பக்கங்கள்

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஆலம்பரை கோட்டை (பாகம் II)



                                                                         6
                              உடைக்குள் மறைத்து

இரவுநேர உடைக்குள்புகுந்து தமிழகபாணியில் சுட்டுதரப்பட்ட தோசைகளை துவையல் தொட்டு தின்றுவிட்டு படுக்கசென்றான் செபாஸ்டியன், முருகனின் உடல்மனம் இன்னும் அவனிடம் வீசிக்கொண்டு இருப்பதாக தெரிந்ததது. என்ன ஒரு அணைப்பு என்ன ஒரு சுவை என்ன வேகமான இயக்கம் என முருகனையே முழுதும் நினைத்தவனுக்கு சக நண்பர்கள் பாய்படுக்கைகளை சுருட்டி கொண்டு எங்கோ புறப்படுவது தெரியவே என்ன வென்றுவிசாரித்தான். அவர்கள் கோட்டையின் நிலாமுற்றத்துக்கு படுக்க சென்றுகொண்டிருந்தனர். இவனும் சேர்ந்து கொண்டான். கிழக்கிலிருந்து மேற்காக கோட்டையின் தென்புறத்தில் இருக்கும் நீளமான மச்சு அது. செங்கல் பதிக்கப்பட்ட தரையில் குளுமையாக கடற்காற்று வீச படுத்து கொண்டான் செபாஸ்டியன்.

மறுநாள் பொழுது விடிந்த பொழுது செபாஸ்டியனின் படுத்த இடத்தில இருந்து எழுந்து பார்த்தான். ஆலம்பரை கடற்கரை பட்டினம் முழுவதும் தெரிந்தது. கோட்டையின் சுற்றுப்புற வீதிகளின் பல வீடுகளின் கொல்லை புறம் தெளிவாக தெரிந்தது. அதில் ஒருவீட்டின் கொள்ளையில் முருகன் போர்வையுடன் மாமரத்தடியில் உறங்குவதும் தெரிந்தது. உற்சாகத்தின் உச்சிக்கு போய் முருகனின் அவிழுந்துகிடக்கும் கேசத்தையும் அழகு ததும்பும் முகத்தையும் பார்த்து கொண்டிருந்தான் செபாஸ்டியன்.

 சிறிது நேரத்தில் யாரோ ஒருபெண் போர்வையை முழுவதும் விளக்கி கீழே எறிந்துவிட்டு கடுமையாக பேசிச்சென்றாள். கண்களை விழித்து பார்த்த முருகன் கைகள் இரண்டும் மேலே தலைக்கு அண்டை கொடுத்த படி மல்லாக்க படுத்திருந்தான். அவனது காட்டுடல் மேனியழகு காந்தவிசை போல ஈர்க்கவே முருகனின் மீது ஒட்டிக்கொள்ளும் எண்ணத்தில் துடிக்கும் இரும்பு துண்டாய் தவித்தான் செபாஸ்டியன். சிறிது நேரம் அவன்பார்வை நிலைத்தது ஆனால் அதற்குள் வீரர்கள் பகல்நேர கோட்டை காவலை கவனிப்பதற்காக ஒவ்வொருவராக எழுந்து இறங்கி சென்றனர்.

அதனல் செபாஸ்டியனும் இறங்கினான்.
நேற்று அடித்த காம மழையில் காதல் காளான் முளைத்திருக்க செபாஸ்டியானும் முருகனும் நாள் முழுவதும் கிடைக்கும் சந்தர்ப்பத்தை கண்களால் பார்த்து இரசித்துகொண்டனர். பிறகு இரவு நேரம் இடத்தை மாற்றி மாயக்கா மண்டபத்தில் புசித்துகொண்டனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் ஒன்றோடொன்றாய் கலந்த பாலும் சக்கரையுமாய் கிடந்தனர். முதல்நாள் போல நேரம் கடத்தாமல் காமலீலைகளையும் காதல் விளையாட்டுகளையும் முடித்து கொண்டுவிடுவதால் பிரங்க்ளினுக்கு தேடுவதற்கு அவசியம் இல்லாத சூழ்நிலை உண்டாகி விட்டது. இவர்களும் கவலை இன்றி காலவெள்ளத்தில் காதல் படகோட்டினர்.

அடித்துவந்த வெள்ளம் அணையில் தேங்குவது போல வந்தது ஒரு சோதனைக்காலம் மாரியம்மன் திருவிழாவாக. அன்று பெரிய துரையின் பிறந்த நாள் ஆதலால் கோட்டை விழாக்கோலம் கொண்டிருந்தது. அனைத்து பிரெஞ்சு வீரர்களுக்கும் சீமைசாராயமும் கோழிக்கறியும் வேண்டும் அளவுக்கு தரபட்டது. பாண்டிச்சேரியில் இருந்து நிறைய தாசிகள் வந்திருந்தனர். ஆடல் பாடல் கூடல் காட்சிகள் வெகு விமரிசைகாக அரங்கேறியது கோட்டையின் உள்ளே, உணவுப் பணியாளர்களும் தாசிகளையும் தவிர வேறு தமிழர்களுக்கு அம்மாதிரியான கொண்டாட்டங்களில் அனுமதி இல்லை.

