பேச எண்ணியவன் போல கூட்டத்தில்ஹ சற்றே முன்னோக்கி நகர முற்பட்டான் அதற்குள் அந்த சிப்பாய் கூட்டம் மெல்ல கோட்டை நோக்கி நகர துவங்கவே அந்த பிரெஞ்சுக்காரனும் முருகனிடம் கண்களால் விடைபெற்று நடக்கலானான்.

தோனித்துறையில் இருந்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு சோதனைகளை கடந்து முருகன் கோட்டைக்குள் சென்ற பொழுது நடுமுற்ற மைதானத்தில் புதிய பிரெஞ்சு வீரர்கள் அணிவகுத்து நின்றிருந்தனர்.  வித்யாசமான தலைதொப்பி தொடைவரை நீண்டிருக்கும் சிவப்பு அங்கி சந்தனநிற கால்குழாய் என நின்றிருந்த வீரர்களின் நடுவே காலையில் தோணித்துறையில் சந்தித்த வீரன் நிற்கிறானா? என்று ஓரக்கண்ணால் பார்த்தபடியே அணிவகுப்பை கடந்து பெரியதுரையின் அறையை நெருங்கினான் முருகன்.

காலை சூரியன் ஒருபனை அளவு உயர்ந்து விட்ட நேரத்தில் பெரியதுரையின் அறைவாசலில் தமிழக தவில் நாதஸ்வர கலைஞர்கள் விடிகாலை நேரத்தில் வாசிக்கும் பூபாலத்தை கொண்டு துரையின் தூக்கத்தை கலைக்க முயன்று கொண்டிருந்தனர். அவர்களை கடந்து முருகன் உள்ளே சென்ற பொழுது துரையின் கட்டிலை சுற்றி முருகனின் சகபணியாளர்கள் மூவரும் கைகட்டி தலை குனிந்து டிசோசாவின் அருகே நின்று கொண்டிருந்தனர்.

கோட்டையின் மணிக்கூண்டு எட்டு மணிகளை அடித்து ஓய்ந்த பிறகு போர்வையை விலக்கி எழுந்த டிசோசா கண்களை துடைத்து முருகன் உள்ளிட்டோரின் பணிவிடையில் குளித்து முடித்து புதிய உடைக்குள் புகுந்து அரைமணி நேரத்தில் அணிவகுப்பை பார்வையிடும் பலகனி முற்றத்திற்கு வந்தான்.

அருகிலேயே அவனுக்கு தேவையான உதவி பொருட்களை எடுத்துகொண்டு முருகன் உள்ளிட்டோரும் நின்றனர்.

கோட்டைகாவல் தளபதி தாமஸ்காலிஸ் என்பவன் காரைக்காலில் இருந்து வந்திருக்கும் வீரர்களை பற்றி டிசோசாவுக்கு விளக்கினான். பேண்டுவாத்தியம் முழங்க ஆயிரம் வீரர்களும் நூறுநூறாக அணிவகுத்து வந்து டிசோசாவுக்கு வணக்கம் வைத்தனர். ஒவ்வொரு அணிவகுப்பிலும் ஒரு தலைமை வீரன் முதலாவதாக வந்தான்.

துரைக்கு அருகிலிருப்பத்தால் அணிவகுத்த வீரர்களை வெகுஅருகில் பார்க்க முடிந்தது முருகனால். ஐந்தாம் பிரிவு வீரர்கள் வரும் பொழுது முருகனை காலையில் பார்த்து பேசத்துடித்த அந்த பிரெஞ்சு வீரனான செபாஸ்டின் டைட்ரஸ் எனும் நம் கதையின் நாயகன் தலைமை தாங்கி வந்தான்.