செபாஸ்டியனுக்கு ஒருபுட்டி சீமை சாராயமும் கோப்பையும் வேண்டுமட்டும் பொறித்த கோழி இறைச்சியும் கிடைத்தது. அவற்றை அங்கேயே சாப்பிட மனம் இல்லாதவன் அன்பு காதலனுக்கு கொடுக்கும் நோக்கத்தில் உடைக்குள் மறைத்து எடுத்து கொண்டு கோட்டையை விட்டு வெளியேறினான்.
பனங்கள்ளையே குடித்து அலுத்து போன முருகன் சீமை சாராயம் குடிக்கும் ஆவலை ஒருமுறை செபாஸ்டியனிடம் சொல்லியிருந்தான். அதன் பொருட்டே ஒருசில சிரமத்தை கடந்து மாயக்கா மணடபத்தில் இருக்கும் முருகனை நோக்கி பயணிக்கிறது இந்த சீமை சாராயமும் கோழிக்கறியும்.

                            7
                    பிரான்ஸ் பயணம்

வழக்கமாக வரும் நேரத்தை விட இன்று கூடுதல் நேரமாகி விட்டதாய் சிறிது நேரம் கோவித்துகொண்டான் முருகன். அந்த போலிக்கோபத்தை இரசிப்பது போல கெஞ்சிகொண்டு அவனது முகத்தை பிடித்து நச்சென ஒரு முத்தத்தை பதித்தான் செபாஸ்டியன். உடனே பதறிஎழுந்த முருகன்.

அய்யயோ இன்னைலருந்து பத்து நாளுக்கு விரதம் என்றான்.
விரதமா? என்று கேட்டபடியே உடைக்குள் இருந்த கோழிக்கறியையும் சாராயத்தையும் வெளியே எடுத்து வைத்தான் செபாஸ்டியன்.

அய்யயோ இதுலாம் என்ன?

உனக்காகத்தான் முருகா!! எனக்கு கொடுத்தத சாப்பிடாம கொண்டு வந்தேன். சீக்கிரம் வா ரெண்டு பேரும் சேந்து குடிப்போம் என்றான். முருகனுக்கு மனம் மிகவும் குழைந்தது.

தன் அன்புக்கதலனை வாஞ்சையுடன் பார்த்தான்.
இல்ல செம்பு இதலம் என்னால இன்னைக்கு சாப்பிட முடியாது
ஏன்? என்றபடி நிமிர்ந்தான் அவன்

எங்க ஊர் மாரியம்மனுக்கு காப்பு கட்டியிருக்கு தீமிதிக்கிற வரைக்கும் விரதம் என்றான் அவன்.
செபாஸ்டியன் ஒன்றும் புரியாமல் விழிக்கவே முருகன் தொடர்ந்தான்

எங்க கடவுள் மாரியம்மனுக்கு வருசா வருஷம் தீமிதி திருவிழா பன்னுவோம். எனக்கு வேண்டுதலிருக்கு நானும் தீமிதிக்கணும் அதுனால நான் இன்னைலருந்து திருவிழா நாள் வரைக்கும் கறிமீன் திங்காம பாய்ல படுக்காம உன்னோடையும் படுக்காம விரதம் இருக்கணும் ன்னு கையில் கட்டியிருந்த மஞ்சள் நூலையும் வேப்பிலையும் காட்டிய பொழுது செபாஸ்டியனுக்கு ஆசையுடன் கொண்டு வந்த பொருள் வீணாய் போய்விட்டதென்று வருத்தமாக இருந்தது.

நான் சாப்பிடலனா பரவா இல்ல நீ சாப்பிடு என்று எடுத்து கொடுக்க வந்த முருகனிடம் ச்சே ச்சே நீ விரதம் இருக்கறீன்னா நானும்தான் விரதம். இனிமே நானும் உன்ன மாதிரி இருக்குறேன் நீ எப்ப பழைய மாதிரி ஆவுறியோ அதுவரைக்கும் நானும் உனக்காக இருப்பேன் என்று கூறி கட்டி பிடிக்க முனைந்தவன் தயங்கி நின்றான்.

ச்சே இதுமாரி அன்பா கட்டிபுடிச்சுகிறதுல தவறு இல்லடா என்று முருகன் அவனை இழுத்து அனைத்துக்கொண்டான்.
இருவரும் உணர்ச்சி பெருக்கெடுக்க மண்டபத்தில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்

ஆம்பளையும் பொம்பளையும் இதுமாதிரி பழகுனா கல்யாணம் பண்ணிப்பாங்க நாம பழகுறமே இதுக்கு என்ன முடிவுடா செம்பு? என்றான் முருகன்.

ஏன் நாம கல்யாணம் பண்ணிப்போம் என்று சாதாரணமாக சொன்னான் அவன்.

முருகனுக்கு சிரிப்பாக இருந்தது. அது எப்டி ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? ஊர் உலகம் என்ன சொல்லும் என்று அடக்க முடியாமல் சிரித்தான் முருகன்.