இதுவரை துரையை கடந்த வீரர்கள் அனைவரும் வேறுபக்கம் திரும்பாமல் நேர்பார்வையோடு சென்றார்கள். இந்த செபாஸ்டியன் மட்டும் துரைக்கு வணக்கம் வைத்து விட்டு நகர்ந்த உடன் அருகில் நின்றிருந்த முருகனை பார்த்து யாருமறியாமல் கண்ணடித்து விட்டு திரும்பினான்.

அனைவரின் கவனமும் அணிவகுப்பில் இருக்க முருகன் மட்டும் செபாஸ்டியனை கவனிக்க அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம் கண்ணடித்ததில் திடுக்கிட்டு போய் சமாளித்து நின்றான் முருகன்.

செபாஸ்டின் குழுவினர் உரிய இடத்தில் போய் நின்றதும் குழு தலைவனான செபாஸ்டியன் துரையை நோக்கி இருப்பதுபோல் முருகன் என்னும் தமிழனின் ஆண்மையை கண்களால் பருக துவங்கினான்.

சிவப்புநிற துணியில் காதுகளுக்கு மேல் தலைப்பாகை கட்டியிருந்த முருகன் தனது சுருட்டை முடியை பின்பக்கம் அழகாக விரிந்த படி சீவி விட்டிருந்தான். கிராப் வெட்டிக்கொள்ளும் பிரெஞ்சுக்காரனான செபாஸ்டினுக்கு தோளில் படர்ந்த முருகனின் நீண்ட சுருட்டை முடியழகும். வெண்ணிற திருநீறு கொண்டு மூன்று கோடுகள் நெற்றியில் வரைந்திருக்கும் விதமும் அளவாக முறுக்கி விடப்பட்ட மீசையும், கட்டிளங்காளை போன்ற முருகனின் கறுத்த மேனியும் இதுவரை தமிழ்நாட்டில் கண்ட ஆண்களிலேயே இவன்தான் பேரழகன் என்று தோன்ற வைத்தது. 
                                                                             03
                                                தனியறையில் இருவர்                                 
வெள்ளைவெளேர் எனத்தோலும் செம்பட்டை மயிரும் வத்தி போன தேகமுமாக இருக்கும் பிரெஞ்சு வீரர்களுக்கு நடுவே செபாஸ்டின் மட்டும் கறுத்த மயிரும் திமிறிய புஜங்களும், வித்யாசமான குறுந்தாடியுமாய் தேவலோக சுந்தரானாக காட்சியளித்தான் முருகனுக்கு.

அணிவகுப்பு சடங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் முருகனும் செபாஸ்டினும் கண்களால் காமம் பரிமாறி முடிப்பதற்குள் செபாஸ்டின் பற்றி சிறு விளக்கம் கொடுத்து விடுகிறேன்.

பிரான்ஸ் நாட்டில் ஒரு புத்தகக்கடை நடத்தி வந்த அன்னாலூசி என்ற பெண்மணிக்கும் அரபுநாட்டு யவனன் ஒருவனுக்கும் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்த காரணத்தால் அராபியபிரெஞ்சு கலப்பாக ஒரு ஆண்குழந்தை பிறக்க இருந்த தருணத்தில் அந்த அராபியன், லூசியை ஏமாற்றிவிட்டு அரபுநாட்டுக்கு திரும்பிவிட்டான்.

அதை பற்றி ஒன்றும் கவலைப்படாத அந்த அம்மையார் தனக்கு பிறந்த குழந்தைக்கு செபாஸ்டியன் டைட்ரஸ்  என்று பெயரிட்டு தன் புத்தகக்கடை வேலைகளை கற்று தந்துகொண்டே இன்னொரு பிரெஞ்சுகாரனை காதலித்து வந்தார்.

செபாஸ்டினுக்கு வயது பதினெட்டை தாண்டும் பொழுது அந்த அம்மையார் மகனிடம் கூறியதாவது:

என்மகனே நீ எத்தனை நாள்தான் வாழ்க்கையில் ஒன்டிகட்டையாக இருப்பாய்? உனக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டியது அவசியமாகிறது, எனவே எனது காதலர் திரு மார்டீனை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டுக்கே சென்று விடுவது என முடிவு செய்துள்ளேன். உனக்காக நான் விட்டு செல்லும் இந்த புத்தக கடையை மூலதனமாக வைத்து உன்வாழ்க்கையை தொடங்கு.

அந்த நாட்டு கலாச்சாரத்தில் இதுஒன்றும் பெரியவிஷயமாக இல்லாததால் செபாஸ்டீனும் இதனை சாதாரணமாக எடுத்து கொண்டு இரண்டு ஆண்டுகள் வாழ்கையை நடத்தி வந்தான்,

மற்ற ஆண்களை போல பெண்களின் மீது நாட்டம் கொண்டவனாக இருந்திருந்தால இந்நேரம் ஒரு பெண்ணை காதலித்து குடும்பஸ்தனாகி இருப்பான் ஆனால் செபாஸ்டின்தான் நம் இனமாயிற்றே!!

தற்போது உள்ளது போல் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்கள் சேர்ந்து குடும்பம் நடத்துவது பெரிதாக இல்லையாதலால் வாழ்கையை வெறுமையாக ஒட்டிவந்த செபாஸ்டீன் தன் புத்தகக்கடையை விற்றுவிட்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சு ஆட்சிபகுதிகள் மற்றும் வாணிப தளங்களுக்கான பாதுகாப்பு படையில் சேர்ந்து கிழக்கு நோக்கி கப்பலில் பயணமாகி காரைக்காலில் வந்து இறங்கினான்.

காரைக்காலில் இது போன்ற கோட்டை கொத்தளங்கள் இல்லாததால் சாதாரண நகரகாவல் பணியில் இருந்தான் அவன்.

மக்கள் தொடர்பு அதிகம் உண்டானதால் தமிழ் மொழி பேசவும் புரிந்துகொள்ளவும் கற்றுகொண்டான். பதினெட்டு வயது ஆண்மகனை விட்டு புருஷனோடு சென்ற தன் தாயையும் சாகும் வரை குழந்தைகளும் பெற்றவர்களும் ஒன்றாக குடும்பமாக வாழும் தமிழ் குடும்பங்களையும் தாய்மார்களையும் ஒப்பிட்டு பார்த்து வியந்துபோனான் செபாஸ்டின்.

காரைக்காலில் நடத்தப்பட்ட மாங்கனி திருவிழாவில் மாங்கனிகள் வாரி இறைக்கப்படுவதை கண்டும் காரைக்கால் அம்மையாரின் கதையையும் தமிழக மக்களின் பண்பாட்டையும் பெரிதும் விரும்பிய நிலையில்தான் ஆலம்பரை கோட்டைக்கு இடமாற்றமாகி உள்ளான் செபாஸ்டின்.

சரி வாருங்கள் கதையில் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

அணிவகுப்பு திடலில் நம் நாயகர்கள் இருவரும் கண்களால் காமதாகம் பரிமாறிகொண்ட நிலையில் அணிவகுப்பு முடிந்து வீரர்கள் கோட்டையின் பல பகுதிகளுக்கும் காவலுக்காக நிறுத்த பட்டனர்.

ஒவ்வொரு நூறு வீரர்களின் தலைமை வீரர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் டிசோசாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டிசோசா தன் அறைக்குள் ஒவ்வொரு வீரனாக வரவழைத்து வழங்கு பத்திரங்கள் போன்றவற்றை சோதனை இட்டு பிரெஞ்சு மொழியில் பேசிக்கொண்டிருந்தான

அருகில் முருகனும் இன்னொரு பணியாளனும் அறையை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தனர். தலைமை வீரர்கள் வயது மூப்பு அடிப்படையில் டிசொசாவை பார்த்ததால் செபாஸ்டீன் கடைசி ஆளாக உள்ளே நுழைந்து சல்யூட் அடித்து நின்ற பொழுது, முருகனின் சகபணியாளனை அழைத்து டீ எடுத்து வர  சொல்லி அனுப்பி விட்டு செபாஸ்டீனை நோக்கி சிறிது நேரம் காத்திருக்கும் படி பணித்து கழிவறைக்குள் எழுந்து சென்றான் டிசோசா.