ஏன் எங்க நாட்டுல இதுலாம் சகஜம் கல்யாணம்ன்னு பண்ணிக்க மாட்டங்க ஆனா ஒண்ணா சேந்து வாழுவாங்க. ஆணும் ஆணும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எங்க ஊர்ல அனுமதி கிடையாது ஆனா சேந்து ஒரு வீட்ல வாழுறதுல யாரும் ஆட்சேபனை பண்ண மாட்டாங்க. என்று செபாஸ்டியன் சொல்லும் போது

ஆச்சர்யத்தில் விழி விரிந்தான் முருகன்.
அப்படின்னா நாம் உங்க ஊருக்கு போய்டுவோமா? என்று விளையாட்டாக சிரித்த படி கேட்டான் முருகன்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத செபாஸ்டியன். முருகனை இருக்க தழுவிக்கொண்டு முருகா இத நானே உண்ட கேக்கணும்ன்னு நெனச்சேன் ஆனா நீங்களாம் தாய்மண்ணின் மீது அதிக பற்று கொண்டவர்கள், நான் இது மாதிரி கேட்டா என்ன தப்பா நினைப்பனு கேக்கல, உண்மையா என்னோட வந்துடறியா முருகா? நாம் பிரான்ஸ்க் கு போய் சாவுற வரைக்கும் ஒன்னாவே இருப்ப்போம், என்னால நீஇல்லாம இருக்க முடியாது முருகா என்று கண்ணீர் விட்டு கசிந்தான் செபாஸ்டின்.

முருகனுக்கு மனம் நெகிழ்ந்தது. நீ மேகத்திகாரன் வெள்ளைத்தோல் நான் கருப்புதோல் அடிமைநாய் உன்னோட எப்டி அங்க வர முடியும் என்று கெஞ்சினான் முருகன்.

ஏன் முடியாது எங்கள்ள பணிவிருப்பம் இல்லாதவங்கள பிரான்ஸ்க்கே திருப்பி அனுப்புறதுக்காக அடுத்த மாசம் ஒரு கப்பல் பாண்டிச்சேரில இருந்து கெளம்புது. அதுல ஆயிரகணக்கான இந்திய சேவகர்களையும் அழைச்சிட்டு போறாங்க. அங்க உள்ள பிரான்ஸ்காரங்க பெரும்பாலும் பெண்களைத்தான் அடிமையா விலைக்கு வாங்குவாங்க ஆண்கள அதிகமா விலைக்கு வாங்க மாட்டாங்க. நீ பிரான்ஸ் போறதுக்கு விருப்பம் தெரிவிச்சு கோட்டையில உன் பேர பதிஞ்சின்னா நானும் வேலை வேணாம்னு எழுதிகொடுத்துட்டு கெளம்பிடுவேன். எப்பாடு பட்டாவது உன்ன என்காசு பணத்தலாம் கொட்டி வாங்கிடறேன்.

அப்பறம் நமக்கு இடையில யாரும் இருக்க முடியாது.
அதிகாரமெல்லாம் இங்கதான். உன்ன நான் விலை கொடுத்து வாங்கிட்டேன்னா என்ன தவிர வேற யாரும் உன்ன சீண்ட முடியாது என்று செபாஸ்டியன் கூறிய பொழுது முருகனின் தாய் அண்ணன் தந்தை எல்லோரும் முருகனுக்கு கண் முன் வந்து சென்றனர். எல்லோரையும் மீறிக்கொண்டு செபாஸ்டியன் முன்பாக தெரிந்தான்.

உயிர் போனாலும் இனி செபாஸ்டியனுடன் என்று முடிவு செய்து கொண்டான். ஆனால் ஆச்சர்யம் விலகவில்லை அவனுக்கு,

இதெல்லாம் நடக்குமா செம்புவும் நானும் காலமுழுதும் ஒன்னாக இருக்க முடியுமா என்று யோசித்தவனுக்கு செபாஸ்டியனொடு வாழ வேண்டும் என்ற ஆசையிலும், இங்கிருந்தால் ஒரு பெண்ணை கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கப்பலேறி பிரான்ஸ் செல்லுவது என்று முடிவு எடுத்தான். செபாஸ்டியனிடம் சம்மதம் கூறினான்.

காலவெள்ளத்தில் இனி அவர்களை பிரிக்க எவருமில்லை என கற்பனை கோட்டை கட்டினர் இருவரும், ஆனால் ஆலம்பரை கோட்டையை நெருங்கி கொண்டிருக்கும் ஆபத்தை அங்கு யாரும் அறிந்திருக்க வில்லை.
8
                               தீமிதி
ஆலம்பரை கோட்டைவாசலில் இருந்து நடக்கும் தொலைவில் இருக்கிறது பொன்மாரியம்மன் கோயில். மிகப்பழங்காலம் முதல் அந்தக்கோயில் அங்கு இருந்து வருகிறது. பல்வேறு அரசர்களின் காலத்தில் பல்வேறு மானியங்களையும் பல்வேறு பெயர்களையும் பூண்டு அந்த பகுதியில் அருள்பாலிக்கும் அம்மனுக்கு இந்த காலத்தில் பொன்மாரியம்மன் என்ற பெயர். அம்மனுக்கு வருடாவருடம் ஆலம்பரை கிராமத்தாரால் வெகுவிமரிசையாக நடத்தப்படும் தீமிதிதிருநாளுக்கு காப்புக்கட்டி பத்துநாள் ஓடியே போய்விட்ட நிலையில் இன்றுமாலை தீமிதி. பொழுது விடிந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஆலம்பரை கிராமத்து பெண்கள் மாவிளக்கு பூமாலை என்று தெய்வகாரியங்களில் ஈடுபட்டிருக்க முருகனின் தாயும் அதே வேலையில் ஈடுபட்டு கொண்டே கோட்டைக்கு புறப்படும் முருகனை கேள்விகேட்டு கொண்டிருந்தாள்.
நல்லநாள் பெருநாள் கூடபாக்காம இன்னைக்கு வேலைக்கு போய்தான் ஆவணுமா? தொரைகிட்ட இன்னிக்கு தீமிறினு சொல்லி விடுப்பு கேக்க வேண்டியதான. ங்கொப்பாரும் தோனிக்கு பூட்டாரு, ஒன்ணனும் எங்கயோ கெளம்பி பூட்டான் நீயாவது ஊட்ல இருப்ப போய் மாவெளக்கு போடலாம்னு பாத்தேன் என்றாள்.
ம்மா செத்த சும்மா கெடக்கியா அப்பாரும் அவனும் செத்தகழிச்சு வருவாங்கள அப்ப இட்டு போயேன், நான் தீமிறிக்க சீக்கிரமே வந்துடுவேன் என்று சொல்லியபடி தலைப்பாகையை கண்ணாடியில் சரிபார்த்து கொண்டு வேகமாக நடைபோட்டான் கோட்டைக்கு.
கோட்டைவாசலில் ஊர்காரர்கள் சிறுபந்தலிட்டு தோரணம் கட்டிகொண்டிருந்தார்கள். பிரெஞ்சுவீரர்கள் அதனை ஆவலுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். கோயில் திருவிழாவுக்கு மரியாதை நிமித்தமாக சிறப்பு அழைப்பு டிசோசாவுக்கு வைக்க பட்டுள்ளது. அது எப்படி தீயில் நடக்க முடியும் கால் சுடுமே?! என ஆச்சர்யமான அந்த வைபவத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பது பெரும்பாலான பிரெஞ்சு வீரகளுக்கு ஆவலாகவும் இருந்தது.
யாரோ சிலர் தீயில் இறங்குவதே அவர்களுக்கு இத்துணை ஆவலாய் இருக்க தன்ஆசை காதலன் தீயில் இறங்க போகிறான் என்ற எண்ணமே செபாஸ்டியனுக்கு திகிலாய் இருந்தது. கடந்த பத்து நாட்களாய் மாயக்கா மண்டபத்தில் இதுகுறித்து செபாஸ்டியன் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் கூறியே அலுத்துவிட்டான் முருகன்.
எப்டிடா முருகா கால் சுடாதா, வேற ஏதும் கடினம் இல்லாம வேண்டிக்க கூடாதா? இத நீ செய்யலைன்னா என்ன ஆகும்? கால் சுடுமா? நெருப்பு எரியும் போது அதுல இறங்குனா துணிபத்திக்காதா?
அய்யோ மாரியாத்தா இந்த அசடுகிட்ட இருந்து என்ன காப்பாத்தேன்
நெருப்பு எரியும் போது இறங்க மாட்டாங்க, விறகுக்கரி கனகனன்னு கெடக்கும் அதுல இறங்கி போவாங்க,
அது எப்டி சுடாதுன்னு சொல்ற..
அது அப்டித்தான் சுடாது எல்லாம் மாரியாத்தவோடா சக்திதான்.
இதுவரைக்கும் யாருக்குமே சுட்டது இல்லையா..?
இப்ப நீ இதேதான் பேசிகிட்டு இருப்பியா.. இல்லனா நான் போகவா?
செபாஸ்டியனுக்கு ஆர்வம் கொப்பளித்தது அடக்க மாட்டாதவனாய் கேள்விகேக்க, முருகன் இப்படி பதில் சொல்லவும் அவனுக்கு முகம் சுருங்கியது. திரும்பி உட்கார்ந்து கொண்டான்.
அய்யயோ!! என் செல்ல சொம்பு இல்ல.. சும்மா வெளையாட்டுக்கு சொன்னண்டா.. என்று அருகில் வந்து அமர்ந்து கொண்டு செபாஸ்டியனை தோளில் சாய்த்து கொண்டான்.  வெற்று மார்பாக இருந்த முருகனின் உடலில் இருந்து மெல்லிய சந்தன வாடையும் வியர்வை வாடையும் கலந்து வந்து செபாஸ்டியனை பாடாய்படுத்தியது. மிகவும் கடினப்பட்டு தன்னை அடக்கி கொண்டான் செபாஸ்டியன். ஏறக்குறைய ஒன்பதுநாள் பல்கடித்து கொண்டு இருந்து விட்ட நமக்கு இன்னும் ஒருநாள் முடியாதா என்று நினைத்தபடி முருகனின் மார்பில் ஏக்க பெருமூச்சை வெளிபடுத்தவே அந்த சூடான காற்று முருகனின் மார்பு முடிகளில் அலைந்து மத்திம பாகத்தின் வழியே வெளியேற, முருகன் சூடாக, முருகனின் வேல் எதற்கோ தயாராகி கொண்டிருந்தது.
இருவரும் தெய்வத்துக்கு மதிப்பளித்து விலகி அமர்ந்தனர்.  முருகா நாளைக்கு மதியம் பிரான்ஸ் போக விருப்பம் இருக்குற ஆளுங்கள பேர் சேக்குறாங்க நீ நாளைக்கு வருவியா மாட்டியா? என்றுகேட்டான்  செபாஸ்டியன்
என்ன இப்டி கேக்குற நாளைக்கு சாயுங்காலம்தான் தீமிறி நான் கண்டிப்பா வருவேன் வந்து என்பேர கொடுக்குறேன். சரி நீ சாயந்திரம் கோயிலுக்கு வரமுடியுமா அதுக்குள்ளே வேல முடிஞ்சிடுமா?
ம்ம் என்னனு தெரில.. இருந்தாலும் அந்த நேரத்துல வரது கடினம்தான். கோட்டை மதில்ல நின்னாதான் கோயில் தீக்குண்டம்லாம் நல்லா தெரியுதே இங்கயே இருந்து பாக்குறேன். நீ எல்லாத்தையும் முடிச்சுகிட்டு சீக்கிரமா மாயக்கா மண்டபத்துக்கு வந்துடு உனக்காக நான் வேலையலாம் முடிச்சிட்டு காத்திருப்பேன் என்றான் செபாஸ்டியன்