முருகனும் செபாஸ்டினும் முதல்முறையாக தனிமையில் இருக்கும் சூழல் தற்செயலாக உண்டானது.
இருவருமே சற்றும் எதிர்பார்க்காத இந்த சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருந்தனர்.

 முருகனை பார்த்து செபஸ்டியன் புன்னகைக்க முயன்றான். முருகனுக்கு செபாஸ்டீனின் கட்டழகையும் மிடுக்கான பிரெஞ்சு சீருடையும் பார்த்து மெலிதான காமம் தலைக்கேற அவன் குனிந்து கொண்டான். அதிகார நிலையிலிருப்பதால் கூச்சமின்றி பேச்சை துவங்கினான் செபாஸ்டீன்.

என் பேர் செபாஸ்டின் டைட்ரஸ் உன் பேர் என்னா? என்று கொஞ்சும் தமிழில் கொச்சையாக கேட்டு கைக்குலுக்க முன்வந்தான்.

எப்பொழுதும் அதிகாரமாக பேசும் பிரெஞ்சு வீர்களின் மத்தியில் செபாஸ்டின் தன்னை அறிமுக படுத்தி நட்பு ரீதியில் பேசவருவது முருகனுக்கு வியப்பாக இருந்ததை விட அவன் தெளிவாக தமிழில் பேசுவது கூடுதல் மயக்கத்தை கொடுத்தது.

தட்டுத்தடுமாறி சமாளித்து முருகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டவனை செபஸ்டீனின் பிரகாசமான முகமும் வித்தியாசமான தாடியும் பாடாய் படுத்தியது. அடுத்தவார்த்தை பேசுவதற்கு இருவரும் முயற்சிக்கும் நொடியில் கழிவறைக் கதவை திறந்து கொண்டு டிசோசா வௌியேறினான்.

                           04
                                                                கடற்கரையில்
தொடர்ந்து நடந்த சம்பிரதாய நிகழ்வுகளை முடித்து கொண்டு செபாஸ்ட்டீன் அறையை விட்டு வௌியேறும் போது முருகனை ஒரு ஏக்கப்பார்வை பார்த்து சென்றான். இனி உன்னை எப்பொழுது பார்ப்பேன் என்பதுபோன்ற ஆயிரம் கேள்விகள் அந்த பார்வையில் இருந்தது முருகனுக்கு புரியாமலில்லை.

அன்று மாலை கோட்டைப்பணிகளை முடித்து கொண்டு வீடுதிறும்பிய  முருகனுக்கு அவனது தாய் இரவு உணவுதனை எடுத்து வைத்தாள்.

கட்டுக்கடங்காத காமம் அவனை உணவிலிருந்து திசைதிருப்பியது. மீண்டும் மீண்டும் செபாஸ்டீனின் அழகிய உருவமும் திமிறிய புஜங்களும் கண்முன் வந்தது. செபாஸ்டீன் தூண்டிவிட்ட காமத்தீயை கை கொண்டு அணைக்கலாம் என கடற்கரையை நோக்கி நடந்தான் முருகன்.