                                 9
                             மருமகன்
மாலைநேரம் வந்தது கோட்டை காவலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு வீரர்கள் ஆவலுடன் கோயில் பகுதியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். செபாஸ்டியன் கோயிலுக்கு நேரே அமைக்க பட்டிருக்கும் தீக்குழிக்கு நேராக நின்று கொண்டான் அந்த இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது கோயில் வாளாகத்தில் நடக்கும் சிறுஅசைவு கூட துல்லியமாக தெரிந்ததால் முருகன் எப்பொழுது வருவான், வந்தால் தீயில் இறங்கும் பொழுது எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் அவனுக்கு, கணகணவென்று எரியும் நெருப்பு எப்படி சுடாமல் இருக்கும் அதையும் பார்த்து விடுவோம் என்ற ஆவல் மற்றைய வீரர்களுக்கு. பொதுவாகவே அது ஒரு வியாபார தளம் என்பதால் நிறைய வனிகர்கள் வந்து தற்காலிக கடைகள் அமைத்திருந்தனர். கோயிலின் ஒருபுறத்தில் நாடக மேடை ஒன்றும் பாங்குற அமைக்கப்பட்டிருந்தது.
கடற்கரையில் இருந்து பூங்கரக ஊர்வலத்துடன் தீமிதிக்க போகும் அன்பர்களும் முருகனும் பக்தி பரவசமாக உறுமியும் உடுக்கையும் ஒலிக்க ஆலயத்தை நெருங்கி கொண்டிருந்தானர். உள்ளூர் மக்கள பக்தியுடனும் பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வத்துடனும் பார்த்தனர். ஏற்கனவே முந்தய ஆண்டுகளில் தீமிதி காட்சிகளை பார்த்திருந்த வீரர்கள் கூட ஆர்வத்தோடு பார்த்தனர். ஒவ்வொருவராக ஓட்டமும் நடையுமாக தீக்குழியில் இறங்கி வர, அதுவரை முருகனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் செபாஸ்டியன்.
முருகன் குறுக்குமாலை தரித்து கச்சம்கட்டிய வேட்டியுடன் அவிழ்ந்து கிடக்கும் கேசத்துடன் ஈரதேகத்தவனாய் கையில் வேப்பிலை கொத்து கொண்டு அம்மனை பரவசத்துடன் பார்த்து கொண்டிருந்தான். அப்போதுகூட அவனது கம்பீரமான அழகு செபாஸ்டியனை பிடுங்கி தின்றது. ஒருமுறையாவது இங்கு திரும்பி பார்க்க மாட்டானா? நான் இங்க நின்னு பாக்குறத அவன் பாக்க மாட்டானா என்று செபாஸ்டியன் ஏங்கி தவித்தான்.
முருகனுக்கு நெருப்பு எந்த துன்பத்தையும் தரக்கூடாது என்று தன் கடவுளை கண்மூடி பிரார்த்தித்தான். முருகனின் முறை வந்தது. ஆரவாரம் இன்றி முருகன் அழகாக நெருப்புமேல் நடந்து சென்று கரை ஏறினான். செபாஸ்டியனுக்கு ஆர்வம் கொப்பளித்தது. ஓடி சென்றுமுருகனை அனைத்து கொள்ளவேண்டும் போல இருந்தது. முருகன் சென்ற பிறகும் நூற்று கணக்கானோர் காத்திருந்தனர் ஆனால் அவர்களை காணும் ஆவல் ஒன்றும் செபாஸ்டியனுக்கு இல்லை, அதற்குள் இவனது பணி நேரமும் முடிந்து போயிருந்தது.  மற்ற நண்பர்கள் ஆர்வமாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க செபாஸ்டியன் மதிற்சுவர் படிகளில் இறங்கி வேகமாக ஓடினான். பெரும்பாலும் ஆளரவம் இன்றி கிடந்தது அவர்கள் தங்கும் இடம் சீருடையை களைந்து விட்டு செயற்கை நீச்சல் குளத்திற்கு சென்று முங்கிகுளித்தான், தேர்ந்தெடுத்த ஜிகினா சட்டை ஒன்றை எடுத்து மாட்டிகொண்டு விலை உயர்ந்த பிரான்ஸ் நாட்டு வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு இவன் கோட்டையை விட்டு வெளியேறிய நேரம் நன்கு இருட்டி இருந்தது.
தீமிதி முடிந்த கையோடு அரிச்சந்திர மகாராஜா நாடகம் துவங்கியிருந்ததால் பெரும்பாலான மக்கள் நாடக அரங்கின்முன்பு குவிந்திருக்க கோட்டைகாவலில் ஈடுபட்டிருக்கும் இரவு நேரக்காவலர்கள் கூட மதில்மேல் காலை தொங்கபோட்டு கொண்டு புரிகிறதோ இல்லையோ அந்த வேடிக்கையான நாடக மாந்தர்களின் ஒப்பனையையும் வினோத பாடல்களையும் இரசித்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் ஆலம்பரை நகரமே இன்னும் சிறுது நேரத்தில் சூழபோகும் மிகபெரிய ஆபத்தை அறியாமல்  களிப்பில் கிடந்தது.