வளர்பிறை சதுர்த்தசி நிலவானது கடலில் அலையெழும்புவதை தௌிவாகாக் காட்டியது. ஆள்நடமாட்டம் மிகுந்த  பகுதியை தவிர்த்து இடதுபுறம் இருக்கும் மீனவர் குடியிருப்புகளை கடந்து புன்னை மரம் நிறைந்த பகுதிக்கு சென்ற முருகனுக்கு ஓர் உருவம் கடலைநோக்கி மணலில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

இதே நேரத்தில் ஆளரவம் இன்றி இருக்கும் இடத்தில் இப்படியொரு உருவம் முருகனை அதிசயிக்க வைத்தது.  நிச்சயம் ஊர்காரர்கள் எவரும் இங்கு வந்து அமர வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து அருகில் கிடந்த நீண்ட மூங்கில் குச்சியை கையில் எடுத்து கொண்டு யாரது? என்று அதட்டினான்! முருகன்

அதிர்ச்சியடைந்த அந்த உருவம் திடுக்கிட்டு எழுந்தது.  அது அனிந்திருந்த  உடையில் இருந்து அவன் ஒரு பிரெஞ்சு வீரன் என்பதை உறுதி படுத்திக்கொண்டு தடியை கீழே போட்டு விட்டு மேலும் நெருங்கிய போது நிலவின் ஒளி அந்த உருவம் செபாஸ்டின் என்று காட்டியது முருகனுக்கு.
நான் செபாஸ்டின் என்றான் அவன்

என்னாது செம்பாட்டியா?? பாம்பாட்டிதான் தெரியும் எனக்கு என்று தன்பாணியில் நக்கலடித்தான் முருகன்.

வந்திருப்பது முருகன்தான் என்பதை அறிந்து கொண்ட செபாஸ்டீன் ஆச்சர்யக்கடலில் மிதந்து போனான்.
பாம்பாட்டியில்ல செபாஸடீன்என்றவன் என்ன இங்க பன்ற? என்று வித்தியாச தமிழில் வினவினான்.

அதநான் கேக்கனும் தொர நீ என்ன இங்க உக்காந்துருக்க ? என்று கேட்டான் முருகன்.

வேலை முடிஞ்சிட்டு மனசு கஷ்ட்டம் தனியா வந்துட்டன். நீ என்னை செபாஸ்டின்னு கூப்டு துரை னு கூப்டாத என்றான் அவன்.

மகிழ்ந்த முருகன் சரி உக்காரு செம்பு உக்காந்து பேசுவோம் என்றபடி உரிமையோடு அவனது கரத்தைபற்றி இழுத்து அமர்த்திக் கொண்டான். செபாஸ்டீனின் இதயம் முழுவேகத்தில் இரத்தத்தை சகல பாகங்களுக்கும் பாய்ச்ச எழுவேண்டிய பாகங்களை தூண்டி விட்டது.
பெரும்பாலும் பிரெஞ்சுகாரர்களை வேற்றுமையுடன் பார்கும் தமிழக இளைஞகர்களின் மத்தியில் தன் மனம் கவர்ந்த முருகனே இப்படி நடப்பது செபாஸ்டீனுக்கு காமத்தை கிளர்ந்தது.

எந்த கேள்வியும் கேட்க்காமல் முருகனின் வெற்று தோளில் கையை போட்டான செபாஸ்டீன். முருகனின் தலைமுடியில் இருந்து வந்த சீயக்காய் வாசனை செபாஸ்டீனை நான் உனக்குதான் அள்ளிக்கோ அள்ளிக்கோ என்றது.

கையை துணைக்கொள்ள வந்தவனுக்கு கடடிளங்காளை ஒன்றின் அனைப்பு கிட்டும் போது கசக்கவாசெய்யும் லீலைகளை அவனே துவங்கட்டும் என்று காத்திருந்தான் முருகன்.
செபாஸ்டீனின்  வாய் எதையோ பேசவும் கை எதையோ தீண்டவும் போராட கடைசியில் கையே வெற்றி பெற்று முருகனின் தோளை வாஞ்சையுடன் அழுத்தியது. முருகன் மெலிதாக செபாஸ்டினின் தொடை மீது  கைவைத்து அழுத்தினான்.

கனன்று கொண்டிருந்த காமதீபம் கட்டுககடங்காத காட்டுத்தீயாக பெருக்கெடுக்க  மணல்வௌியை படுக்கையாக்கி கடலை சாட்சியாக்கி தங்கள் காதல் காவியத்தின் முதல் அத்தியாயத்தை எழுதத்துவங்கினர் முருகனும் செபாஸ்டனும்.
இயங்கி முடித்த வேகத்தில் வியர்வை வழிந்து ஓடியது இருவர் தேகத்திலும் அணைத்தபடி நிலவை நோக்கி கிடந்தனர் 

மூச்சின்  சூடும் அணைப்பில் இருந்த அன்பும் அவர்களை காலம் எல்லை இல்லாத பிரபஞ்ச விளிப்பில் கொண்டு சேர்த்தது.

நேரத்தை அறியாமல் வாய்மொழி பேசாமல் காமத்தீயின் உதவி கொண்டு காதல் தீபம ஏற்ற இருக்கும் இருவரையும் தேடிக்கொண்டு கடற்கரையில் ஆட்கள் அலைவது அறியாமல் கிடந்தனர் முருகனும் செபாஸ்ட்டீனும்.

                                                                       05
                                                 கையிலொரு கடிதம்
முருகனின் தாய் முத்தம்மாள் வெகுநேரமாக மகனை தேடியும் காணாததால் கோட்டைக்குள் சென்றிருப்பானோ என எண்ணியபடி கோட்டைவாசலுக்கு வந்தார். கோட்டை வாயில் அகலத்திறந்து கிடந்தது. இரவு நேரம் என்பதால் ஆங்காங்கே தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு மிதமான போக்குவரத்துடன் காணப்பட்டது கோட்டைவாசல். காரணம் இன்றி உள்ளே செல்லமுடியாது என்பதால் வெளிவாயிலில் நின்ற ஒருகாவல் வீரனிடம் முருகன் உள்ளே சென்றானா என்று விசாரித்தாள்.
அவனுக்கு தமிழ் சரியாக புரியவில்லை போல.

அருகிலுள்ள வேறு பிரெஞ்சுக்காரனை அழைக்க அவனுடன் பேசிக்கொண்டிருந்த கோட்டை காவல் தளபதி பிராங்க்ளின் அருகில் வந்தான். முருகனை காணோம் என்று அவன் தாய் தேடிக்கொண்டிருப்பதும், காலையில் காரைக்காலில் இருந்து வந்த ஆயிரம் வீரர்களில் வெளியே சென்றவர்கள் எல்லோரும் வந்து விட செபாஸ்டியன் மட்டும் இன்னும் கோட்டைக்குள் வரவில்லை என்ற செய்தியும் ஏனோ பிராங்க்ளின் பொருத்தி பார்த்தான். அவன் பொருத்திபார்க்க சிற்சில காரணங்கள் இல்லாமலும் இல்லை.

இந்த பிராங்க்ளின் ஏற்கனவே முருகனிடம் சில சில்மிஷங்களை செய்திருக்கிறான் என ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில் இவனுக்கு செபாஸ்டியன் மீதும் ஒரு கண் விழுந்து விட்டது. செபாஸ்டினை எப்படி கைக்குள் போட்டுகட்டிலில் வீழ்த்தலாம் என்று இருந்தவனுக்கு முருகனையும் செபாஸ்டியனையும் சேர்த்து சந்தேகம் உண்டானதில் ஆச்சர்யம் இல்லை.

முருகன் இந்தபக்கம் வரவில்லை என அந்த அம்மாளுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு தானே காற்றாட வெளியே வருவது போல கோட்டையை விட்டு வெளியேறினான் பிராங்க்ளின். அந்த அம்மாள் கடற்கரை பக்கம் போயிருப்பான் பொறுமையாக வருவான் என்று அலுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட பிராங்க்ளின் கடற்கரை பக்கம் நடக்க துவங்கினான். நிலவொளியே போதுமான அளவு இருப்பதால் தீப்பந்தம் கொண்டுவருவது வீண் சந்தேகத்தை பலருக்கு உண்டாக்கும் என்று தன் சந்தேகத்திற்கு நியாயம் கற்பிக்கும் பொருட்டு கடற்மணலில் கால்புதைய நடந்தான் அவன். அடிக்கடி நடந்து செல்லும் கடற்பரப்பு ஆதலால் இருட்டில் கண்களை துழாவி நடந்தான் பிராங்க்ளின்.