செபாஸ்டியன் முருகனைக்கானும் ஆவலில் மாயக்கா மண்டபத்துக்கு சென்ற பொழுது ஏற்கனவே முருகன் வந்து காத்திருந்தான். அவனும் புதிதாக குளித்து அழகிய முறையில் உடையணிந்து மார்பை மறைக்காமல் தலைக்கு எளியதாய் ஒரு தலைபாகை கட்டி சந்தனம் மணக்க வந்திருந்தான்.
பத்துநாளாக அடக்கி வைத்திருந்த காமநதி கட்டாற்று வெள்ளமாய் பொங்கியது செபாஸ்டியனுக்கு முருகனை பார்த்த மாத்திரத்தில் ஓடி சென்று இறுக்கி அனைத்த படி கீழே விழுந்த வேகத்தில் வெறிபிடித்தவன் போல முருகனின் இதழ்களை பதம்பார்க்க துவங்கிவிட்டான் சற்றுநேரம் எதிர்பாராமல் நிலை குலைந்து போயிருந்த முருகன் ஆசைகாதலனின் ஆர்வத்தை வியந்தபடி கிடந்து தழுவி இன்பவெள்ளத்தை கூட்டினான். இதழ்கள் நான்கும் காலநேர எல்லைகளை கடந்து பற்களின் இடையே சிக்கி எச்சில் தேனில் ஊறிகொண்டிருக்க மெதுவாக ஆசைகாதலனை ஆசுவாசபடுத்தி முருகன் பேசத்துவங்கினான்.
செம்பு எழுந்திரு வா நம்ப வீட்டுக்கு போகலாம்
என்னது வீட்டுக்கா? அதெப்படி முடியும் வீட்டுக்கு போய் என்ன பண்ணுறது?
நீ வாயேன் சொல்லுறேன்
அதெப்புடிடா நான் உங்க வீட்டுகுள்ள வரும் போது எல்லோரும் பார்த்துடுவாங்களே
அதுக்கும் ஒரு வழி வச்சிருக்கேன் வா என்று மாயக்கா மண்டபத்தின் பின்புறமாக கொஞ்ச தூரம் இருட்டில் அழைத்து சென்றான் செபாஸ்டியனை. கடற்கரையின் ஓவென்ற சத்தம் ஒருபக்கம் நாடக கலைங்கர்களின் பாடல்கலுடன் கூடிய கணீர் கணீர் என்ற மேளசத்தம் ஒருபக்கம் என்று ஆலம்பரை அமைதி கொண்டிருக்க முருகனையும் செபாஸ்டியனையும் கண்டுகொள்ள யாருமில்லை அங்கு
அவர்கள் இருவரும் கட்டிபிடித்தபடி ஒரு ஒத்தயடிபாதை வழியே நடந்தனர் சிறிது தூரத்தில் சிலவீடுகளின் கொல்லைபுறம் தெரிந்தது அதுஒரு சிறியதெரு அதனை கடந்ததும் முருகனின் வீட்டுகொல்லை புறத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். முருகனின் தாய் அண்ணன் அப்பன் என மூவரும் நாடகம் பார்க்க சென்றிருக்கும் இந்த தனிமையான தருனத்தை அழகாக பயன்படுத்தினான் முருகன்.
வீட்டுக்கு வாழவரும் மருமவப்பிள்ளை வாசவழியா வரணும்! நீ கொல்ல வழியா வார என்று மெலிதாக அலுத்து கொண்ட முருகன் உள்மாடத்தில் எரிந்து கொண்டிருந்த சிறிய அகல் தீபத்தை எடுத்து செபாஸ்டியனின் கைகளில் கொடுத்து இன்னொரு அறைக்குள் அழைத்து சென்றான். அகல் விளக்கின் சிறிய வெளிச்சத்தில் துணிசட்டம் ஒன்றில் வரையபட்டிருந்த மாரியம்மன் படத்திற்கு கீழே மஞ்சளில் வட்டம் எழுதி அதில் குங்கும பொட்டு இடப்பட்டிருப்பது தெரிந்தது.
அது என்வென்று கேட்ட செபாஸ்டியனுக்கு அதுதான் தங்கள் வீட்டு பூஜை அறை என்பதையும் வீட்டுக்கு மருமகளாய் வரும் பெண் திருமணம் முடிந்து இல்லத்திற்குள் முதன்முறையாக நுழைந்த உடன் இந்த அறைக்கு வந்து தீபமேற்றுவாள் இது எங்க சடங்கு என்று விளக்கிவிட்டு அர்த்த புஷ்டியாக செபாஸ்டியனை பார்த்தான் முருகன்.
                                 10
                           இடிமுழக்கம்
முருகனின் தேவை என்ன என்பதை உணர்ந்தவனாய் தன் கையிலிருக்கும் அகல் தீபத்தை கொண்டு அங்கு கீழே வைக்க பட்டிருக்கும் காமாட்சிவிளக்கை சுடரவிட்டான் செபாஸ்டின். அவன் ஏற்றிவைத்த தீபம் அந்த அறையில் வெளிச்ச ரேகைகளை பரப்பும் முன்னரே முருகனின் உள்ளத்தில் பாசரேகைகளை படரவிட்டுவிட்டது. அகல்விளக்கை கீழே வாங்கி வைத்த முருகன் தன் உடல்பலம் முழுவதையும் பிரயோகித்து தன்னை போன்றே ஆஜானுபாஹுவான உடற்கட்டு கொண்ட செபாஸ்டியனை தூக்கி கையில் ஏந்திகொண்டு இன்னொரு அறைக்குள் நுழைந்த வேகத்தில் பொட்டென்று அவனைவீசி எறிந்தான். எறிந்த வேகத்தில் தானும் ஏறி செபாஸ்டியனின் மீது வெறியோடு பாய்ந்தான். அது ஒரு பழைய தேக்குமரகட்டில்.
இருளை போர்வையாய் கொண்டு உடலில் உள்ள துணிகளை ஒவ்வொன்றாக இருவரும் கழட்டி வீச ஒவ்வொன்று திக்குக்கு ஒன்றாய் பறந்தது. காதல் கொண்டவர்கள் கட்டிலில் கிடந்தாலும் காட்டுக்குள் கிடந்தாலும் பாடாய் படுவது என்னவோ இதழ்கள்தான். முருகனின் வஜ்ரம் போன்ற பற்களில் செபாஸ்டியனின் சிவந்த உதடுகள் சிக்கி தவித்து சின்னாபின்னமாய் போய்கொண்டிருக்க மெலிதாக கைகள் அணைக்க கால்கள் பின்ன கோல்கள் உரச காமதேவனின் கோயில் கோபுரத்தின் உச்சிக்கு சென்றனர் இருவரும்.
காட்டுக்குள் மணற்பரப்பில் கிடந்தது இன்பம் துய்த்த பொழுதே காட்டற்று வெள்ளமாய் பொங்கியவர்களுக்கு கட்டில் ஒன்று கிடைக்கும் பொழுது சும்மாவா இருப்பார்கள். இடித்த இடியில் பிடித்த பிடியில் அய்யோ பாவிகளா என்னை விட்டு விடுங்களடா என் கால்கள் நான்கும் முறிந்து விடும் போலிருக்கிறது என்று கரக் மரக் என சப்தமிட்டது அந்த தேக்கு மரக்கட்டில்.
ஒருவழியாக அடித்து பிடித்து ஓய்ந்து போன இருவரது உயிர்நீரும் கண்ட இடத்தில் ஓடி கட்டிலின் மீது விரிக்க பட்டிருந்த மெல்லிய பஞ்சு மெத்தை நனைத்து எங்கு திரும்பினாலும் நசநச என்று பிசுபிசுத்த நேரத்தில் பிரான்ஸ் தேசத்திற்கு செல்லும் பொருட்டு இன்று மதியம் பெயரை பதிந்து கொண்டதாயும் கப்பலில் பயணித்து பிரான்ஸ் தேசத்தை அடைவதையும் அங்கு செபாஸ்டினும் முருகனும் காதல் புறாக்களாக சிறகடிக்க போவதையும் எண்ணி கனவு கொண்டிருந்த அந்த நேரத்தில் வானத்தின் கருமேகங்கள் அனைத்தும் திரண்டு வந்து இடியாய் இடிப்பது போல ஒரு கொட்டு சத்தம் மடார் மடார் என கேட்க்க துவங்கியது.
கோட்டையின் வாயிற்புரத்தில் இருபக்கமும்  ஆளுயர விட்டத்திற்கு அகலமாக இருக்கும் நகரா என்ற முரசு அரையப்பட்ட ஓசைதான் இடிபோல காதுகளில் ஒலிக்கிறது என்பதனை விளங்கிகொள்ள சிறிது நேரம் பிடித்தது முருகனுக்கும் செபாஸ்டினுக்கும்
என்ன இது? இத ஏன் இப்ப அடிக்கிறாங்க எதவது அவசர நிலை ஏற்பட்டத்தான் இதஅடிக்கணும் என்றபடி தத்தமது உடைகளை எடுத்து அணிந்து கொண்டு வாசல் வழியே வெளியேறினர் இருவரும். அந்த இரவு நேரத்தில் நாடகதாலாட்டில் அறிதுயில் கொண்டிருந்த ஆலம்பரை மக்கள்  அலங்கோலமாய் அங்கும் இங்குமாய் சிதறி ஓடிகொண்டிருந்தனர்.
அங்கு சிதறி ஓடும் பெரியவர் ஒருவரை நிறுத்தி என்ன விஷேசம் ஏன் இப்படி எல்லாம் ஓடுறீங்க என்று விசாரித்தான் முருகன்.
அதற்கு அந்த பெரியவர் பீரங்கி துப்பாக்கி வெள்ளபட்டணம் சண்ட சாவு என்ற ஒன்றுகொன்று தொடர்புடைய வார்த்தைகளை பொருந்தாத தாளத்தில் சொல்லியபடி ஓடினார். செபாஸ்டியனும் முருகனும் வேகமாக ஓடி கோட்டை வாசலை அடைந்தனர்.
அங்கு கோட்டை மதிலின் மீது வீரர்கள் அறக்கபறக்க துப்பாக்கிகளை ஏந்தியபடி நிற்க ஒருவன் சத்தமாக ஒரு செய்தி மடலை தமிழில் வாசித்து கொண்டிருந்தான். அதன் சாராம்சம் என்னவென்றால்