கலவி வேகத்தில் கட்டிபிடித்து கிடந்த முருகனும் செபாஸ்ட்டினும் தன்னிலை மறந்து வியர்வைக் குளியல் நடத்தி கொண்டிருந்த பொழுது கடல் காற்றின் ஓசையை மீறி ஒரு ஆளரவம் கேட்கவே கட்டிபிடித்தபடி எட்டி பார்த்தனர் இருவரும். பிரெஞ்சு வீரன் ஒருவன் வருவது போல அரூபம் தெரிந்தது.

சுதாரித்து எழுந்த இருவரும் நிற்பது தகாது என்ற உணர்வுடன் புறப்படும் பொழுது

செம்பு! வறது பாத்தா எதோ உங்க ஆளுங்க போல இருக்கு நீ இந்த நேரத்துல கண்ணுல பட்டா தேவ இல்லாம சந்தேகம் உண்டாகும் நான் இப்படியே போறேன்.. நீ இந்த புன்னை கட்டுல புகுந்தீனா கொஞ்ச தூரத்துல ஒரு பாழும் மண்டபம் வரும் அத தாண்டி தெக்கால போனீன்னா கோட்டைக்கு போயிடலாம் போ போ என செபாஸ்டியனை துரித படுத்தினான் முருகன்.

அவன் சொன்ன வழி ஒன்றும் புரியவில்லை என்றாலும் குத்து மதிப்பாக புன்னைக்காட்டில் புகுந்து ஓடினான் செபாஸ்டியன். அவன் போகும் திசையை இருட்டில் வாஞ்சையோடு பார்த்துவிட்டு பிராங்க்ளின் வரும் திசையை நோக்கி நடந்தான் முருகன். இருவர் தரையில் கிடந்து எழுந்தது போலவும், ஒருவன் காட்டுக்குள் புகுந்து ஓடுவது போலவும் மங்கலான தோற்றம் தெரிந்ததையடுத்த பிராங்க்ளின் மிகுந்த பரபரப்புடன் வேகமாக நடக்கவும் எதிரே வந்த முருகன் நெருங்கினான்.

எங்க போய்ட்டு வர?

என்ன தொர சும்மா வெளிக்கு போய்ட்டு வரேன்

என்னது வெளிக்கா? அந்த காட்டுக்குள்ள ஒர்த்தர் ஓடுனா மாதிரி தெரிஞ்சிது அது யாரு?

என்னது ஓடுனா மாதிரியா? என்ன தொர சொல்லுற எனக்கு பயமா இருக்கு!! ஏற்கனவே இங்க மாயக்கா நடமாடுதுன்னு சொல்லுவாங்க நாந்தான் தைரியமா வருவேன்.

மாயக்கவா அது யாரு?

மாமாயினுஒரு அக்கா பொன்னகாட்டுக்கு பின்னால இருக்குற பாழும் மண்டபத்துல புருஷன் செத்துட்டருன்னு ஓடங்கட்ட ஏறுணுது, அது தன் புருஷன் ஆவியோட சேந்து இங்க நடமாடுதுன்னு சொல்லுவாங்க நான் நம்ப மாட்டேன் உன் கண்ணுல அகபட்டுருக்கு போல என்று பீதி கட்டினான் முருகன்.
முதலில் இதனை நம்பமறுத்த பிராங்க்ளின் முருகன் தொடர்ந்து செய்த ஒரு செயலில் ஆடிபோனான்.

என்ன பொய் சொல்லுறியா யாருன்னு சொல்லு அது? அங்க ரெண்டுபேரும் என்ன செஞ்சிங்க?

என்ன தொர இதைக்கூட நம்ப மாட்டுற மாயக்கா வந்தா மல்லிகப்பூ வாசம் அடிக்கும்னு சொல்லுவாங்க!! என்றபடி தன் கட்டுகுடுமியை அவிழ்த்தான். மாலையில் வீட்டு வாசலில் மலர்ந்திருந்த மல்லிகை மலர்களை ஒரு பிடிபறித்து கொண்டைக்குள் வைத்து முடிந்திருந்தான் முருகன். குடுமியை அவிழ்த்த உடன் அந்த மலர்கள் காற்றில் மனம் பரப்பி தரையில் விழுந்ததை கவனிக்காத பிராங்க்ளின் மல்லிகை வசனைக்கும் மாயக்காவுக்கும் பயந்தபடி

ஆமா எதோ பூ வாசம் அடிக்கிற மாதிரி இருக்கு என்றான்
ஓ!! பூவாசமும் அடிச்சுடுச்சா எனக்கு ஒன்னும் தெரில அந்நிய ஆளுன்னு உன்னதான் மாயக்கா தொடர்து போல வா தொர ஓடிடலாம் என்ற முருகன் ஓட்டமெடுக்க முருகனோடு சேர்ந்து ஓட்டம் பிடித்த பிராங்க்ளின் கோட்டைவாசலில் வந்து நின்றான்.

சிரிப்பை கட்டுபடுத்த முடியாத முருகன் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பொழுது. உணவருந்த கைகால்களை கழுவ கொல்லைக்கு சென்றான். நிமிர்ந்த பொழுது கோட்டை மதிலில் நிற்கும் பிரெஞ்சு வீரர்கள் தெரிந்தார்கள். மனம் ஏனோ செபாஸ்டியனை நினைத்தது. அவனது வேகம் கொடுத்த தாகமும் ஆண்மை கொடுத்த மயக்கமும் ஏனோ மீண்டும் அவனை பார்க்க தூண்டியது. மெல்ல மெல்ல காதல் அவனை ஆட்கொள்ள துவங்கியிருந்ததை அறியாமல் தூங்கி போனான் அவன்.

புன்னைகட்டுக்குள் புகுந்து சென்ற செபாஸ்டியன் பொத்தாம் பொதுவாக ஓடியதில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் உயரமான கோட்டைமதிலை இலக்காக வைத்து ஓடி கோட்டை வாயிலை அடைந்து உள்ளே சென்ற அதே நேரம் பிராங்க்ளின் கோட்டை வாயிலை அடைந்து செபாஸ்டியன் வந்து விட்டதை அறிந்து உள்ளே சென்றான். சிறிது தொலைவிலேயே செபாஸ்டின் போய்கொண்டிருக்க. அதிகாரத் தோரணையில் அழைத்தான் அவனை. செபாஸ்டின் திரும்பி பார்த்து ஓடி வந்து சல்யூட் வைத்தான்.

பிரெஞ்சு மொழியில் இருவரும் பேசிக்கொண்ட சாராம்சம் என்னவென்றால் செபாஸ்டியன் ஊரை சுற்றிபார்க்கத்தான் வெளியே சென்றான் என்றும் கடற்கரை பக்கம் போகவில்லை என்றும் கூறினான். அதனை அரைகுறையாக நம்பிய பிராங்க்ளின் திரும்பி சென்ற செபாஸ்டியன் சட்டையை பார்த்தான் அது வியர்வையில் நனைந்திருந்ததோடு கொஞ்சம் கடல்மணல் ஒட்டிகொண்டிருந்தது ஒட்டியிருந்த மணல்துகளை எண்ணி மறந்தே போனான் கடிதத்தை.

-   தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..