நமது ஆலம்பரை கோட்டையை கைப்பற்றும் நோக்கத்துடன் ஆங்கிலேயர்களின் பெரும்படை ஒன்று வெகுவேகமாக நம்மை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. அந்தபடை தற்போது மதராசிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வரை நெருங்கிவிட்டதாக தெரிகிறது அநேகமாக விடியும் நேரத்திற்குள் அவர்கள் நம்மை சுற்றி வளைக்கக்கூடும் என்பதால் கோட்டையை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் உடனடியாக கோட்டைக்குள் வரும்படி அழைக்கபடுகிறார்கள்.
இந்த அறிவிப்பினை அவன் திரும்ப திரும்ப வாசித்து கொண்டிருந்தான்.
பெரும்பாலான அரிசி வண்டிகள் மரக்கானத்து உப்புவண்டிகள் என ஏற்றுமதிக்கு இருந்த பொருட்கள் எல்லாம் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கும் வேளையில் செபாஸ்டியனும் முருகனும் இந்த எதிர்பாராத சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றனர். அந்த நேரத்தில் செபாஸ்டியன் உடனே கோட்டைக்குள் செல்லவில்லை என்றால் துப்பாக்கிக்கு இரையாக நேரிடும் என்று மேலேயிருந்து ஒரு பிரெஞ்சு வீரன் மிரட்டினான்.
அதனை கேட்ட செபாஸ்டியனுக்கு முருகனை விட்டு உள்ளே செல்ல மனம் இடங்கொடுக்க வில்லையாதலால் தவித்து போய்திகைத்து நின்றான் முருகனின் விழிகளை நோக்கி,
அதேநேரம் முருகனை தேடி அங்கும் இங்கும் அலைந்த முருகனின் குடும்பந்தார் அங்குவந்து சேரவே.. அவனை கொட்டைக்குல்செள்ளவேண்டாம் என்றும் சிதம்பரம் போய் இருந்துவிட்டு சில நாட்கள் கழித்து வரலாம் என்றும் அழைத்தனர்.
நான் நிச்சயம் கோட்டைக்குள் செல்ல வேண்டியது கட்டாயம் என்றும், ஆங்கிலேயர்கள் கோட்டையை கைபற்றத்தான் வருகிறார்கள் நமக்கு ஓன்றும் தீங்கு நேராது என்றும் நாளைகாலை வரை பொருத்து இருந்து பாருங்கள் சூழ்நிலைக்கு தக்கபடி யோசித்து சிதம்பரத்திற்கு நடையை காட்டுங்கள் என்வழியை நான் பார்த்து கொள்கிறேன் என்றும் முருகன் தன் குடும்பத்தார்க்கு பதில் கூறி செபாஸ்டியனை கைபிடித்து இழுத்து கொண்டு கோட்டைக்குள் சென்றோடி மறைந்தான்.
கோட்டைக்குள் இருப்பது தான் சிறந்த பாதுகாப்பு என்று எண்ணியவர்கள் கோட்டைக்குள்ளும், வெளியே இருப்பதே சாலசிறந்தது என்றெண்ணியவர்கள் வெளியேறிக்கொண்டும் இருக்க சிறிது நேரத்தில் அனைத்து தளவாடங்களையும் சேர்த்துகொண்டு கோட்டை கதவு படீர் என்று அறைந்து மூடப்பட்டது.
பணியாளர்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க பிரஞ்சு காவலர்கள் போர்புரிய தயாராக கவசஉடைகளை அணிந்து போர்த்தளவாடங்களை தாயர் நிலையில் வைத்து கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம் மாமல்லபுரம் கடந்துவந்த ஆங்கிலேய்ர்கள் பொழுது விடியும் நேரத்தில் ஆலம்பரை கோட்டையினை முற்றுக்கை இட்டிருந்தனர். ஒரு பக்கம் கடல் இருக்க மற்றமூன்று பக்கம் கடல்போன்ற ஆங்கிலேய சேனைகள் பீரங்கிகளுடனும் துப்பக்கிகளுடனும் வாட்கள் குதிரைகள் யானைகளுடனும் பல்லாயிரக்கணக்காய் தாயர் நிலையில் இருந்தனர்.
ஆலம்பரை கோட்டையின் வாழ்நாளில் சிவப்பு சரித்திரமாய் இருக்க போகும் அந்த நாளை ஆவலோடு காண காலைசூரியன் வெளிப்பட்டான்.
ஆங்கிலேய தளபதி ஒருதுணியில் கடிதம் ஓன்றை எழுதி அம்பு அன்றில் கட்டி கோட்டையின் மையத்தை நோக்கி விடச்செய்தான்.

                                          -அடுத்த பதிவில் நிறையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்பு நண்பர்களே.....

கதைகளை படித்து தங்களது மேலான கருத்துக்களை பதிந்து ஊக்க படுத்துங்கள்... உங்களது விமர்சனம் மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்... உங்காளது கருத்துக்களை orinakathal@gmail.com என்ற முகவரிக்கு குறைந்த பச்சம் மின்னஞ்சல் செய்யுங்கள்.. அன்புடன் ராஜ்குட்டி காதலன்..